Pandian Stores Serial Episode Update : அண்ணி லவ் பண்ணி கல்யாணம் பண்ணவங்க. அதுனால கண்டிப்பா புரிஞ்சுப்பாங்க என முடிவு செய்து கண்ணன் மீனாவிடம் ஐஸ்வர்யா குறித்து பேசலாம் என யோசிக்கிறான். ஆனால் மீனாவோ, அவனை பேச விடாமல், உனக்கு அந்த பொண்ணை பிடிச்சு இருக்கு. ஆனா அவள் பிரசாந்த் வந்த உடனே உன்னை கழட்டிவிட்டா அவ்வளவு தான் என சொல்கிறாள்.
மேலும் ஒருவேளை அந்த பொண்ணுக்கே உன்னை பிடிச்சு இருந்தாலும் கஸ்தூரி அண்ணியும், இந்த வீட்ல உள்ளவங்களும் உங்களை சேர்த்து வைக்க மாட்டாங்க என சொல்லிவிட்டு சென்றுவிடுகிறாள் இதனால் விரக்தியடையும் கண்ணன், கடையில் இருக்கும் கதிர், ஜீவா இருவரிடமும், தன் பிரெண்ட்க்கு பிரச்சனை. அவன் லவ் பண்ற பொண்ணுக்கு கல்யாணம் ஏற்பாடு பண்றாங்க. இப்போ என்ன பண்றது அண்ணே என கேட்கிறான்.
அதற்கு அவர்கள் இருவரும், அதுக்கு நம்ம என்னடா பண்ண முடியும். படிக்குற பையன் அந்த பொன்னையும் கல்யாணம் பண்ணி என்ன பண்ண போறான் என சொல்கிறான். அப்போது அங்கு வரும் மூர்த்தி, வேலைய பாருங்கடா என்று திட்ட, கண்ணன் வீட்டிற்கு வருகிறான். அடுத்து என்ன செய்வது என்று தெரியாமல் சுற்றும் கண்ணன், ஐஸ்வர்யாவுக்கு போன் செய்ய கஸ்தூரி, போனை எடுத்து அவனை கண்டபடி திட்டுகிறாள். இதை ஐஸ்வர்யா பார்த்துக்கொண்டிருப்பதை பார்க்கும் கஸ்தூரி போனை தூக்கி போட்டு உடைக்கிறாள்.
இதை பற்றி சொல்ல தனத்திற்கு கஸ்தூரி போன் செய்ய முல்லை எடுக்கிறாள். கண்ணன் ஐஸ்வர்யாவுக்கு போன் செய்த்து குறித்து சொல்லிவிட்டு தனம் வளைகாப்புல கண்ணனும், ஐஸ்வர்யாவும் அடிச்ச கூத்துனால தான் கல்யாணத்தை வேகமா நடத்த போறோம். இன்னொரு தடவை போன் பண்ண, போலீஸ்ல புகார் கொடுப்பேன் என சொல்லி போனை வைக்கிறாள்.
இதை கேட்டு முல்லை கண்ணனை படித்து சத்தம் போட, தனமும் மீனாவும் கண்ணன் என்ன பண்ண என அவள் கேட்கிறாள். அப்போது முல்லை கஸ்தூரி போன் பண்ண விஷயத்தை பற்றி சொல்லாமல், வீட்ல காணாமல் போன பணத்தை திருடுனது இவன்தான். அந்த பணத்தை கதிர் தான் திரும்ப வைச்சாங்க என சொல்கிறாள். அதன்பின்னர் தனம் மூர்த்தி, ஜீவா, கதிர் மூவரையும் கடையில் இருந்து வீட்டிற்கு அழைக்கிறாள். வீட்டிற்கு வரும் அவர்கள், என்னாச்சு எதுக்காக போன் போட்டு அவசரமா கூப்பிட்ட என கேட்கின்றனர்.
அப்போது தனம் முல்லையிடம் என்கிட்ட சொன்னதை எல்லார்கிட்டயும் சொல்லு. நீயும் தான இவ்வளவு நாளா எங்ககிட்ட இருந்து எல்லாத்தையும் மறைச்ச என சொல்கிறாள். அனைவரும் அதிர்ச்சியாக முல்லையையே பார்க்கின்றனர். அத்துடன் முடிகிறது இன்றைய எபிசோடு.
"தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil