Colors TV Serial mangalya Santhosham And Amman Serial : விஜய் டிவி, மற்றும் சன்டிவியை தொடர்ந்து இரு சீரியல்களை ஒன்றினைத்து மகாசங்கம் என்ற பெயரில் வெளியிட கலர்ஸ் தமிழ் தொலைக்காட்சியும் தயாராகியுள்ளது.
கடந்த 2018-ம் ஆண்டு தமிழில் தொடங்கப்பட்ட கலர்ஸ் தமிழ் தொலைக்கட்சி குறுகிய காலத்தில் தமிழகத்தில் பெரும் பிரபலமடைந்துள்ளது. இதற்கு முக்கிய காரணம் சீரியல்கள். தொடக்கத்தில் இந்திய சீரியல்களை டப்பிங் செய்து ஒளிபரப்பிய கலர்ஸ் தமிழ், தற்போது நேரடி தமிழ் சீரியல்களை ஒளிப்பரப்பி வருகிறது. இதில் இரவு 7 மணிக்கு ஒளிபரப்பாகும் மாங்கல்ய சந்தோஷம், தொடர்ந்து 7.30 மணிக்கு ஒளிப்பரப்பாகும் அம்மன் சீரியல்கள் மக்கள் மத்தியில் அதிக வரவேற்பை பெற்றுள்ளது.

தமிழகத்தில் சீரியல்களுக்கு இருக்கும் வரவேற்பை மேலும் அதிகரிக்கவும், ரசிகர்களின் சுவாரஸ்யத்தை கூட்டவும் இரு சீரியல்களை ஒன்றாக இணைத்து ஒளிப்பரப்பும் புதிய யுக்தியை முதன் முதலாக விஜய் டிவி கையாண்டது. இந்த யுக்திக்கு மக்கள் மத்தியில் பெரும் வரவேற்பு பெற்றதை தொடர்ந்து மற்ற தொலைக்காட்சியும் இதே யுக்தியை கையாளத் தொடங்கினர். அந்த வகையில் தற்போது கலர்ஸ் தொலைக்காட்சியும் இதே பாணியை கையில் எடுத்துள்ளது.
கலர்ஸ் தொலைக்கட்சியில் இரவு 7 மணிக்கு ஒளிபரப்பாகும் சீரியல் மாங்கல்ய சந்தோஷம் சீரியல் ரசிகர்களிடம அதிக வரவேற்பை பெற்றுள்ளது. லஷ்மி பிரியா, ரவி தேஜா, அருண் பத்மநாபன், கீர்த்தி விஜய், ஜீவா ஆகியோர் முக்கிய கதாப்பாத்திரத்தில் நடித்து வரும் இந்த சீரியல் கணவன் மனைவிக்கு இடையேயான பாசப்பிணைப்பினை மையமாக வைத்து ஒளிப்பாகி வருகிறது.

தொடர்ந்து இரவு 7.30 மணிக்கு தெய்வீக் தொடரான அம்மன் தொடர் ஒளிப்பரப்பாகி வருகிறது. தமிழகத்தில் எப்போதும் கடவுள் தொடர்பான சீரியல் மற்றும் படங்களுக்கு மக்கள் மத்தியில் அதிக வரவேற்பு இருக்கும் அந்த வகையில் இந்த சீரியலுக்கும் தனி ரசிகர்கள் பட்டாளம் உள்ளது. தற்போது இந்த சீரியல்கள் இரண்டையும் ஒன்றினைத்து 7 மணியில் இருந்து 8 மணி வரைக்கும் ஒளிபரப்பாக உள்ளது. இந்த மகா சங்கமம் இரண்டுவார காத்திற்கு ஒளிபரப்பாகும் என்று திட்டமிடப்பட்டுள்ளது.

இந்த மகா சங்கம எபிசோடுகள், நித்யா (லட்சுமிபிரியா நடிப்பில்) மற்றும் சக்தி (பவித்ரா கௌடா நடிப்பில்) இரு கதாபாத்திரங்களின் பிரச்சிணைகளுக்கு தீர்வு காணும் வகையில் கதைக்களம் அமைக்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. மார்ச் 15 ஆம் தேதியிலிருந்து தொடங்கும் இந்த மகாசங்கமம் எபிசோடுகள், மார்ச் 27 ஆம் தேதி வரை ஒளிபரப்பாகின்றன. இந்த இரு சீரியல்களும் இரு வேறுபட்ட கதைகளத்தை கொண்டது. இதில் அம்மன் சீரியலில், 30 ஆண்டுகளுக்குப் பிறகு நடக்கும் அக்னிஅம்மன் திருவிழாவிற்காக பரபரப்பாக தயாராகிக் கொண்டிருக்கும் ஒரு கோவிலில், முதன்மை கதாபாத்திரங்களான நித்யா மற்றும் சக்தி சந்திக்கும் வகையில் கதைக்களம் அமைக்கப்பட்டுள்ளது.
இதில் கோவிலில், குளத்திலிருந்து அம்மனது திருவுருவச்சிலையை வெளியில் எடுப்பதற்காக தேர்வு செய்யப்பட்டிருக்கின்ற பெண்களின் ஒரு குழுவிற்காக சக்தியும், நித்யாவும் கோவிலில் போட்டியிடுவதை காணலாம். இதற்கிடையே ஈஸ்வர் (அமல்ஜித் நடிப்பில்), சமரசம் மற்றும் சக்தியின் தந்தை தேவாவுடன் (நடன இயக்குனர் தருண் நடிப்பில்) ரஞ்சித் என பலரும் சூழ்நிலை காரணமாக அங்கு வசிப்பதற்கான நிலை ஏற்படுகிறது. இதன் பிறகு நித்யாவிற்கும், சக்திக்கும் என்ன நிகழப்போகிறது? இந்த பயணத்தில், பயணத்தில் அவர்களுக்கு அதிக தடைகளும், பிரச்சனைகளும் இருக்கப்போகின்றனவா?

இந்த மகாசங்கமம் குறித்து கலர்ஸ் தமிழ் – ன் பிசினஸ் ஹெட் திரு. அனூப் சந்திரசேகரன் கூறுகையில்,
எங்கள் தொலைக்காட்சியின் மிகப்பிரபலமான நெடுந்தொடர்களான அம்மன் மற்றும் மாங்கல்ய சந்தோஷம் ஆகியவற்றின் மகா சங்கம எபிசோடுகளை பார்வையாளர்களுக்கு வழங்குவதில் நாங்கள் பெருமகிழ்ச்சி அடைகிறோம். இந்த மகாசங்கமத்தில், ஏராளமான திருப்பங்கள் மற்றும் பரபரப்பை ஏற்படுத்தும் நிகழ்வுகளோடு தனிச்சிறப்பான பல விஷயங்கள் பார்வையாளர்களை ஒன்றினைக்கும் என்று நாங்கள் உறுதியாக நம்புகிறோம்.

இந்த தொடரில் அம்மன் கதாப்பாத்திரத்தில் நடித்து வரும் நடிகை ரக்ஷிதா மகாலட்சுமி கூறுகையில், “கலர்ஸ் தமிழ் தொலைக்காட்சியில், மாங்கல்ய சந்தோஷம் மற்றும் அம்மன் நெடுந்தொடர்களை நான் மகிழ்ச்சியோடு பார்த்து ரசித்திருக்கிறேன். இவைகளின் மகாசங்கமம் சிறப்பு நிகழ்வுக்காக இந்த இரு தொடரின் நட்சத்திரங்கள் மற்றும் தொழில்நுட்பக் குழுவினரோடு சேர்ந்து பணியாற்றுவது உண்மையிலேயே மகிழ்ச்சியாக இருந்தது. இந்த சீரியலில் அம்மன் கதாபாத்திரத்தில் நடித்தது உண்மையிலேயே பிரமிப்பூட்டும் ஒரு அனுபவமாகும். இதில் நடிப்பதை நான் மகிழ்ச்சியோடு அனுபவித்ததைப் போலவே, பார்வையாளர்களும் எனது இந்த கதாபாத்திரத்தை ரசிப்பார்கள் என்று நான் நம்புகிறேன்,” என கூறியுள்ளார்.

கலர்ஸ் தமிழ் தொலைக்காட்சியை அனைத்து முன்னணி கேபிளில் ஒளிப்பரப்பாகிறது. மற்றும் சன் டைரக்ட் (CHN NO 128), டாடா ஸ்கை (CHN NO 1555), ஏர்டெல் (CHN NO 763), டிஷ் டிவி (CHN NO 1808) மற்றும் வீடியோகான் D2H (CHN NO 553) ஆகிய அனைத்து டிடீஹெச் தளங்களிலும் கலர்ஸ் தமிழ் ஒளிபரப்பாகிறது.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற t.me/ietamil”