Advertisment

இரண்டே மாதத்தில் அசுர வளர்ச்சி : பாண்டியன் ஸ்டோர்ஸ் நடிகைக்கு கிடைத்த அங்கீகாரம்

Tamil Serial News : பாண்டியன் ஸ்டோர்ஸ் சீரியல் நடிகைக்கு புது அங்கிகாரம் கிடைத்துள்ளது.

author-image
WebDesk
New Update
இரண்டே மாதத்தில் அசுர வளர்ச்சி : பாண்டியன் ஸ்டோர்ஸ் நடிகைக்கு கிடைத்த அங்கீகாரம்

Tamil Serial Pandian Stores Actress Hema :  விஜய் டிவியில் ஒளிபரப்பாகும் முக்கிய தொடர்களில் ஒன்று பாண்டின் ஸ்டார்ஸ். குடும்ப ஒற்றுமை, சகோதரர்களின் பாசம் தம்பதிகளியே விட்டுக்கொடுக்கும் மனப்பான்மை ஆகியவற்றை மையமாக வைத்து உருவாகியுள்ள இந்த தொடர் குடும்ப பெண்கள் மட்டுமல்லாது அனைவரிடமும் பெரும் வரவேற்பை பெற்றுள்ளது. ஸ்டாலின், சுஜிதா, சரவண விக்ரம், ஹேமாராஜ், குமரன் தங்கராஜன், வெங்கட் ரங்கநாதன் உள்ளிட்ட நடிகர்கள் முக்கிய கதாப்பாத்திரத்தில் நடித்து வரும் இந்த தொடர் தமிழ் மட்டுமல்லாது பல மொழிகளில் ரீமேக் செய்யப்பட்டு வருகிறது.

Advertisment

இந்த தொடரில் நடித்து வரும் அனைத்து நடிகர்களுக்கும் தனித்தனி ரசிகர் பட்டாளங்கள் உள்ளன. இதில் ஜீவா மீனா, கதிர் முல்லை ஆகிய இரண்டு தம்பதிகளின் ரொமான்ஸ் கட்சிகளுக்கு ரசிகர்கள் மனதில் எப்போதும் தனி இடம் உண்டு. மேலும் இதில் நடித்து வரும் அனைத்து நடிகர்களும் தங்களுக்கென யூடியூப் சேனல் வைத்துள்னர். இதில் படப்பிடிப்பு தளத்தில் நடைபெறும் சுவாரஸ்யமான நிகழ்வுகளை படம்பிடித்து தங்களது சமூகவலைதள பக்கத்திலும், யூடியூப் சேனலிலும் பதிவிட்டு வருகின்றனர். அந்த வகையில் இந்த தொடரில் மீனா கதாப்பாத்திரத்தில்நடித்து வரும் நடிகை ஹேமாவும் தனக்கென தனி யூடியூப் சேனல் வைத்துள்ளார்.

‘ஹேமாஸ் டைரி’ என்று அந்த சேனல் கடந்த ஆண்டு டிசம்பர் மாதம் தொடங்கப்பட்டது. இந்த சேனலில் பதிவிடப்படும் வீடியோக்கள் அனைத்தும் அதிக பார்வையாளர்களை பெற்றுள்ளது. இந்நிலையில் 1 லட்சம் சப்ஸ்கிரைபர்களைப் பெறும் சேனலுக்கு யூடியூப் சார்பில் இந்த சில்வர் ப்ளே பட்டன் என்ற அங்கீகாரம் கொடுக்கப்படும். அந்த வகையில் தற்போது ‘ஹேமாஸ் டைரி’ சேனலுக்கு யூடியூப் சார்பில் ‘சில்வர் ப்ளே பட்டன்’ (Silver Play Button) கிடைத்துள்ளதாக நடிகை ஹேமா தனது சேனலில் தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து நடிகை ஹேமா கூறுகையில்,  “ஹேமாஸ் டைரி சேனலுக்கு யூடியூப் சில்வர் பிளே பட்டன் கிடைத்திருக்கிறது. கடந்த ஆண்டு  டிசம்பர் மாதம் தொடங்கப்பட்ட ஹேமாஸ் டைரி சேனலை இதுவரை 2 லட்சத்து 19 ஆயிரம் பேர் சப்ஸ்கிரைப் செய்துள்ளார்கள். இதற்காக அனைவருக்கும் நன்றி. என்னுடைய வீடியோக்கள் உங்களுக்கு ரசிக்கும்படியாக அமைந்திருப்பதாகவும் பலர் தெரிவித்துள்ளனர்.  மேலும் நீங்களும் என்ன மாதிரியான பயனுள்ள வீடியோக்கள் அப்லோட் செய்யலாம் என்று தெரிவிக்கலாம். அதன்மூலம் இன்னும் நல்ல வீடியோக்களை நாங்கள் உருவாக்கி வெளியிடுவோம்” என்று தெரிவித்துள்ளார்.

"தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற  t.me/ietamil"
Pandian Strores Serial Serial Acress Hema
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment