சீரியலை இனி ஜவ்வா இழுக்க மாட்டாங்க... நல்ல சேதி சொன்ன சுஜிதா!
Pandian Stores Serial Tamil : பாண்டியன் ஸ்டோர்ஸ் சீரியல் குழு ஹைதராபாத்தை காலி செய்துவிட்டு குன்னக்குடிக்கு வந்துவிட்டதாக நடிகை சுஜிதா தனுஷ் தெரிவித்துள்ளார்.
விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் சீரியல்களில் ரசிகர்கள் மத்தியில் பெரும் வரவேற்பை பெற்று வரும் முக்கிய சீரியல் பாண்டியன் ஸ்டோர்ஸ். கூட்டு குடும்ப முக்கியத்துவத்தையும், சகோதர்ர்களின் ஒற்றுமையை முக்கியமான எடுத்துரைக்கும் இந்த சீரியலுக்கு ரசிகர்கள் பட்டாளம் ஏராளம். மேலும் இந்த சீரியலில் நடித்து வரும் நடிகர் நடிகைகளுக்கு சமூகவலைதளங்களில் பெரும் வரவேற்பை அளித்து வருகின்றனர்.
Advertisment
இந்த சீரியலில் முக்கிய கதாப்பாத்திரமான தனம் கேரக்டரில் நடித்து வருபவர் சுஜிதா தனுஷ். தமிழ் மட்டுமல்லாது மலையாளம் தெலுங்கு என மற்ற மொழி சீரியல்களிலும் நடித்து வரும் இவர், மலையாளத்தில் ஹரிச்சந்தனம் என்ற தொடரில், உன்னிமயா என்ற கேரக்டரில் நடித்து பிரபலமானார். சீரியல் மட்டுமல்லது திரைப்படங்களிலும் துணை கதாப்பாத்திரத்தில் நடித்து வரும் இவர், விக்ரமின் தாண்டவம், சாய்ல்லவி நடித்த தியா ஆகிய படங்களில் முக்கிய வேடத்தில் நடித்துள்ளார்.
தற்போது பாண்டியன் ஸ்டோர்ஸ் சீரியலில் நடித்து ரசிகர்கள் மத்தியில் பெரும் வரவேற்பை பெற்றுள்ளார். மேலும் இந்த சீரியலுக்கு ரசிகர்கள் மத்தியிலும் அதிக வரவேற்பு இருந்து வரும் நிலையில், சமீபத்தில் அமல்படுத்தப்பட்ட கொரோனா தொற்று ஊரடங்கு காரணமாக படப்பிடிப்பு நிறுத்தப்பட்டது. இதனால் இந்த சீரியல் ரசிகர்கள் வேதனை இடைந்த நிலையில், சமீபத்தில், இந்த சீரியலின் படப்பிடிப்பு ஹைதராபாத்தில் நடைபெற்று வருவதாக அறிவிக்கப்பட்டது.
Advertisment
Advertisements
ஆனால் உள்ளூர் சூழல் ஹைதராபாத்தில் இல்லை என்பதால் இந்த சீரியலுடன் பாக்கியலட்சுமி சீரியலை இணைத்து மகாசங்கமம் என்ற பெயரில், ஒளிபரப்பு செய்யப்ட்டது. ஆனால் இந்த மகாசங்கம எபிசோடுகள் ரசிகர்கள் மத்தியில் வரவேற்பை பெறவில்லை. மேலும் இந்த சீரியலின் தெலுங்கு பதிப்பான வாடிநம்மாவின் படப்பிடிப்பும் அங்கே நடைபெற்று வருவதால், இந்த சீரியல் படப்பிடிப்பை ஹைதராபாத்தில் மாற்றுவது எளிதாக இருந்தது.
ஆனாலும் தற்போது சீரியலுக்கு வரவேற்பு இல்லததாலும், தமிழகத்தில் சின்னத்திரை படப்பிடிப்புக்கு அனுமதி அளிக்கப்பட்டுள்ளதாலும், ஹைதராபாத்தில் இருந்து தற்போது குன்னக்குடிக்கு வந்துவிட்டதாக நாயகி சுஜிதா தனுஷ் கூறியுள்ளார். இது தொடர்பான புகைப்படங்களையும் அவர் பகிர்ந்துள்ளார். தற்போது இந்த புகைப்படங்கள் வைரலாகி வரும் நிலையில், பாண்டியன் ஸ்டோர்ஸ் சீரியல் இனி விறுவிறுப்புக்கு பஞ்சம் இல்லாமல் செல்லும் என்றும் ரசிகர்கள் கொண்டாடி வருகின்றனர்.
"தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil