Tamil serial update in tamil: சன் டிவியில் ஒளிபரப்பாகும் அனைத்து சீரியல்களுமே ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று விடுகின்றன. அந்த வகையில், சீரியல் ரசிகர்களிடையே மிகவும் பிரபலமான சீரியலாக கயல் வலம் வருகிறது. இதற்கு காரணமாக இந்த சீரியலின் ஹீரோ – ஹீரோயினான சஞ்சீவ் மற்றும் சைத்ரா ரெட்டி ஜோடியைக் குறிப்பிடலாம். இவர்களது நடிப்பு அனைவரது கவனத்தை ஈர்த்து வருகிறது.

ஹீரோ சஞ்சீவ், விஜய் டிவியின் பிரபல சீரியல்களில் ஒன்றான ராஜா ராணி சீரியலில் நடித்து பெரிய வரவேற்பை பெற்று ரசிகர்கள் மத்தியில் பிரபாலமானவர். தொடர்ந்து அவர் விஜய் டிவியின் காற்றின் மொழி சீரியலிலும் நடித்திருந்தார்.

ஹீரோயின் சைத்ரா ரெட்டி, விஜய் டிவி-யில் ஒளிபரப்பான கல்யாணம் முதல் காதல் வரை சீரியலில் அறிமுகமானவர். எனினும், இவர் அதிகம் பிரபலமானது ஜீ தமிழில் ஒளிபரப்பாகிய ‘யாரடி நீ மோகினி’ சீரியல் மூலம் தான். இந்த சீரியலில் ஸ்வேதா கேரக்டரில் வில்லியாக நடித்து மிரட்டி இருந்தார். இதனால் ரசிகர்கள் மத்தியில் இவருக்கு நல்ல வரவேற்பு கிடைத்தது.

இந்நிலையில், விறுவிறுப்பாக ஒளிபரப்பாகி வரும் இந்த சீரியலில் ‘கல்யாண வீடு’ சீரியல் பிரபலம் நடிகை ஹேமா ஸ்ரீகாந்த் முக்கிய வேடத்தில் நடிக்க இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. இதனால் கதையில் அடுத்தடுத்து என்ன நிகழப்போகிறது என்பதைக் காண ரசிகர்கள் ஆவலோடு இருக்கிறார்கள்.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“