Bharathi Kannamma Serial Today Episode : விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வரும் பாரதி கண்ணம்மா சீரியல் நாளுக்கு நாள் பரபரப்பான திருப்பங்களுடன் ஒளிபரப்பாகி வருகிறது. இதனால் நாளுக்கு நாள் இந்த சீரியல் மீதான எதிர்பார்பு எகிறி வரும் நிலையில், இன்றைய எபிசோட்டில் என்ன நடந்தது என்று சுவாரஸ்யம் குறையாமல் இந்த பதிவில் பார்க்கலாம்.
வெண்பா வீட்டிற்கு வரும் பாரதியிடம், நீங்கள் கண்ட நேரத்தில் இங்க வருவரத பார்த்து நாலுபேர் நாலு விதமாகபேசுகிறார்கள் என்று சாந்தி கூறுகிறாள். அப்போது வெண்பா அவளை தடுக்கும் போது, சாரி வெண்பா அவுங்க சொல்றது உண்மை தான். இனிமேல் இப்படி நடக்காது சாரி என சொல்லிவிட்டு பாரதி செல்கிறான். அதன்பிறகு இன்னைக்கு ரெண்டுல ஒரு முடிவு தெரிஞ்சிரும் நீங்க கவலைபடாம இருங்கம்மா என சாந்தி வெண்பாவிடம் சொல்கிறாள்.
இதனையடுத்து கண்ணம்மா, லட்சுமி தான்னுடைய அப்பாவை பற்றி சொன்னவற்றை எல்லாம் நினைத்து பார்த்துக்கொண்டு, லட்சுமிக்கு சாப்பாடு ஊட்டி கொண்டிருக்கிறாள் அப்போது லட்சுமி நான் அப்பாவை பற்றி பேசுனதுக்கு நீ ஏன் என்னை அடிக்கலை, திட்டல என கண்ணம்மாவிடம் கேட்கிறாள். தொடர்ந்து லட்சுமி கேட்கும் எந்த கேள்விக்கும் கண்ணம்மா பதில் சொல்லாமல் அமைதியாக இருக்கிறாள் கண்ணம்மா.
அதன்பின்னர் லட்சுமி புத்தகங்கள் நடுவில் இருக்கும் வெண்பா ரிப்போர்ட்டை பார்த்து கோபப்படும் கண்ணம்மா, என் வாழ்க்கை நாசமா போனதுக்கு காரணமே இவள் தான், இவ பேர் கூட இந்த வீட்ல இருக்க கூடாது என நினைத்து மெடிக்கல் ரிப்போர்ட்டை தூக்கி போட போகிறாள்.அனால் வேண்டாம் என நினைத்து மீண்டும் பேக்குள்லையே வைக்கிறாள். அதனை தொடர்ந்து கண்ணம்மா தூங்கிக்கொண்டிருக்கிறாள். அப்போது வெண்பா அவளுக்கு விஷ ஊசி போடுவதை போல் கண்ணம்மாவிற்கு கனவு வருகிறது.
வெண்பா பேர் போட்ட ரிப்போர்ட் இந்த வீட்ல இருக்குறதால தான் இந்த கனவு எல்லாம் வருது. முதல் வேலையா நாளைக்கு இந்த பைல்ல ஹேமா கிட்ட கொடுக்க சொல்லணும் என்று நிணைக்கும் கண்ணம்மா, அடுத்த நாள் லட்சுமி ஸ்கூலுக்கு கிளம்பும் லட்சுமியிடம்,? மெடிக்கல் ரிப்போர்ட்டை முதல் வேலையா ஹேமாவிடம் கொடுக்குமாறு சொல்கிறாள். இதற்கிடையில் வெண்பா, லட்சுமிக்காக அவள் வீட்டுக்கு வெளியில் காரில் காத்திருக்கிறாள்.
தொடர்ந்து வெளியில் வரும் ஆட்டோவில் ஸ்கூலுக்கு செல்லும்போது, வெண்பா காரில் அந்த ஆட்டோவை பாலோ செய்கிறாள். அப்போது எதிர்பாராதவிதமாக ஒரு பைக்கை இடித்து விடுவதால் ஆட்டோவை மிஸ் செய்து விடுகிறாள். ஆனால் அதற்குள் ஸ்கூலுக்கு வரும் லட்சுமி, மெடிக்கல் ரிப்போர்ட்டை ஹேமாவிடம் கொடுத்தால் ஈவினிங்தான் கிடைக்கும், என்று நினைத்து மெடிக்கல் பைல்லை குமாரிடம் கொடுத்து, இதை நீங்க இப்பவே ஹேமா வீட்ல போய் கொடுத்துருங்க என சொல்கிறாள்.
அதனை வாங்கிக்கொண்டு குமார் கிளம்பியவுடன் லட்சுமியிடம் வரும் வெண்பா, மெடிக்கல் பைல்லை கேட்கிறாள். அதை குமாரிடம் கொடுத்து அனுப்பியதை பற்றி சொல்கிறாள் லட்சுமி. அதன்பின்னர் காரை எடுத்து கொண்டு வேகமாக கிளம்புகிறாள் வெண்பா. இத்துடன் இன்றைய எபிசோட் நிறைவடைகிறது.
"தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil