Tamil Serial Update Pandian Stores Serial : பாண்டியன் ஸ்டோர் சீரியலில் கதிர் – முல்லை ஜோடிக்கு இடையே நடைபெற்ற ரொமான்ஸ் கட்சி இணையத்தில் வைரலாகி வருகிறது.
சினிமா துறையில் பல்வேறு புதிய முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டாலும், சீரியலுக்கு உண்டான வரவேற்பு நாளுக்குநாள் அதிகரித்து வருகிறது. இதில் சின்னத்திரை நடிகர் நடிகைகளுக்கென தனியாக ரசிகர்கள் பட்டாளங்கள் உள்ளது. முன்னணி தொலைக்காட்சிகளில் ஒளிபரப்பாகும் சீரியல்களுக்கு மக்கள் தங்கள் பலமான ஆதரவை தெரிவித்து வரும் நிலையில், சீரியல் பார்க்கும் ரசிகர்களின் அளவை பொறுத்து தொலைக்காட்சி டிஆர்பி ரேட்டிங் வெளியிடப்படும். இதில் டிஆர்பி ரேட்டிங்கில் முதலிடத்தை பிடிக்க சீரியல்கள் போட்டி போட்டுகொண்டு புதிதாக பல முயற்கள் மேற்கொண்டு வருகின்றனர்.
அந்த வகையில், மக்களிடம் சீரியல் குறித்து தகவல்களை விரைவில் கொண்டு சேர்க்கும் வகையில், தமிழ் சினிமாவின் ஹிட்டான படங்களின் டைட்டிலை சீரியலுக்கு பயன்படுத்தி வருகின்றனர். மேலும் திரைப்படங்களுக்கு இணையாக சீரியல்களிலும் ரொமான்ஸ் மற்றும் சண்டை காட்சிகள் இடம்பெற்று வருகின்றன. இதில் ஒரு சில சீரியல்கள் மக்கள் மத்தியில் அதிக வரவேற்பை பெறும். அந்த வகையில், மக்களிடம் பெரும் வரவேற்பை பெற்று அவர்கள் மனதில் நீங்கா இடம் பிடித்த சீரியல் பாண்டியன் ஸ்டோர்ஸ். சகோதர பாசம், கூட்டு குடும்பத்தின் முக்கியத்துவம் ஆகியவற்றை மையமாக வைத்து ஒளிபரப்பாகும் இந்த சீரியல் பல மொழிகளில் ரீமேக் செய்யப்பட்டு ஒளிபரப்பாகி வருகிறது.
ரசிகர்களிடம் பெரும் வரவேற்பை பெற்றுள்ள இந்த சீரியலில், கதிர் மற்றும் முல்லை கதாப்பாத்திரங்களுக்கு மக்கள் மத்தியில் அதிக வரவேற்பு இருந்து வருகிறது. இதில் முல்லை கதாப்பாத்திரத்தில் நடித்த விஜே சித்ரா திடீரென தற்கொலை செய்துகொண்ட நிலையில், அவருக்கு பதிலாக காவியா அறிவுமணி அநத கதாப்பாத்திரத்தில் நடித்து வருகிறார். இந்த சீரியலில் சித்ரா முல்லை நடிக்கும் பொழுது கதிர் அவருக்கு முத்தம் கொடுப்பது போல் காட்சி எடுக்கப்பட்டிருந்தது.
நீங்க எதிர்பாக்கல ல.. நாங்களும் எதிர்பாக்கல!
— Vijay Television (@vijaytelevision) November 6, 2020
பாண்டியன் ஸ்டோர்ஸ் – இன்று இரவு 8 மணிக்கு நம்ம விஜய் டிவில.. #PandianStores #VijayTelevision pic.twitter.com/i4VNrl3BQy
இந்த காட்சிக்கு சித்ரா குடும்பத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியதாக கூறப்பட்ட நிலையில், சித்ராவிற்கும் அவருடைய கணவருக்கும் இடையே பல பிரச்சனைகள் ஏற்படுவதற்கு முக்கிய காரணமாக இருந்ததாக தகவல் வெளியானது. இந்நிலையில் தற்பொழுது இவர் பாண்டியன் ஸ்டோர் சீரியலில் முல்லை கதாபாத்திரமாகவே வாழ்ந்து வரும் காவியா ரசிகர்களின் கவனத்தை ஈர்த்துள்ளார். இந்நிலையில் தற்போது பாண்டியன் ஸ்டோர் சீரியல் முத்தக்காட்சி ஒன்று வெளியாகியுள்ளது. இந்த காட்சியில் கதிருக்கு முல்லை முத்தம் கொடுப்பது போல் புகைப்படம் வெளியாகியுள்ளது இந்த புகைப்படம் ரசிகர்களிடம் வைரலாகி வருகிறது.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற t.me/ietamil”