Advertisment

சீரியல் நடிகைகள் குடும்பத்துடன் கொண்டாட்டம் : வைரலாகும் புகைப்படங்கள்

Tamil Serial Update : சினிமா பிரபலங்கள் இடையில் போட்டிகள் அதிகம் இருந்தாலும் பொழுதுபோக்காக சக நடிகர் நடிகைகள் குடும்பத்துடன் வெளியில் செல்வதை வழக்கமாக கொண்டுள்ளனர்

author-image
WebDesk
New Update
சீரியல் நடிகைகள் குடும்பத்துடன் கொண்டாட்டம் : வைரலாகும் புகைப்படங்கள்

Tamil Serial Actress Instagram Post : சீரியல் நடிகைகள் குடும்பத்துடன் வெளியில் சென்றுள்ள புகைப்படங்கள் மற்றும் வீடியோ பதிவுகள் வலைதளத்தில் வைரலாகி வருகிறது.

Advertisment

சினிமா நடிகர் நடிகைக்கள் போல சீரியல் நடிகர் நடிகைகளுக்கும் தற்போது ரசிகர்கள் மத்தியில் அதிக வரவேற்பு உள்ளது. அதிலும் சீரியல் நடிகைகள் பற்றிய செய்திகள் சமூக வலைதளங்களில் வெளியாக்கும்போது ரசிகர்களின் அதிகமான ஆதரவை பெற்று வருகிறது. இதனை பயன்படுத்திக்கொள்ளும் நடிகைக்கள் தங்கள் வெளியில் செல்லும்போது நடைபெறும் சுவாரஸ்யமான நிகழ்வுகளை தங்களது வலைதள பக்கத்தில் பகிர்ந்து வருகின்றனர்.

தற்போது சினிமா பிரபலங்கள் இடையில் போட்டிகள் அதிகம் இருந்தாலும் பொழுதுபோக்காக சக நடிகர் நடிகைகள் குடும்பத்துடன் வெளியில் செல்வதை வழக்கமாக கொண்டுள்ளனர். இதில் சினிமா பிரபலங்களுக்கு இணையாக சீரியல் நடிகைகளும் நேரம் கிடைக்கும்போதெல்லாம், தங்களது சக நடிகர்களின் குடும்பத்துடன் வெளியில் செல்வதை தொடர்ந்து வருகின்றனர்.

அந்த வகையில், பாண்டியன் ஸ்டோர்ஸ் சீரியல் நடிகர் கதிர் மனைவி சுஹாசினி, பாரதி கண்ணம்மா சீரியல் இயக்குனர் பிரவீன் பென்னட் மனைவி சாய் பிரமோதித்தா, ரியோவின் மனைவி ஸ்ருதி, ஈரமான ரோஜாவே சீரியல் நடிகர் த்ருவ் மனைவி என அனைவரும் தங்களது குழந்தைகளுடன் வெளியே சென்றுள்ளனர். அப்போது எடுக்கப்பட்ட புகைப்படங்கள் மற்றும் வீடியோக்களை சாய் பிரமோதித்தா தனது இன்ஸ்டாகிராம் பக்கத்திலும் பகிர்ந்துள்ளார். இந்த பதிவுகள் தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது.

"தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற  t.me/ietamil

Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment