Tamil Serial Baakiyalakshmi Serial Update : விஜய் டிவியில் ஒளிபரப்பாகும் பாக்கியலட்சுமி சீரியல் விறுவிறுப்புக்கு பஞ்சம் இல்லாமல் நாள்தோறும் புதிய திருப்பங்களுடன் பெரும் ஏதிர்பார்ப்பை ஏற்படுத்தி வருகிறது. அந்த வகையில் பாக்கியலட்சுமி சீரியலின் இன்றைய எபிசோட்டில் நடந்தது என்ன என்பது குறித்து சுவாரஸ்யத்துடன் இந்த பதிவில் பார்க்கலாம்.
அப்பா கோபியின் ஒவ்வொரு நடத்தையும் கண்ணும் கருத்துமாக கண்கானிக்கும் எழில், அடிக்கடி அவருடன் வாக்குவாத்த்தில் ஈடுபடுவது வழக்கம். இந்நிலையில், நண்பரை பார்த்துவிட்டு வருகிறேன் என சொல்லிவிட்டு வெளியில் செல்லும் கோபி, ராதிகா வீட்டுக்கு செல்கிறார் அப்போது கோபியை எதிர்பார்த்து காத்துக்கொண்டிருக்கும், ராதிகா ராஜேஷால் தனக்கு நடந்த பிரச்சனையை பற்றி கூறுகிறாள். இதில் கோபி அவளை சமாதானம் செய்யும் நோக்கில், ராதிகாவின் மீது கை வைக்கிறார் அப்போது ஜன்னல் இதனை பார்க்கும் ராஜேஷ், தனது செல்போனில் போட்டோ எடுத்துக்கொள்கிறான்.
கோபி எவ்வளவுதான் சமாதானம் சொன்னாலும், ராதிகா கொஞ்சம் பயத்துடனே இருக்கிறாள். இதனால் வேறு வழியின்றி, கோபி ராதிகாவின் வீட்டிலேயே தங்கி விடுகிறான். இதனையடுத்து கடந்த வாரம் பள்ளியில் நடந்த பிரச்சனைக்கு பிறகு டோட்டலாக மாறிய இனியா அதிகாலையிலேயே எழுந்து வேகமாக படித்துக்கொண்டிருக்கிறாள். அதை பார்த்து ஆச்சரியமடையும் பாக்யா, இது எத்தனை நாளைக்கு என கேட்க, 'இனி இப்படி தான் படிப்பேன்' என இனியா பதில் சொல்கிறாள். இனியாவின் மாற்றத்தை பார்த்து மகிழ்ச்சி பாக்யா அடைகிறாள்
தொடர்ந்து ராதிகாவின் வீட்டில் தூங்கிய கோபி காலையில் எழுந்திருக்கும்போது, அவரை பார்த்து ஆச்சர்யம் அடையும் ராதிகாவின் குழந்தை, இவர் எப்போது வந்தார் என கேள்வி எழுப்புகிறாள்.அதன் பின் ராதிகாவின் வீட்டிலேயே பல் தேய்த்து முகம் கழுவிவிட்டு, காபி குடிவித்துவிட்டு கோபி தனது வீட்டுக்கு வரும்போது அனைவரும் அமர்ந்து காபி குடித்து கொண்டிருக்கின்றனர். அப்போது கோபியை பார்த்து கேள்வி எழுப்பும் எழில், இனி வீட்டில் இருக்கும் யாரும் எங்கே செல்கிறீர்கள் என சொல்லவே வேண்டாம். எப்போது வேண்டுமானாலும் போகலாம், எப்போது வேண்டுமானாலும் வரலாம் என கோபியை குத்து காட்டுகிறார்.
இந்த பேச்சு அப்படியே வாக்குவாதமான மாற கோபி 'இது என் வீடு, என் இஷ்டப்படி தான் இருப்பேன். விருப்பம் இருந்தால் இரு. இல்லை என்றால் கெட் அவுட் என சொல்லிவிடுகிறான். அத்துடன் இன்றைய எபிசோடு முடிவடைகிறது.
"தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil