Vijay TV Baakiyalakshmi Serial Actress Change : விஜய் டிவியின் முக்கிய சீரியல்களில் ஒன்று பாக்கியலட்சுமி. இல்லத்தரசியின் குடும்ப வாழ்க்கை மற்றும் அவரின் போராட்டம் குறித்து நிகழ்வுகளை எடுத்துக்கூறும் இந்த சீரியல் ரசிகர்கள் மத்தியில் பெரும் வரவேற்பை பெற்று வருகிறது. இதில் பாக்கியலட்சுமி என்ற முதன்மை கதாப்பாத்திரத்தில், கே.சி.சுஜித்ரா, அவரது கணவர் கோபியாக சதீஷ் மற்றும் கோபியின் காதலி ராதிகாவாக நந்திதா ஜெனிபர் ஆகியோர் நடித்து வருகின்றனர். இந்த சீரியல் இந்த 3 கதாப்பத்திரத்தை மையமாக கொண்டே கதை வடிவமைக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில், தற்போது திடீர் திருப்பமாக ராதிகாவாக நடித்து வந்த நந்திதா ஜெனிபர் சீரியலில் இருந்து விலகியுள்ளார். இவருக்கு பதிலாக பிக்பாஸ் நிகழ்ச்சியின் மூலம் புகழ்பெற்ற ரேஷ்மா ராதிகா கதாப்பாத்திரத்தில் களமிறங்கியுள்ளார். சன் தொலைக்காட்சியில் நாகவள்ளி தொடரின் மூலம் சின்னத்திரையில் அறிமுகவான ஜெனிபர் அதன்பிறகு புவனேஷ்வரி லட்சுமி ஸ்டோர்ஸ் ஆகிய சீரியலிகளில் நடித்து பிரபலமானார். தொடர்ந்து பல திரைப்படங்களிலும் நடித்துள்ளார். தற்போது சன்டிவியின் ரவுடி பேபி ரியாலிட்டி ஷோவில் போட்டியாளராக கலந்கொண்ட வருகிறார்.
பாக்கியலட்சுமி தொடரில் இவர் நடித்த ராதிகா கதாப்பாத்திரம் ரசிகர்கள் மத்தியில் பெரும் வரவேற்பை பெற்று வரும் நிலையில், தற்போது அவர் திடீரென விலகியுள்தால், ரசிகர்கள் அதிர்ச்சியில் உள்ளனர். இந்நிலையில், ராதிகா கதாப்பாத்திரத்தில் தற்போது இணைந்துள்ள ரேஷ்மா, இவர் வேலைன்னு வந்துட்டா வெள்ளனக்காரன் படத்தில் புஷ்பா என்ற கதாப்பாத்திரத்தில் நடித்து பிரபலமடைந்தார். தற்போது இவர் ஜெனிபர் இடத்தை நிரப்புவாரா என்பது குறித்து பெரும் எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.
தற்போது பாக்கியலட்சுமி சீரியலில நடிகை மாற்றம் குறித்த ப்ரமோ விஜய் டிவி தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வெளியிட்டுள்ளது. இதில் ரசிகர்கள் பலரும் முன்னாள் ராதிகா ஜெனிபருக்கு ஆதரவாக கருத்து தெரிவித்துள்ள வருகிறன்றனர்.
அதில் ஒரு ரசிகர்கள், ‘’நாங்க ராதிகாக்காக தான்டா சீரியல் பாக்குரோம் இப்படி பன்னிட்டீங்களே’’ என்று பதிவிட்டுள்ளார்.
மேலும் ஒரு ரசிகர் வேண்டாம் பழைய ராதிகாவ கொண்டு வாங்க என் பதிவிட்டுள்ளார்.
மற்றொரு ரசிகர் ராதிகாவ ஏன்டா தூக்கினீங்க... அவங்க இல்லாத பாக்யலக்ஷ்மிய பார்க்க முடியாதேடா ஷர்வணா என கூறியள்ளார். தற்போது ரசிகர்களின் இந்த பதிவு இணையத்தில் வைரலாகி வருகிறது.
"தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil