Pandian Stores Mullai Kannan Viral Dance : கொரோனா தொற்று பாதிப்பு காரணமாக கடந்த 2 வருடங்களாக திரைப்படங்கள் சரியாக வெளியாகாத நிலையில், பெரும்பகுதி மக்கள் தங்களது கவனத்தை சீரியல் பக்கம் திருப்பியுள்ளனர். முன்பு இல்லத்தரசிகளுக்கு மட்டுமே பொழுதுபோக்கான சீரியல்கள் தற்போது அனைத்து தரப்பினரின் ரசனைக்கு விருந்தளிக்கும் வகையில் உள்ளது. இதை பயன்படுத்திக்கொள்ள தொலைக்காட்சிகளும், புதிய சீரியல்களை களமிறங்கி வருகின்றனர்.
இதில் மற்றதொலைக்காட்சி சீரியல்களை காட்டிலும் விஜய் டிவி சீரியலுக்கு ரசிகர்கள் பெரும் ஆதரவு அளித்து வருகினறனர். அதற்கு முக்கிய காரணமாக சீரியல் கதையில் திடீர் திருப்பங்கள் மற்றும் சுவராஸ்யாமான எபிசோடுகள்தான் என்றாலும் கூட இந்த சீரியலில் நடித்து வரும் நட்சத்திரங்களும் ஒரு காரணம் என்று கூறலாம். சீரியல் மூலம் பிரபலமான அவர்கள் சமூக வலைதளங்களில் பதிவிடும் வீடியோ மற்றும் புகைப்படங்களுக்கு ரசிகர்கள் வரவேற்பு அளித்து வருகிறனர். இவர்கள் செய்யும் சிறு செயலும் பெரிய வைரலாகி வருகிறது.
அந்த வகையில் பாண்டியன் ஸ்டோர்ஸ் சீரியல் நடிகர் மற்றும் நடிகை வெளியிட்டுள்ள டான்ஸ் வீடியோ தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது. விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் முக்கிய சீரியல்களில் ஒன்று பாண்டியன் ஸ்டோர். சகோதர பாசம், கூட்டுக்குடும்பத்தின் நன்மை மற்றும் விட்டுக்கொடுக்கும் மனப்பான்மை ஆகிய முக்கியத்துவத்தை வலியுறுத்துவது தொடர்பான இந்த சீரியல் இல்லத்தரசிகளின் நன்மதிப்பை பெற்றுள்ளது. மேலும் அவ்வப்போது இதில் வரும் திருப்பங்களை பார்ப்பதற்காகவே ஒரு ரசிகர் கூட்டம் காத்துக்கொண்டிருக்கிறது.
4 அண்ணன் தம்பிகள் உள்ள இந்த சீரியலில் மூன்றுபேருக்கு திருமணம் ஆகிவிட்ட நிலையில், கடைசி தம்பி கண்ணன் இளமை துள்ளளுடன் சுற்றிக்கொண்டிருக்கிறார். தற்போது அவருக்கு காதல் துளிர்விட்டுள்ளது. ஆனால் அந்தக் காதலும் ஆபத்தில்தான் இருக்கிறது. .இந்நிலையில் கண்ணன் தனது மூன்றாவது அண்ணி முல்லையுடன் மொட்டை மாடியில் நடனமாடும் வீடியோ தற்போது சமூகவலைதளங்களில் வைரலாகி வருகிறது. இந்த சீரியல் நடிகர் நடிகைகள் சமூகவலைதளங்களில் எப்போதும் ஆக்டீவாக இருக்கும் நிலையில், அவ்வப்போது வீடியா மற்றும் புகைப்படங்களை வெளியிட்டு வருகின்றனர்.
அந்த வகையில், தற்போது முல்லையும்கண்ணனும் கமல்ஹாசன் பாடலுக்கு ஆடிய வீடியோவை வெளியிட்டுள்ளனர். இந்த வீடியோவுக்கு இடையே கண்ணனில் லவ்வர் ஐஸ்வயாவும் தனது பங்கிற்கு ஆட்டம் போட்டுள்ளார். ஷூட்டிங் ஸ்பாட்டில் மொட்டை மாடியில் நடந்த இந்த டான்ஸ்தான் இப்போது வைரலாகி வருகிறது.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil