Vijay TV Serial: ‘ஏன் வெண்பாவை மருமகளா ஏத்துக்கிட்டாங்க’ குமுறி அழும் கண்ணம்மா

Tamil Serial Update : என்மேல அக்கறை இருந்தா, தன்னோட மகன் இரண்டாவது கல்யாணம் பண்ணதை எதுக்கு சம்மதிச்சாங்க, வெண்பாவையும் மருமகளாய் ஏன் ஏத்துகிட்டாங்க

Bharathi Kannamma Serial Episode : விஜய் டிவியின் பாரதி கண்ணம்மா சீரியல் மக்கள் மத்தியில் பெரும் வரவேற்பை பெற்றுள்ள நிலையில், நாள்தோறும் புதிய திருப்பங்களுடன் ஒளிபரப்பாகி வருகிறது.  அந்த வகையில், பாரதி கண்ணம்மா சீரியலில் இன்றைய  எபிசோட்டில் என்ன நடந்தது என்பதை இந்த பதிவில் காணலாம்.

சௌந்தர்யாவிடம் பேசும் பாரதி, எனக்கும், வெண்பாவுக்கும் கல்யாணம் ஆகிருச்சுன்னு கண்ணம்மாவிடம் நானா பொய் சொல்லல.., அவளாக நெனச்சிட்டு இருக்கா,  நானும் அத அப்படியே விட்டுட்டேன் என்று சொல்கிறான்.  இதை கேட்ட அகில், இவ்வளவு நாளா ஒரு பொய்யை நம்பிட்டு இருந்த, இப்ப நீயே பொய் சொல்ல ஆரம்பிச்சுட்டா, ஏன்டா என என கேட்கும்போது, தயவு செஞ்சு அவளை மறுபடியும் வீட்டுக்கு கூட்டிட்டு வர நினைக்காதீங்க, என் வாழ்க்கைல நான் மறக்க நினைக்குற ஒரு விஷயம் அவளோட இருந்த நாட்கள் என பாரதி சொல்கிறான்.

ஆனால் இதை விடாத சௌந்தர்யா, ஒரு பொய்யை நம்பி உன்னோட வாழ்க்கையை தொலைச்சுட்ட, ஆனா நான் நினைச்சா கண்ணம்மாவையும், என் பேத்தியையும் வீட்டிக்கு கூட்டிட்டு வருவேன். அதை யாராலையும் தடுக்க முடியாது. ஆனாலும் யாரையும் கட்டாயப்படுத்தி ஒன்னா இருக்க வைக்க முடியாதுன்னு எனக்கு தெரியும் என்று சொல்கிறாள். மேலும் இப்பவே போய் உனக்கு ரெண்டாவது கல்யாணம் ஆகலன்னு கண்ணம்மா கிட்ட சொல்ல போறேன் என சொல்கிறாள்.

ஆனால் இதை கேட்டு ஆத்திரமடையும் பாரதி, நீங்க அவகிட்ட உண்மையை சொன்னா, நீங்க திரும்பி வீட்டுக்கு வரும்போது, நிஜமாவே நான் வெண்பா கழுத்துல தாலி கட்டி உங்க முன்னாடி வந்து நிப்பேன் என சொல்லிவிட்டு செல்கிறான். இதனால் சௌந்தர்யா அதிர்ச்சியடைகிறாள். இதனிடையே வீட்டில் இருக்கும் கண்ணம்மா, நான் உண்டு என் வாழ்க்கை உண்டுன்னு ஒதுங்கி இருக்கும் போது என்னை ஏன் மறுபடியும் தொந்தரவு பண்றாங்க என பாரதியோடு இருந்த தன்னோட பழைய நாட்களை நினைத்து அழுது கொண்டிருக்கிறாள்.

மேலும் என்மேல அக்கறை இருந்தா, தன்னோட மகன் இரண்டாவது கல்யாணம் பண்ணதை எதுக்கு சம்மதிச்சாங்க, வெண்பாவையும் மருமகளாய் ஏன் ஏத்துகிட்டாங்க என தனக்குள்ளே பேசி கொள்கிறாள். என்னைக்காவது ஒருநாள் நீதான் அவளோட  அப்பானு என் பிள்ளைகிட்ட சொல்லலாம்னு நினைச்சேன். ஆனா எப்ப நீ என்கிட்டயே திமிரா வந்து எனக்கு கல்யாணம் முடிஞ்சிருச்சுன்னு சென்னியோ அப்பவே புரிஞ்சு போச்சு, எப்பவும் நீ அவளை மகளா ஏத்துக்க மாட்டான்னு என சொல்லி கண்ணம்மா அழுது கொண்டிருக்கிறாள்.

அப்போது உள்ளே வரும் லட்சுமி, ஏன் அம்மா அழுகுற என கேட்கிறாள். அதெல்லாம் ஒன்னும் இல்லை என கூறும் கண்ணம்மா நீ சாப்பிடுறியா என கேட்கும் போது, உன் முகத்தை பார்த்தா எனக்கு தெரியாதா. அப்பா வரலைன்னு அழுகுறியா? இனிமேல் நான் அப்பா பற்றி உன்கிட்ட கேட்க மாட்டேன்மா என சொல்கிறாள். இதனால் மீண்டும் அழும் கண்ணம்மா, லட்சுமியை அணைத்து கொள்கிறாள்.

அடுத்து டிஎன்ஏ ரிப்போர்ட் கிடைத்ததை பற்றி வெண்பா, சந்தியாவுடன் பேசிக்கொண்டிருக்கும்போது, போன் பண்ணும் பாரதி, நடந்த விஷயங்களை எல்லாம், செல்லிட்டு இனிமேல், இந்த மாதிரி பண்ணா உன்னை கல்யாணம் பண்ணிட்டு வந்து நிப்பேன்னு சொல்லிருக்கேன் என பாரதி சொல்கிறான். இதை கேட்டு சந்தோஷப்படும், வெண்பா, சாந்தியிம் கூறுகிறாள். அதன்பிறகு இருவரும் பேசி கொள்வதை பார்த்து, இவளை ஏதாவது பண்ணனுமே என யோசிக்கும் துர்கா கோவிலுக்கு கிளம்பும் வெண்பாவை கடத்துகிறான். இத்துடன் இன்றைய எபிசோட் நிறைவடைகிறது.

“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil

Get the latest Tamil news and Entertainment news here. You can also read all the Entertainment news by following us on Twitter, Facebook and Telegram.

Web Title: Tamil serial update bharathi kannamma serial today episode

Next Story
‘கிரேட் வொர்க் அத்வைத்..!’ ரஜினி ஆடியோ மெஸேஜ்; நெகிழ்ந்த கேரள சிறுவன்Rajinikanth, Rajinikanth wishes Kerala Boy Advaidh, நடிகர் ரஜினிகாந்த், ரஜினி, சூப்பர் ஸ்டார், little boy Advaidh creates Rubiks Cube mosaic, ரூபிக்ஸ் க்யூப் மொசைக், க்யூப்ஸ் படம், கேரள சிறுவன் வரைந்த க்யூப்ஸ் ரஜினி புகைப்படம், வைரல் வீடியோ, rubiks cube mosaic portrait of Rajinikanth, viral video, rajinikanth wishes audio
The moderation of comments is automated and not cleared manually by tamil.indianexpress.com