Tamil Serial Pandian Stores Episode : விஜய் டிவியின் பாண்டியன் ஸ்டோர் சீரியலில், முல்லை சொன்ன விஷயங்களை கேட்ட மீனா, மூனு வருஷம் உங்களோட இருந்து இருக்கேன், இதைப்பத்தி நீங்க ஒன்னுமே சொல்லலயோ, உங்களுக்கு ஒரு அக்கா இருக்குன்னு எனக்கு தெரியாம போச்சு என சொல்கிறாள். அவுங்களோட எந்த தொடர்பும் இல்லையா? அவுங்க எங்க இருக்காங்கன்னு தெரியுமா? என என மீனா கேட்க கல்யாணம் ஆன பிறகு ஒருதடவ வீட்டுக்கு வந்தாங்க, ஆனா அப்பா ஏத்துக்கவே இல்லை என முல்லை சொல்கிறாள்.
உங்க அக்கா லவ் பண்றாங்கன்னு தெரிஞ்சு இருந்தா, உங்க வீட்ல ஏத்துக்கிட்டு இருப்பாங்களா என மீனா கேட்க, தனது அக்கா கல்யாணம் ஆன பையன லவ் பண்ணதாகவும், அவங்க லவ் பண்ணும்போது அவருக்கு 10 வயசுல ஒரு பையன் இருந்ததாகவும், முல்லை சொல்கிறாள். அதற்கு மீனா, இந்த ஒட்டுமொத்த கதைல தனம் அக்கா தான்ங்க கிரேட் என சொல்ல, ஆமாங்க அவுங்க மூர்த்தி மாமாவை கல்யாணம் பண்ணது அவுங்க வீட்ல கூட யாருக்குமே பிடிக்கல என சொல்லும் முல்லை, தனம் அக்கா இந்த குடும்பத்தை அவ்வளவு தாங்குனாங்க என் சொல்கிறாள்.
மேலும் தனம் திருமணம் ஆகி வந்த புதிதில், ஜீவா, கதிர், கண்ணன் எல்லாரும் தனம் அக்காவை அம்மா அம்மான்னு தான் சொல்லுவாங்க. இந்த வீட்டுக்காக அவ்வளவு தியாகம் பண்ணி இருக்காங்க என சொல்லும்போது, ஹாஸ்பிட்டல் சென்ற மூர்த்தியும், தனமும் வீட்டிற்கு வருகிறார்கள். அப்போது மூர்த்தி, குழந்தை நல்ல இருப்பதாக டாக்டர் சொன்னதாக தன் அம்மாவிடம் சொல்கிறான்.
மேலும் டாக்டர் ஸ்கேன் பண்ணிய சிடியை பார்ப்பது எப்படி என்று யோசிக்கும் மூர்த்தி, தனியாக வந்து ஜீவாவுக்கு போன் செய்து ஒரு பாட்டு வீடியோ பார்க்கணும். எதுல பார்க்குறதுடா என கேட்கிறான். அதற்கு ஜீவா புது டிவிடி பிளேயர் வாங்கலாம் என சொல்ல, அது அதிகமாக வரும் என மூர்த்தி சொல்கிறான். அதற்கு, நான் என் பிரெண்ட் கிட்ட இருந்து லேப்டாப் வாங்கி தர்றேன் என ஜீவா சொல்கிறான்.
அப்போது கடையில் இருக்கும் கதிர் அண்ணே என்ன வீடியோ பார்க்க போகுது என கேட்கும் போது, அதாண்டா எனக்கும் தெரியல. ஏதோ சொல்ல வந்துச்சு ஆனா சொல்லல என சொல்கிறான். எதுக்காக கேட்டா என்ன அண்ணன் சொன்னத்தை நம்ம செஞ்சிருவோம் என ஜீவா சொல்கிறான். அதன்பிறகு கடை முடித்து லேப்டாப் எடுத்துக்கொண்டு வீட்டுக்கு வரும் ஜீவாவிடம், மீனாவும், முல்லையும் எதுக்கு லேப்டாப், என கேட்க, கேசட் கொடு அண்ணே எப்படி போட்டு பார்க்குறதுன்னு சொல்றேன் என சொல்கிறான்.
ஆனால் மூர்த்தியோ, நீ எப்படின்னு சொல்றா நான் பார்த்துக்கிறேன் என சொல்கிறான். ஜீவா சொல்லியபிறகு மூர்த்தி லேப்டாப் வாங்கி உள்ளே சென்ற பிறகு, மீனா மாமாக்கு எதுக்கு லேப்டாப் என ஜீவாவிடம் கேட்கிறாள். எனக்கும் அதான் தெரியல என அவன் சொல்கிறான். அத்தோடு முடிகிறது இன்றைய எபிசோட்.
"தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil