/tamil-ie/media/media_files/uploads/2021/03/Pandian-Stores-1.jpg)
Pandian Stores Serial Update : தமிழின் ஹிட் சீரியலான பாண்டியன் ஸ்டோர்ஸ சீரியலில் புதிய கதாப்பாத்திரம் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது.
தமிழகத்தில் ஹிட் சீரியல்களை கணக்கெடுத்தால், அந்த பட்டியலில் விஜய் டிவியில் ஒளிபரப்பாகும் பாண்டியன் ஸ்டோர் சீரியலுக்கு கண்டிப்பாக இடம் உண்டு. அந்த அளவிற்கு அனைவரின் மனதிலும் நீங்கா இடம்பெற்ற இந்த சீரியல், தமிழ் மட்டுமல்லாது கன்னடம், தெலுங்கு, மலையாளம், மராத்தி உள்ளிட்ட பல்வேறு மொழிகளில் ரீமேக் செய்யப்பட்டு ஒளிபரப்பாகி வருகிறது. இதன் மூலம் இந்தியாவிலேயே மற்ற மொழிகளில் ரீமேக் செய்யப்பட்ட முதல் சீரியல் என்ற பெருமையை பெற்றுள்ளது.
கூட்டுக்குடும்பத்தின் முக்கியத்துவம், சகோரர்களின் பாசம், உள்ளிட்ட குடும்ப வாழ்கையின் கருவை மைமாக வைத்து ஒளிபரப்பாகி வரும் இந்த சீரியலுக்கு ரசிகர்கள் மத்தியில் பெரும் வரவேற்பு உள்ளது. ஸ்டாலின், சுஜிதா, சரவண விக்ரம், ஹேமாராஜ், குமரன் தங்கராஜன், வெங்கட் ரங்கநாதன், சரவண விக்ரம் உள்ளிட்ட பலர் நடித்து வரும் இந்த சீரியலில், ஒவ்வொரு கதாப்பாத்திரத்திற்கும் தனி ரசிகர்கள் பட்டாளம் உள்ளது. இதில் பாண்டியன் ஸ்டோர்ஸ் குடும்பத்தின் 3-வது மருமகள் முல்லை கதாபத்திரத்தில் நடித்து வந்த விஜே சித்ரா திடீரென தற்கொலை செய்துகொண்டதால், அவருக்கு பதிலாக அந்த கேரக்டரில் தற்போது காவியா அறிவுமணி நடித்து வருகிறார்.
இந்த சீரியலில், அண்ணன் தம்பிகள் 4 பேரில், 3 பேருக்கு திருமணமாகிவிட்ட நிலையில், திருமணம் ஆகாமல் உள்ள கடைசி மகன் கடைக்குட்டியாக வலம் வரும் கண்ணன் கதாப்பாத்திரத்திற்கு ஜோடியா நடிக்க தற்போது புதிய நடிகை தீபிகா ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளார். ஏற்கெனவே கண்ணன் கதாப்பத்திரத்திற்கு, சத்யசாய் கிருஷ்ணன், வைஷாலி தனிகா உள்ளிட்டோர் ஜோடியாக நடித்திருந்த நிலையில், தற்போது தற்போது இந்த பட்டியலில், தீபிகாவும் இணைந்துள்ளார். ஆனால் இவராவர் கண்ண்ணுக்கு நிரந்தர ஜோடியாக நடிப்பாரா என்று ரசிகர்கள் கேள்வி எழுப்பி வருகின்றனர்.
"தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற t.me/ietamil" பாண்டியன் ஸ்டோர்ஸ் சீரியலில் புதிய நடிகை: யார் இந்த தீபிகா?
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.