லக்ஷ்மியிடம் அப்பா பற்றி சொன்ன பாரதி - நெகிழ்ச்சியில் கண்ணம்மா

Latest promo of Barathi Kannamma serial in tamil: தனது அப்பா யார் என்று கேட்டு வந்த லக்ஷ்மிக்கு அவளது அப்பா யார் என்கிற உண்மையை உடைத்துள்ளார் பாரதி.

Latest promo of Barathi Kannamma serial in tamil: தனது அப்பா யார் என்று கேட்டு வந்த லக்ஷ்மிக்கு அவளது அப்பா யார் என்கிற உண்மையை உடைத்துள்ளார் பாரதி.

author-image
WebDesk
New Update
Tamil serial update: bharathi tells Lakshmi who is her father in Bharathi kannama

Bharathi kannama Tamil News: சின்னத்திரையில் சீரியல்களை ஒளிபரப்புவதில் முன்னணி தொலைக்காட்சியாக விஜய் டிவி வலம் வருகிறது. இந்த தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வரும் ‘பாரதி கண்ணம்மா’ சீரியல் இல்லத்தரசிகளின் பேவரட் எனலாம். அந்த அளவிற்கு மிகப்பெரிய ரசிகர்கள் பட்டத்தளத்தை கொண்டுள்ளது. தற்போது விறுவிறுப்பாக ஓடிக்கொண்டிருக்கும் இந்த சீரியலில் அன்றாட பல திருப்பங்கள் அரங்கேறி வருகின்றன.

Advertisment

பாரதி கண்ணம்மா சீரியலில் கணவர் பாரதியை பிரிந்து வாழும் கண்ணம்மாவுக்கு இரட்டை பெண் குழந்தைகள் பிறந்தன. இதில் ஒரு குழந்தையை பாரதியும், மற்றொரு குழந்தை கண்ணமாவும் வளர்த்து வருகின்றனர். இதில் வைக்கப்பட்ட ட்விஸ்ட் என்னவென்றால், கண்ணம்மாவுக்கு தனக்கு பிறந்தது இரட்டை குழந்தை என்று தெரியாது. ஆனால், பின்னர் அவருக்கு தெரிய வந்து விடுகிறது.

publive-image

எனினும், தற்போதுபோது வரை இந்த உண்மை கண்ணம்மாவின் மாமியாருக்கு மட்டுமே தெரியும் என்பது போல் காட்டப்படுகிறது. இந்த நிலையில் தான், தனது அப்பா யார் என்று கேட்டுக்கொண்டிருக்கும் மகள் லக்ஷ்மியிடம் அவளது பிறந்த நாளில் அப்பா யார் என்று சொல்கிறேன் என்று செல்லிவிடுகிறாள் கண்ணம்மா. இதை கேள்விப்பட்ட பாரதி எப்படியும் தன்னைத்தான் அந்த குழந்தைக்கு அப்பா என்று சொல்லப்போகிறாள் என்று கண்டுபிடித்து விடுகிறான்.

Advertisment
Advertisements
publive-image

லக்ஷ்மியின் அப்பா தான் என்று பாரதி கூறுவாரா? அல்லது கண்ணம்மா லக்ஷ்மியின் அப்பா பற்றி கூறுவாரா? இல்லை, யார் தான் இதை பிறந்த நாள் விழாவில் உடைக்கப் போகிறார்கள்? என்கிற ஆவலில் ரசிகர்கள் இருந்து வருகின்றனர். இந்த நிலையில், தாற்போது லக்ஷ்மியிடம் அவளது அப்பா யார் என்று பாரதி கூறும் ப்ரோமோ வெளியாகியுள்ளது. ரசிகர்கள் மத்தியில் அதிகம் பகிரப்பட்டு இந்த ப்ரோமோ வீடியோ இணைய பக்கங்களில் வைரலாகிறது.

publive-image

இந்த ப்ரோமோவில், பிறந்த நாள் விழா தொடங்கிய பின்னர், லக்ஷ்மி தனது அப்பா யார் என்று கூறுமாறு கண்ணம்மாவிடம் கேட்கிறார். அப்போது பாரதி, "உனக்கு உன் அப்பா யாருன்னு தெரியணும் அதானே, நானே சொல்றேன். இதோ இங்க நிக்கிறாங்களே அவங்கதான் உனக்கு எல்லாமே. உனக்காக தன்னோட வாழ்க்கையையே தியாகம் செஞ்ச உன் அம்மா. அம்மா, அப்பா உனக்கு எல்லாமே அவங்க தான்" என்று கூறுகிறார். லக்ஷ்மி கண்ணீருடன் கண்ணம்மாவை கட்டிப்பிடிப்பது உடன் ப்ரோமோ முடிகிறது.

publive-image

“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil

Entertainment News Tamil Vijay Tv Vijay Tv Serial 2 Bharathi Kannamma Serial Tamil Serial News Tamil Serial Update Bharathi Kannamma

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us: