பாண்டியன் ஸ்டோர்ஸில் முக்கிய நடிகைக்கு கல்தா: முன்கூட்டி ஒரு வார்த்தை சொல்லவே இல்லையாம்!

Tamil Serial Update : பாண்டியன் ஸ்டோர் சீரியலில் இருந்து விலகியது குறித்து நடிகை வைஷாலி விளக்கம் அளித்துள்ளார்.

Pandian Stores Serial Actress Vaishali Video : தமிழின் ஹிட் சீரியலான பாண்டியன் ஸ்டோர்ஸ் சீரியலில், இருந்து விலகியது ஏன் என்பது குறித்து நடிகை வைஷாலியிடம், ரசிகர்கள்  கேள்வி எழுப்பி வந்த நிலையில் அதற்கான காரணத்தை தற்போது அவர் வெளியிட்டுள்ளார்.

தொலைக்காட்சி சீரியல்களில் டிஆர்பியில் அதிக புள்ளிகள் பெற்று வரும் சீரியல் பாண்டியன் ஸ்டோர்ஸ். விஜய்டிவியில் ஒளிபரப்பாகி வரும் இந்த சீரியல், மக்கள் மத்தியில் பெரும் வரவேற்பை பெற்று வருகிறது. சகோதர பாசம், கூட்டு குடும்பத்தின் முக்கியத்துவம் பற்றி கூறும் இந்த சீரியல் தமிழ் மட்டுமல்லாது இந்தியாவின் பல மொழிகளில் ரீமேக் செய்யப்பட்டு ஒளிப்பரப்பாகி வருகிறது. மேலும் இந்த சீரியலில் நடிக்கும் நடிகர் மற்றும் நடிகைகளுக்கென தனி ரசிகர்கள் பட்டாளமே உள்ளது. அதிலும் இந்த சீரியல் நடிகர்கள் குறித்து எவ்வித தகவல்கள் வெளியானாலும் அது இணையதளத்தில் வைரலாகி விடும்.

அந்த வகையில், பாண்டியன் ஸ்டோர் சீரியலில், கடைசி தம்பி கண்ணனுக்கு ஜோடியாக ஐஸ்வர்யா கதாபாத்திரத்தில் இதற்கு முன்பு நடித்து வந்த வைஷாலி திலகா திடீரென சீரியலில் இருந்து நீக்கப்பட்டுள்ளார். இதனால் ரசிகர்கள் ஏமாற்றமடைந்த நிலையில், ஏன், ‘பாண்டியன் ஸ்டோர்’ சீரியலில் இருந்து விலகினீர்கள் என வைஷாலியிடம், ரசிகர்கள் பலரும்  கேள்வி எழுப்பி வந்த நிலையில், தற்போது அதற்கான காரணத்தை அவது தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.

இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள வீடியோ பதிவில், பாண்டியன் ஸ்டோர்ஸ் சீரியலில், ஐஸ்வர்யா கதாபாத்திரத்தில் இருந்து சீரியல் குழு ஏன் என்னை வெளியேற்றியது என்பது குறித்து, இதுவரை தனக்கு எந்த விளக்கமும் கொடுக்கப்படவில்லை, அதை தெரிந்து கொள்ளவும் விருப்பம் இல்லை. தற்போது நான் நடித்து வரும் கோகுலத்து சீதை மற்றும் மகராசி ஆகிய சீரியல்களுக்கு தொடர்ந்து, உங்கள் ஆதரவை கொடுங்கள் விரைவில் விஜய் டிவி சீரியல் மூலம் சந்திக்கிறேன் என தெரிவித்துள்ளார். 

இந்த சீரியலில் தற்போது அவரது கதாப்பாத்திரத்தில், தீபிகா என்பவர் நடித்து வருகிறார்.

“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற  t.me/ietamil” 

Get the latest Tamil news and Entertainment news here. You can also read all the Entertainment news by following us on Twitter, Facebook and Telegram.

Web Title: Tamil serial update pandian stores serial actress vaishali

Next Story
நடிகர் ஆர்யா படம் ரிலீஸ்… திடீர் டிரெண்டிங்கில் விஜே சித்ரா: கொஞ்சி மகிழும் வீடியோ
The moderation of comments is automated and not cleared manually by tamil.indianexpress.com