இப்படியெல்லாம் கொண்டாடுவாங்களா? குக் வித் கோமாளி நடிகை வீட்டுல விசேஷம்

Cook With Comali Pavithra : குக் வித் கோமாளி நிகழ்ச்சியில் கலந்துகொண்ட போட்டியாளர் ஒருவரின் வீட்டில் நடைபெற்ற நிகழ்வு இணையத்தில் வைரலாகி வருகிறது

Tamil Serial Update Cook With Comali Pavithra Lakshmi Celebrition : குக் வித் கோமாளி நிகழ்ச்சியில் புகழ்பெற்ற போட்டியாளர் பவித்ரா லட்சுமி தற்போது தனது செல்லப்பிராணியின் பிறந்த நாளை விமர்சையாக கொண்டாடியுள்ளார்.

உள்ளூர் சினிமா முதல் உலக சினிமா வரை பிரபலங்கள் பலரும் செல்லப்பிராணிகள் வளர்ப்பதில் ஆர்வம் காட்டி வருகின்றனர். அப்படி வளர்க்கப்படும் செல்லப்பிராணிகளுக்கு பிறந்த நாள்விழா கொண்டாடுவது, அவை செய்யும் வித்தியாசமான செய்கைகளை படம் பிடித்து இணையதளத்தில் வெளியிடுவது என பல நிகழ்வுகளை செய்வது வழக்கம். அப்படி செய்யும் சில செயல்கள் இணையத்தில் வைரலாகிய நிகழ்வும் நடந்துள்ளது. அந்த வகையில் குக் வித் கோமாளி நிகழ்ச்சியில் கலந்துகொண்ட போட்டியாளர் தனது செல்லப்பிராணிக்கு பிறந்த நாள் கொண்டாடிய நிகழ்வு இணையத்தில் வைராலாகி வருகிறது.

விஜய் டிவி-யில் ஒளிபரப்பாகி வரும் ஹிட் ரியாலிட் ஷோ‘குக் வித் கோமாளி’. இந்த நிகழ்ச்சி ரசிகர்கள் மத்தியில் பெரும் வரவேற்பை பெற்று வரும் நிலையில், இதில் கலந்துகொள்ளும் போட்டியாளர்களுக்கு தனித்தனியாக ரசிகர்கள் பட்டாளமே உள்ளது. இதில் போட்டியாளராக கலந்துகொண்டு புகழ் பெற்றவர் நடிகை பவித்ரா லட்சுமி. மலையாளத்தில் உல்லாசம் என்ற படத்தின் மூலம் சினிமாவில் அறிமுகமான இவர் தற்போது குக் வித் கோமாளி நிகழ்ச்சியில் ரசிகர்கள் மத்தியில் வரவேற்பை பெற்றுள்ளார்.

இதில் செல்லப்பிராணி என்றால் அதிகம் விரும்பும்  பவித்ரா, தற்போது ‘கோகோ’ என்று வளர்த்து வரும் செல்லப்பிராணியை வளர்த்து வருகிறார். தற்போது இந்த இந்த செல்லப்பிராணியின் முதல் பிறந்தநாளை கொண்டாடியிருக்கிறார். தற்போது இந்த பிறந்த நாள் கொண்டாட்டம் குறித்த புகைப்படங்கள் இணையத்தில் வைரலாகி வருகிறது. அந்த புகைப்படத்தில், பிங்க் நிற ஃப்ராக் அணியச் செய்து, அந்த நாய்க்கு கேக் வெட்டியிருக்கிறார்கள். பவித்ராவை போல செல்லப்பிராணிகளின் மீது காதல் கொண்ட மற்றவர்களும் இந்த பிறந்தநாள் விழாவில் கலந்துக் கொண்டனர்.

“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil

Get the latest Tamil news and Entertainment news here. You can also read all the Entertainment news by following us on Twitter, Facebook and Telegram.

Web Title: Tamil serial update cook with comali pavithra lakshmi pet coco

Next Story
பச்சைக்கிளி… முத்துச் சரம்… முல்லைக் கொடி..! மாஸ்டர் நாயகி அல்ட்ரா கிளாமர் போட்டோ ஷூட்Tamil cinema news Malavika Mohanan glamorous photos goes viral
The moderation of comments is automated and not cleared manually by tamil.indianexpress.com