/tamil-ie/media/media_files/uploads/2021/03/andian-Stoews.jpg)
Tamil Serial Pandian Stores Director : விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் பாண்டியன் ஸ்டோர்ஸ் சீரியலில், இயக்குநர் மாற்றப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியள்ளது.
தமிழ் தொலைக்காட்சியில் சினிமாவிற்கு இணையாக வரவேற்பை பெற்று வரும் சீரியல் பாண்டியன் ஸ்டோர்ஸ். விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் இந்த சீரியல் தமிழில் பெற்ற வரவேற்பை தொடர்ந்து இந்தியாவின் பல மொழிகளில் ரீமேக் மற்றும் டப்பிங் செய்யப்பட்டு ஒளிபரப்பாகி வருகிறது. குடும்ப உறவுகளையும், சகோதரர்களின் பாசப்பிணைப்பையும், ஆழமாக கூறி வரும் இந்த சீரியல் கூட்டு குடும்ப ஒற்றுமையின் முக்கியத்துவத்தை வலிமையாக எடுத்துகூறி வருகிறது.
ஸ்டாலின், சுஜிதா, வெங்கட் ரங்கநாதன், ஹேமா ராஜ்குமார், குமரன் தங்கராஜன், சரவண விக்ரம் உள்ளிட்டோர் இந்த சீரியலில் முக்கிய கதாப்பாத்திரத்தில் நடித்து வருகிறார். இந்த சீரியலில் கதிர் - முல்லையின் ரொமான்ஸ் காட்சிகளுக்கு தனி ரசிகர் பட்டாளங்களே உள்ளது. இதில் முல்லையாக நடித்து வந்த நடிகை சித்ரா, கடந்த டிசம்பர் மாதம் தற்கொலை செய்துகொண்டதை தொடர்ந்து, தற்போது காவ்யா அறிவுமணி முல்லை கதாபாத்திரத்தில் நடித்து வருகிறார். ஆனால் முன்பு இருந்தது போல், இந்த சீரியல் தற்போது டிஆர்பியில், முன்னேற்றம் இல்லை.
இந்த நிலையை மாற்றும் வகையில், கடந்த இரண்டு வாரங்களாக விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் மற்றொரு ஹிட் சீரியலான பாக்கியலட்சுமி சீரியலையும், பாண்டியன் ஸ்டோர்ஸ் சீரியலையும் இணைத்து ஒளிபரப்பாக்கினர். இதற்கு ஓரளவு பலன் கிடைத்த நிலையில், தற்போது பாண்டியன் ஸ்டோர்ஸ் சீரியல் இயக்குநர் மாற்றப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. தற்போது அவருக்கு பதிலாக பாக்கியலட்சுமி சீரியல் இயக்குநர் தான் அதனை இயக்கி வருவதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன. இது குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகவில்லை. ஆனாலும் விரைவில் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.