சீரியலுக்கும் வந்துட்டாங்களா ஷிவாங்கி- பாலா? விஜய் டிவி புது அப்டேட்

Tamil Serial Update : குக் வித் கோமாளி நிகழ்ச்சியில் புகழ் பெற்ற சிவாங்கி தற்போது சீரியலில் நடிக்க உள்ளதாக கூறப்படுகிறது.

Tamil Serial Update Cook With Comali Shivangi In Serial : குக் வித் கோமாளி நிகழ்ச்சியில் கோமாளியாக கலக்கி வரும் சிவாங்கி விஜய் டிவி சீரியலில் நடிக்க உள்ளதாக கூறப்படுகிறது.

விஜய் டிவியில் சூப்பர் சிங்கர் நிகழ்ச்சியில் தனது இனிமையான குரலில் பாடி ரசிகர்கள் மனதில் நீங்கா இடம் பிடித்தவர் சிவாங்கி. அதனைத் தொடர்ந்து தற்போது விஜய் டிவியின் ஹிட்ரியாலிட்டி ஷோவான குக் வித் கோமாளி நிகழ்ச்சியில் கோமாளியாக வந்து கலக்கி வருகிறார். இதே நிகழ்ச்சியில், பாலா, புகழ், மணிமேகலை என பலர் செய்யும் சேட்டைகள் ரசிகர்கள் மத்தியில் பெரும் வரவேற்பை பெற்றுள்ளது. தற்போது இந்த ஷோ இறுதிகட்டத்தை எட்டியுள்ளது.

ரியாலிட்டி ஷோ மட்டுமல்லாது விஜய் டிவியில் ஒளிபரப்பாகும் சீரியல்களுக்கும் ஏகப்பட்ட ரசிகர்கள் உள்ளனர். இதில் பிரைம் டைமில் ஒளிபரப்பாகும் பாரதி கண்ணம்மா மற்றும் ராஜாராணி சீரியல்கள் அதிக வரவேற்பை பெற்று வருகிறது. தற்போது இந்த இரண்டு சீரியல்களும் இணைத்து ஒளிபரப்பாகி வருகிறது. கடந்த ஒருவாரமாக ஒளிபரப்பாகும் இந்த மகாசங்கமத்தில் பிக்பாஸ் போட்டியாளர்கள் சிறப்பு விருந்தினர்களாக கலந்துகொண்டு சிறப்பித்து வருகின்றனர்.

அந்த வகையில் தற்போது குக் வித் கோமாளி நிகழ்ச்சியில் கோமாளிகளாக வரும் பாலா, ஷிவாங்கி மற்றும் சுரேஷ் சக்ரவர்த்தி ஆகியோர் சிறப்பு விருந்தினர்களாக கலந்துகொள்ள உள்ளனர். இதனை உறுதிப்படுத்தும் விதமாக இவர்கள் ராஜா ராணி மற்றும் பாரதிகண்ணம்மா சிரியல் குழுவுடன் இணைந்து எடுத்துக்கொண்ட புகைப்படம் இணையத்தில் வெளியாகி உள்ளது.

“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற  t.me/ietamil” 

Web Title: Tamil serial update bharathi kannamma and rajarani serial mahasangamam

Next Story
நெருக்கம் பழசு… மோதிரம் புதுசு! அப்போ நயன்- விக்கி நிச்சயதார்த்தம் முடிந்ததா?Nayanthara Vignesh Shivan got engaged Viral Photos in Social Media Tamil News
The moderation of comments is automated and not cleared manually by tamil.indianexpress.com