New Update
/tamil-ie/media/media_files/uploads/2021/04/samyuktha2.jpg)
Tamil Serial Update : பிக்பாஸ் பிரபலம் சம்யுக்தா தற்போது இணையதளத்தில் வெளியிட்டுள்ள புகைப்படம் வைரலாகி வருகிறது.
Tamil Serial Update Bigboss Samyuktha Viral Photos : மாடலிங் துறையில் கலக்கி வரும் பிக்பாஸ் பிரபலம் சம்யுக்தா தற்போது தனது சிக்ஸ் பேக் புகைப்படத்தை சமூகவலைதளத்தில் பதிவிட்டுள்ளார்.
தமிழில் கடந்த 2019-ம் ஆண்டு வெளியான தனுசு ராசி நேயர்களே படத்தின் மூலம் நாயகியாக அறிமுகமாவர் சம்யுக்தா, அதனைத் தொடர்ந்து தற்போது துக்ளக் தர்பார் மற்றும் கவுதம் கார்த்திக்குடன் பெயரிடப்படாத படத்தில் நடித்து வரும் இவர், கடந்த ஜனவரி மாதம் நடைபெற்ற பிக்பாஸ் சீசன் 4-ல் கலந்துகொண்ட புகழ் பெற்றார். ஆனால் பிக் பாஸ் நிகழ்ச்சியில் வெற்றியாளர் ஆரியுடன் ஏற்பட்ட மோதலில், சர்ச்சையாக பேசியதால் கடும் எதிர்ப்பை சந்தித்த இவர் பிக் பாஸில் இருந்து எலிமினேட் செய்யப்பட்டார்.
தொடர்ந்து பிக் பாஸ் நிகழ்ச்சியில் இருந்து வெளியேறிய அவருக்கு பட வாய்ப்புகள் குவிந்து வருகிறது. மேலும் மாடலிங் துறையில் பல வருடங்களாக புகழ்பெற்று வரும் சம்யுக்தா பிட்னெஸ் மீது அதிக ஆர்வம் கொண்டவர். அதனால் தொடர்ந்து அவர் உடற்பயிற்சி செய்வதை வழக்கமாக வைத்துள்ள இவர், தான் ஒர்கவுட் புகைப்படங்களையும் தனது சமூகவலைதள பக்கத்தில் அடிக்கடி வெளியிட்டு வருகிறார். இந்த புகைப்படத்திற்கு ரசிகர்கள் மத்தியில் பெரும் வரவேற்பு இருந்து வரும் நிலையில், தற்போது சம்யுக்தா வெளியிட்டுள்ள புகைப்படம் இணையத்தில் வைரலாகி வருகிறது. இந்த புகைப்படத்தில் அவரின் வயிற்றில் சிக்ஸ் பேக் இருப்பதை பற்றி நெட்டிசன்கள் பேசி வருகின்றனர்.
"தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.