Tamil Serial Update Baakiyalakshmi Today Episode : சீரியல்களுக்கு பெயர்போன விஜய் டிவியில் ஒளிபரப்பாகும் பாக்கியலட்சுமி சீரியல் கடந்த சில வாரங்களாக ரசிகர்கள் மத்தியில் பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தி வருகிறது. இதில் கடந்த மாத தொடக்கத்தில் இருந்து இனியா பள்ளியில் எக்சாம் எழுதாததும், பள்ளியில் இருந்து சினிமாவிற்கு சென்றதும் பெரிய பிரச்சினையை ஏற்படுத்தியது. அதன்பிறகு பள்ளியில் இருந்து இனியாவுக்கு டிசி கொடுக்கததும், அதன்பிறகு பாக்யலட்சுமி வீட்டில் கோபி நடந்துகொண்ட விதம் எல்லாம் பரபரப்பான திருப்பத்தை ஏற்படுத்தியது.
அதன்பிறகு இனியாவை பள்ளியில் சேர்ப்பதற்காக பாக்கியலட்சுமி பள்ளி பிரின்ஸ்பால் காலில் விழுந்து அனுமதி பெற்றதை தொடர்ந்து இனியாவை பள்ளியில் சேர்ந்துகொள்ள சம்மதம் தெரிவித்துள்ளார். அதனைத் தொடர்ந்து இனியா இன்று முதல் பள்ளிக்கு செல்ல தயாராகி வருகிறார். அப்போது இனிமேலாவது படிப்பில் மட்டும் கவனம் செலுத்து, வேறு எதிலும் உன் கவனம் போகக்கூடாது என்று வீட்டில் இருக்கும் அனைவரும் அவருக்கு அட்வைஸ் செய்கின்றனர்.
அதன்பிறகு இனியாவின் அழைத்து சென்று சாமி கும்பிட வைக்கும் அவரது பாட்டி இனி அது போன்ற தவறுகளை செய்ய வேண்டும் என தோன்றினால் உன் அம்மா பிரின்ஸ்பால் காலில் விழுந்ததை நினைத்துக்கொள் என சொல்கிறார். தொடர்ந்து இனியாவை அழைத்து அட்வைஸ் செய்யும் கோபி, 'எவ்வளவோ நடந்துவிட்டது, நான் அமைதியாக இருந்தேன். ஆனால் எப்போதும் அமைதியாக இருக்க மாட்டேன். உன்னுடைய கவனம் படிப்பதில் மட்டும் தான் இருக்க வேண்டும். போர்டு எக்ஸாமில் நல்ல மார்க் எடுத்தால் நீ என கேட்டாலும் நான் வாங்கி கொடுக்கிறே'ன் என சொல்கிறார்.
நீ பள்ளிக்கு சென்றால் எல்லோரும் இதை பற்றி தான் கேட்பார்கள். நீ அதை கண்டுகொள்ளாதே. அமைதியாகவே இரு என அவரது தாத்தாவும் இனியாவுக்கு அட்வைஸ் செய்கிறார். இதனையடுத்து தனது மசாலா பிசினெஸ் இப்படி ஆகிவிட்டதே என வருத்தத்தில் இருக்கும் பாக்கியவிடம், கான்வென்டுக்கு கொடுக்க வேண்டிய மசாலாவை இன்னும் கொடுக்கவில்லையே என ஜெனி நியாபகப்படுத்துகிறார். இதனால் என்ன செய்வதென்று தெரியவில்லை என குழப்பத்தில் இருக்கிறார் பாக்யா.
அந்த நேரத்தில் பாக்யாவை கான வரும் அவரது அம்மா, நீ போன மாதம் பணம் கொடுத்ததால், தம்பி மனைவி நன்றாக நடத்தினார், இனி நீ பணம் கொடுக்க மாட்டாய் என தெரிந்தால் அவ்வளவுதான் என கூறி சொல்கிறார். இதனையடுத்து பள்ளிக்கு செல்லும் இனியா மற்ற தோழிகளுடன் பேசி கொண்டிருக்கும்போது, இனியாவை எப்படி மீண்டும் பள்ளியில் சேர்த்துக்கொண்டார்கள் என்பதை அவர்கள் ஆச்சர்யத்துடன் கேட்டனர். அம்மா தான் பேசி சேர்த்துவிட்டார் என சொல்கிறார். இனியாவுடன் படத்திற்கு சென்ற மற்றொரு பெண்ணை டிசி கொடுத்து அனுப்பிவிட்டு நிலையில், அவர் திரும்பி வரவே இல்லை என வருத்தத்துடன் பேசிக்கொண்டிருக்கிறார்கள்.
ஆனால் 'அவன் பெற்றோர் பெரிய பதவியில் இருக்கிறார்கள் என்பதால், அவனுக்கு மட்டும் டிசி கொடுக்கவே இல்லை' என சொல்கின்றனர் மற்ற தோழிகள். அந்த நேரத்தில், அங்கு வரும் சந்தோஷ் வந்து இனியாவிடம் பேசுகிறார், ஆனால் இனியா கண்டுகொள்ளாமல் அங்கிருந்து கிளம்பி சென்றுவிடுகிறார்.இத்துடன் இன்றைய எபிசோடு நிறைவுபெறுகிறது.
"தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil