Advertisment

கண்ணம்மா வீட்டுக்கு வரும் டி.என்.ஏ ரிப்போர்ட்... அதிர்ச்சியில் வெண்பா!

Tamil Serial Update : வீட்டிற்கு கிளம்பும் லட்சுமி, ஸ்கூல் பேக்கை எடுக்கும் போது, தவறுதலாக கண்ணம்மாவின் மெடிக்கல் ரிப்போர்ட்டையும் எடுத்து வைத்து விடுகிறாள்.

author-image
WebDesk
Apr 15, 2021 16:27 IST
கண்ணம்மா வீட்டுக்கு வரும் டி.என்.ஏ ரிப்போர்ட்... அதிர்ச்சியில் வெண்பா!

Bharathi Kannamma Serial Today Episode : விஜய் டிவியின் பாரதி கண்ணம்மா சீரியல் தற்போது விறுவிறுப்பான கட்டத்தை எட்டியுள்ள நிலையில், இன்றைய எபிசோட்டில் என்ன நடந்த்து என்பதை சுவாரஸ்யத்துடன் இந்த பதிவில் பார்க்கலாம்.

Advertisment

சௌந்தர்யாவின் வீட்டில் இருக்கும் லட்சுமி ஹேமா மற்றும் பாரதியுடன், ஜாலியாக விளையாடிக் கொண்டிருக்கிறாள். அப்போது அங்கு வரும் சௌவுந்தர்யாவிடம், 'என்னை ஒரு நிமிஷம் கூட ரெண்டு பேரும் சும்மா இருக்க விட மாட்றாங்க அம்மா' என பாரதி சொல்கிறான். அதற்கு சௌவுந்தர்யா, இருக்காத பின்ன நீயும் அகிலும் பண்ணாத சேட்டையா இவுங்க பண்ண போறாங்க, என சொல்கிறாள் . அதன்பிறகு பாரதி குழந்தைகள் சாப்பிட பழம் கொடுக்கிறான்.

அவர்கள் இருவரும் பழங்கள் சாப்பிடும்போது லட்சுமியை கூப்பிட குமார் வருகிறார். ஆனால லட்சுமி, நான் கொஞ்ச நேரம் இருந்துட்டு வர்றேன் நீங்க அம்மாகிட்ட சொல்லுங்க என சொல்கிறாள். அதிலும் சௌந்தர்யாவும் சாயங்காலம் போல கூட்டிட்டு போங்க என சொல்கிறாள். ஆனால் குமார் 'இல்லை பாப்பா நீ சொல்லாம வந்ததால அம்மா ரொம்ப கோபத்துல இருக்காங்க' என சொல்லும்போது இனிமே சொல்லாம வர்ற கூடாதும்மா, இப்போ பார்த்து போய்ட்டு வா என பாரதி  சொல்கிறான். இதனால் வீட்டிற்கு கிளம்பும் லட்சுமி,  ஸ்கூல் பேக்கை எடுக்கும் போது, தவறுதலாக கண்ணம்மாவின் மெடிக்கல் ரிப்போர்ட்டையும்  எடுத்து வைத்து விடுகிறாள்.



அதன்பிறகு பாரதி வீட்டிற்கு வரும் வெண்பா, லட்சுமியை பார்த்து பார்த்து கோபமடைகிறாள். எப்படியாவது பாரதி கிட்ட சொல்லி இதுக்கு ஒரு முடிவு கட்டனும், இல்லன்னா இவளை வைச்சு இந்த சௌந்தர்யா, கண்ணம்மாவை வீட்டுக்கு கூட்டிட்டு வந்துருவாங்க என நினைக்கிறாள். அதன்பிறகு வெண்பா பாரதியிடம், என்னோட மெடிக்கல் ரிப்போர்ட் கிடைச்சுருச்சுன்னு மெசேஜ் பண்ணாங்க, அதான் வந்தேன் என சொல்கிறாள். ஆனால் சௌந்தர்யா ரிப்போர்ட்டை வைத்த இடத்தில் இல்லை என்று கூறுகிறாள்.

இதனால் கோபப்படும் வெண்பா, ஹேமா தவறுதலாக ரிப்போர்ட்டை மாற்றி லட்சுமி பேக்கில் வைத்தது தெரிஞ்சு திட்டுகிறாள். அப்போது பாரதி, எதுக்கு இப்ப குழந்தைய திட்டிட்டு இருக்க, நாளைக்கு ஸ்கூல்ல ஹேமா, லட்சுமிகிட்ட இருக்க ரிப்போர்ட்டை வாங்கி தருவா, அமைதியா இரு என சொல்கிறான். ஆனாலும் அமையாகாத  வெண்பா, எப்படியாவது ரிப்போர்ட்டை எடுக்க வேண்டும் என்ற முடிவோடு காரில் புறப்டுகிறார்.

இதற்கிடையே வீட்டிற்கு வரும் லட்சுமி கண்ணம்மாவிடம் என்மேல ரொம்ப கோவமா இருக்கியா அம்மா என கேட்கும் போது, 'நான் யாரும்மா உன்னை திட்ட, நீதான் பெரிய மனுஷி ஆகிட்டியே' என கண்ணம்மா சொல்கிறாள் . நான் படிக்க தான போனேன் என லட்சுமி சொல்கிறாள். இதை கேட்டு கோபப்படும் கண்ணம்மா வாயை மூடுடி, அம்மா தனியா கஷ்டப்படுறேன்னு கொஞ்சமாவது அக்கறை இருக்கா என கத்துகிறாள். அப்போது லட்சுமி, ஏன்மா என்னை திட்டிட்டே இருக்கே, ஹேமா வீட்ல எல்லாரும் என்மேல எவ்வளவு பாசமா இருந்தாங்க தெரியுமா. ஹேமாவோட அப்பா என்கூடயும் சேர்ந்து விளையாண்டாரு தெரியுமா? 'என் அப்பா என்கூட இருந்தாலும், இப்படிதான விளையாடுவாரு' ஆனா நீ மட்டும் என்னை எப்ப பார்த்தாலும் திட்டிட்டே இருக்க என சொல்கிறாள்.



அதன்பிறகு அமைதியாகும் கண்ணம்மா  லட்சுமியை சமாதானம் செய்யும் நோக்கில், இனிமேல் நான் உன்ன திட்ட மாட்டேன் என சொல்கிறாள். இதற்கிடையில் சாந்தியிடம் பேசும் வெண்பா, கண்ணம்மா வீட்டில் இருக்கும் டிஎன்ஏ டெஸ்ட் ரிப்போர்ட் பற்றி  சொல்கிறாள். எப்படியாவது அந்த ரிப்போர்ட்டை எடுத்துருங்க அம்மா, இதுக்காக தான் இவ்வளவு கஷ்டப்பட்டிங்க என சாந்தி சொல்கிறாள். இத்துடன் இன்றைய எபிசோட் நிறைவடைகிறது.

"தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil

#Bharathi Kannamma Serial #Tamil Serial Update
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment