/tamil-ie/media/media_files/uploads/2021/04/Baakiyalakshmi.jpg)
Tamil Serial Update Baakiyalakshmi Vs Pandian Stores : பாக்கியலட்சுமி சீரியல் பற்றி ஒரு மீமை பகிர்ந்து இருக்கும் அந்த சீரியலில் ஹீரோ பாண்டியன் ஸ்டோர்ஸ் சீரியலை கலாய்த்து இருக்கிறார்.
சின்னத்திரையில் விஜய் டிவியில் ஒளிபரப்பாகும் சீரியல்களுக்கு மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பு இருந்து வருகிறது. இதில் பிரைம் டைமில் ஒளிபரப்பாகும் பாக்யலட்சுமி சீரியல் டிஆர்பி ரேட்டிங்கில் முதல் 5 இடங்களில் இருந்து வருகிறது. தொடக்கத்தில் வரவேற்பு இல்லாத இந்த சீரியல், தற்போது நாளுக்கு நாள் புதிய திருப்பங்களுடன் மக்கள் மத்தியில் சிறப்பான வரவேற்பை பெற்று வருகிறது. குடும்ப தலைவியான பாக்யலட்சுமி தனது குடும்பத்திற்கு வரும் பிரச்சினைகளை எவ்வாறு எதிர்கொள்கிறார் என்பதே இந்த சீரியலின் மையக்கருத்து.
இதில் நாயகியின் கணவராக வரும் கோபி கதாப்பாத்திரம் மூலம் வரும் பிரச்சினைகளை பாக்யலட்சுமி சாதுர்யமாக எதிர்கொண்டு வருகிறார். இதன் காரணமாகவே இல்லாத்தரசிகள் இந்த சீரியலை அதிகம் கண்டுகளிக்கின்றனர். ஆனால் சீரியல்கள் குறித்து ரசிகர்கள் பலர் மீம்ஸ் கிரியேட் செய்து இணையத்தில் பதிவிட்டு கலாய்த்து வருகின்றனர். அந்த வகையில், பாக்கியலட்சுமி குடும்பத்தை பற்றியும் மீம்கள் இணையத்தில் வைரலாகி வருகிறது. இதில் ஒரு மீமை கோபி கதாப்பாத்திரத்தில் நடித்து வரும் சதீஷ், தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பகிர்ந்து இருக்கிறார்.
வீடியோ மீமை பகிர்ந்து அவர் தனது பதிவில்,
நல்லதொரு குடும்பம், பல்கலை கழகம், ஒன்னொன்னும் ஒரு தினுசா இருக்கு. இது தான் வேணும். 1000 என்ன 2000 எபிசோடுகள் ரீச் பண்ணலாம். ஒரு பாத்ரூம் வெச்சி 300 எபிசோடுகள் பாண்டியன் ஸ்டோர்ஸ் டீம் ஓட்டுனாங்க. நாங்கென்ன லேசு பட்டவங்களா. கோபி ராதிகா வெச்சி அடுத்த 10 வருஷம் ஓட்டுவோம் என கோபி பதிவிட்டுள்ளார்.
"தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.