‘உன் அப்பா பேரு பாரதி..!’ உண்மையை உடைத்த கண்ணம்மா

Tamil Serial Update : மக்கள் மத்தியில் பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ள பாரதி கண்ணம்மா சீரியலில் இன்றை எபிசோடு குறித்து பார்க்கலாம்

Tamil Serial Update Bharathi Kannamma Serial Today Episode : சின்னத்திரையில் ஒளிபரப்பாகி வரும் பாரதி கண்ணம்மா சீரியல் நாளுக்கு நாள் பரபரப்பான திருப்பங்களுடன் பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தி வருகிறது. கடந்த இரண்டு வாரங்களாக ராஜா ராணி சீரியலுடன் இணைந்து மகாசங்கமமாக ஒளிபரப்பாகி வந்த நிலையில், தற்போது மகாசங்கமம் நிறைவடைந்து இரண்டு சீரியல்களும் தனித்தனியாக ஒளிபரப்பாகி வருகிறது. அந்த வகையில் தற்போது பாரதி கண்ணம்மா சீரியலில் இன்றை எபிசோடு பற்றி பார்க்கலாம்.

மகள் லட்சுமியுடன் கோவிலுக்கு வரும் கண்ணம்மா, சாமி தரிசனம் முடிந்து வீடு திரும்பும்போது வெண்பா வீட்டில் வேலைசெய்பவளை பார்க்கிறார். அதன்பிறகு லட்சுமியை ஆட்டோவிற்கு அனுப்பிவிட்டு, அவளிடம் பேசும் கண்ணம்மா, பாரதி, வெண்பா பெயருக்கு பூஜை பண்ணும் என்று சொல்லும் அவளை ஓங்கி அறைகிறாள் கண்ணம்மா. இதை எதிர்பார்க்காத வேலைக்கார பெண், என்மேலேயே கை வச்சுட்டியா, வெண்பா மேடத்துகிட்ட சொன்ன என்ன ஆகும் தெரியுமா என கேட்கிறாள்

இதனால் கோபமடையும் கண்ணம்மா மீண்டும் அவளை அறைந்துவிட்டு நீ வெண்பான்னு சொல்ற ஒவ்வொரு தடவையும் உனக்கு அறை விழுகும், ‘போ இதையும் போய் வெண்பா கிட்ட சொல்லு’ என சொல்லிவிட்டு அங்கிருந்து புறப்படுகிறாள்.  இதற்கிடையில் ஹேமாவை அழைத்து கொண்டு ஸ்கூலுக்கு பரும் பாரதிக்கு வெண்பா போன் செய்கிறாள். அதை அட்டன் பன்னும் பாரதி, ஹேமாவை அழைத்துக்கொண்டு ஸ்கூலுக்கு வந்திருப்பதாகவும், லட்சுமிக்கு பீஸ் கட்ட போவதாகவும் சொல்கிறான்.

தொடர்ந்து பாரதி இருக்கும் இடத்திற்கு வரும் வெண்பா இந்த பொண்ணுக்கு பீஸ் கட்ட நீ நேர்ல வரணுமா? இந்த சிட்டியிலே நீதான் லீடிங் டாக்டர், உன்னோட அப்பாய்ன்மென்ட் ஆர்டருக்காக எத்தனை பேர் வெயிட் பன்றாங்கா தெரியுமா என சொல்கிறாள். அப்போது லட்சுமியும், கண்ணம்மாவும் ஆட்டோவில் ஸ்கூலுக்கு வருகின்றனர். இதில் வெண்பாவுக்கு பதில் கூறும் பாரதி, மனசுக்கு பிடிச்ச வேலையை வெயிட் பண்ணி செய்றதுல தப்பு இல்லை, ‘நீ வேணா கிளம்பு நான் எல்லாம் முடிச்சிட்டு வர்றேன்’ என பாரதி சொல்கிறாள்.

அப்போது பாரதியை பார்க்கும் கண்ணம்மா, லட்சுமியை கிளாஸ்க்கு போக சொல்லிவிட்டு கிளம்புகிறாள். அதன்பிறகு பாரதியை பார்க்கும் லட்சுமி, வந்து பேச, உனக்காக தான் நாங்க ரெண்டு பேரும் இவ்வளவு நேரம் வெயிட் பண்றோம் என பாரதி லட்சுமியிடம் சொல்கிறான். இதன்பிறகு அட்மிஷன் போடுவதற்காக அவளை அழைத்து கொண்டு ஆபிஸ் ரூமிற்கு செல்கிறான். அட்மிஷன் பார்மில் அப்பா பெயரை பூர்த்தி செய்வதற்காக பாரதி பெயரை கேட்கிறான், ஆனால் லட்சுமி பெயர் தெரியாமல் அமைதியாக நிற்கிறாள்.

இதையெல்லாம் மறைந்திருந்து பார்க்கும் கண்ணம்மா, தன் மனதிற்குள், ‘அவர் தான்மா உன் அப்பா, எந்த பொண்ணுக்கும் என்னோட நிலைமை வரக்கூடாது’ என்று நினைத்து அழுகிறாள். அதன்பிறகு பாரதி உன் அம்மாவிற்கு போன் பண்ணி, நல்லா திட்டு அதற்கு அப்புறம் உன் அப்பா பெயர் என்னான்னு நீயே கேளு என சொல்கிறான். அவன் சொன்னபடியே கண்ணம்மாவுக்கு போன் செய்யும் லட்சுமி, ‘என் அப்பா பெயர் என்ன அம்மா’ என கேட்கிறாள்.

நான் இப்ப என்ன பண்றது, இத்தனை நாள் எந்த கேள்வி என்னை நோக்கி வரக்கூடாதுன்னு நினைச்சேனோ, அந்த கேள்வி என்னை நோக்கி வருது. என் பொண்ணுகிட்ட நான் பொய் சொல்ல மாட்டேன் என மனதிற்குள் நினைக்கும் கண்ணம்மா, ‘உன் அப்பா பேரு பாரதி’ என சொல்லி போனை கட் பண்ணுகிறாள். அதன்பிறகு பாரதியிடம் வரும் லட்சுமி தன்னுடைய அப்பா பெயர் பாரதி என கூறுகிறாள். இதை கேட்டு பாரதி அதிர்ச்சி அடைகிறான் அத்துடன் இன்றை எபிசோடு முடிவுக்கு வருகிறது.

“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil

Get the latest Tamil news and Entertainment news here. You can also read all the Entertainment news by following us on Twitter, Facebook and Telegram.

Web Title: Tamil serial update bharathi kannamma serial today episode

Next Story
தமிழ் ட்ரெய்லரில் தூக்கப்பட்ட தலைவியின் இந்த “சீன்”… யாரெல்லாம் கவனித்தீர்கள்?Kangana Ranaut-starrer Thalaivi’s Hindi and Tamil trailers have this one major difference, watch videos
The moderation of comments is automated and not cleared manually by tamil.indianexpress.com