விஜய்டிவியின் பாக்கியலட்சுமி சீரியல் தற்போது விறுவிறுப்பாக சென்று கொண்டிருக்கிறது. இதில் கடந்த வாரம் ராதிகாவை சந்திக்க வேண்டாம் என்று முடிவு செய்த கோபி, அடுத்த சில நாட்களில் மீண்டும் அவருடன் பேசி குடும்பமே எதிர்த்தாலும் உன்னை விட்டு செல்லமாட்டேன் என்று கூறியதும், அதன்பிறகு கடன் பணத்தை கொடுக்க ராதிகா வீட்டிற்கு சென்ற பாக்யா, ராதிகாவின் சூழ்நிலையை அறிந்து அவரது குழந்தையை தனது வீட்டிற்கு அழைத்து சென்றதும் பரபரப்பான திருப்பமாக இருந்தது.
இதனால் கோபி தனது குடும்பத்தினரிடம் மாடுவாரா என்ற எதிர்பார்பு ரசிகர்கள் மத்தியில் தொற்றிக்கொண்ட நிலையில், இன்றைய எபிசோட்டில், எழில் அவரது அலுவலகத்தில் தனது துணை இயக்குனர்களிடம் விவாதித்துக் கொண்டே இருக்கிறார். அதில் ஒரு விதவைப்பெண் ரொமான்ஸ் செய்வதுதான் கதை என்று எழில் சொல்ல மற்றவர்கள் ஆனால் இதை ஒப்புக்கொள்ளாத மற்றவர்கள், விதவைப் பெண் லவ் செய்தால் மக்கள் ஒப்புக் கொள்வார்களா என கேள்வி எழுப்புகிறார்கள்.
அந்த நேரத்தில் உள்ளே வரும் அமிர்தாவிடம் கதை சொல்ல அவர் தயக்கத்துடன்’ஓகே’ என சொல்கிறார். (நிஜ வித்தையான அமிர்தா எழில் உடன் நெருங்கி பழகி வருகிறார்) இதற்கிடையே பாக்யா வீட்டிற்கு வரும் ராதிகாவின் மகள் மயூராவை ராதிகாவின் மகள் என தெரிந்த பிறகு, அழைத்து அன்பாக மாமனார் மாமியார் அன்பாக பேசுகிறார்கள். ஏன் அழைத்து வந்திருக்கிறாய் என்பது பற்றிய விவரங்களைக் கேட்கிறார்கள். ராதிகாவுக்கு இருக்கும் பிரச்சனையை பற்றி பாக்யா சொல்கிறார்.
அப்போது மதியம் சாப்பிடுவதற்காக வீட்டிற்கு வீட்டிற்கு வரும் கோபி ராதிகாவின் மகள் இங்கு இருப்பதை பார்த்து கடும் அதிர்ச்சி அடைகிறார். இதனால் தனக்கு சாப்பாடே வேண்டாம் என தன் அறைக்கு செல்லும் கோபி ராதிகாவுக்கு ஃபோன் செய்கிறார் கோபி. அவரிடம் மயூ எங்கே என கேட்க ராதிகா தன்னுடைய தோழி வீட்டுக்கு அனுப்பி விட்டதாக கூறுகிறார்.
’இது என்ன முட்டாள்தனம், யாரென்று தெரியாதவர் வீட்டிற்கு அக்கறையில்லாமல் அனுப்பி விடுவாயா’ என கூறுகிறார். இதனால் கோபமான ராதிகா ’உங்களுக்கு இருக்கும் அக்கறை எனக்கு இருக்காதா. எங்கு அனுப்பவேண்டும் என எனக்கு தெரியும். அவள் பாதுகாப்பாக தான் இருப்பாள்' என போனை வைத்து விடுகிறாள்
அதன் பின் கீழே இறங்கி வரும் கோபி, பாக்கியாவிடம் 'குழந்தை என்ன சொன்னாள்' என கேட்க அந்த நேரத்திலும் எழில் சந்தேகத்துடன் ஓரக்கண்ணால் பார்க்க கோபி என்ன செய்வதென்று தெரியாமல் விழித்துக் கொண்டிருக்கிறார். இத்துடன் இன்றைய எபிசோடு நிறைவுபெற்றது.
"தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil