/tamil-ie/media/media_files/uploads/2021/04/Baba-Baskar.jpg)
Tamil Serial Update Cook With Comali Contestant Baba Baskar Dhanush Friend : குக் வித் கோமாளி நிகழ்ச்சியில் புகழ்பெற்ற நடன இயக்குநர் பாபா பாஸ்கர் தற்போது முன்னணி நடிகர் தனுஷின் பள்ளி நண்பர் என்ற தகவல் வைரலாகி வருகிறது.
சின்னத்திரையில் மக்களிடம் அதிக வரவேற்பை பெற்று வரும் ரியாலிட்டி ஷோ குக் வித் கோமாளி. கடந்த 2019-ம் ஆண்டு தொடங்கிய இந்த ஷோ தற்போது 2-வது சீசன் ஒளிப்பரப்பாகி வருகிறது. இதில் அஸ்வின், பாபா பாஸ்கர், கனி, ஷகீலா, உள்ளிட்ட பலர் போட்டியாளராக கலந்துகொண்டு கலக்கி வருகின்றனர். இதில் இயக்குநர் டான்ஸ் மாஸ்டர் என பண்முக திறமை கொண்ட பாபா பாஸ்கர் தற்போது தமிழ் சினிமாவின் முன்னணி நடிகரான தனுஷின் பல திரைப்படங்களில் நடன இயக்குனராக பணியாற்றி இருக்கிறார்.
தற்போது குக் வித் கோமாளி சீசன் 2-வில் சமையலில் கலக்கி வரும் இவர், கடந்த வாரம் நடைபெற்ற அரையிறுதி சுற்றில், ஷகீலாவுடன் போட்டியிட்டு வெற்றி பெற்று இறுதி போட்டிக்கு தகுதி பெற்றார். தொடர்ந்து அடுத்த வாரம் நடைபெறும் இறுதிப்போட்டியில், அஸ்வின், கனி ஷகீலா, பவித்ரா ஆகியோருடன் பாபா பாஸ்கர் போட்டியிடுகிறார். இந்த சீசனில் அவர் சாம்பியன் பட்டத்தை கைப்பற்ற அதிக வாய்ப்பு உள்ளது.
இந்நிலையில் தற்போது பாபா பாஸ்கர் நடிகர் தனுஷ் உடன் 8ம் வகுப்பு வரை ஒன்றாக படித்தவர் என்ற தகவல் இணையத்தில் வைரலாகி வருகிறது. குக் வித் கோமாளி நிகழ்ச்சியில் பங்கேற்கும் முன்பு தெலுங்கு பிக்பாஸ் நிகழ்ச்சியில் போட்டியாளராக கலந்துகொண்ட பாபா பாஸ்கர் அந்த நிகழ்ச்சியில் இறுதிவரை சென்று 2-வது இடம் பிடித்தார். சமீபத்தில் தனுஷ் குறித்து பேசிய அவர், தனுஷ் தான் தனக்கு அதிகம் வாய்ப்புகளை கொடுத்தவர் என்றும், தெலுங்கு பிக் பாஸ் நிகழச்சிக்கு சென்றதால், தனுஷின் சில ஹிட் பாடல்களுக்கு நடனம் அமைக்கும் வாய்ப்பை இழந்தேன் என்றும் கூறியுள்ளார்.
"தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.