Tamil Serial Pandian Stores Today Update : குதுகலமாக பயணிக்க ஜீவா குட்டி யானையை தயார் செய்த விதத்தை பார்த்து அனைவரும் பாராட்டும்போது, மீனா மட்டும் இதுல வெளியில கூட்டிகிட்டு போறாங்கலாம். இத சுத்தி நின்னு வேற வேடிக்கை பாக்குராங்க என சொல்லிவிட்டு கோபமாக வீட்டுக்குள் போகிறாள். இதன் பின்னர் கதிர் முல்லையிடம் வண்டி உனக்கு பிடிக்கலையா என கேட்கிறான். இது கடை வேலைக்காக வாங்குனது. இதுலையா நம்ம வெளிய போக போறோம் என கேட்கிறாள்
என்ன இருந்தாலும் அண்ணன் கஷடப்பட்டு ரெடி பண்ணி இருக்கு. நல்லா இருக்குன்னு ஒரு வாத்தை சொல்லு என கதிர் சொல்ல, முல்லையும் வண்டி ரொம்ப சூப்பரா இருக்கு என ஜீவாவிடம் சொல்கிறாள். அதன்பிறகு அண்ணே எல்லாரும் வெளிய போயிட்டு வருவோம். நைட் புல்லா அண்ணன் ரெடி பண்ணிருக்கு. இதுல கடை சாமான் ஏத்துன, அது மனசு கஷ்டப்படும் என என கதிர் சொல்லும்போது, எப்படிடா உடனே கிளம்ப முடியும் என மூர்த்தி கேட்கிறான்.
அப்போது முல்லையும் வீட்ல நெறைய வேலை இருக்கு என சொல்கிறாள். அதற்கு தனம், பக்கத்துல எங்கயாது போய்ட்டு உடனே வந்துடலாம் என சொல்ல மூர்த்தியும் ஓகே சொல்கிறான். ஆனால் மீனா அந்த வண்டில நான் வர மாட்டேன். எல்லாரும் என்னை பார்த்து சிரிப்பாங்க என சொல்கிறாள். அப்போது அங்கு வரும் ஜீவா சமாதானப்படுத்த அவளும் கிளம்புகிறாள்.
அதன்பிறகு இந்த வண்டில வர்றது பிடிக்கலையா என கதிர் முல்லையிடம் கேட்க, எல்லாரும் வர்றாங்கள்ள. நானும் கிளம்புறேன் என முல்லை சொல்கிறாள். அண்ணனுக்காக போய்ட்டு வருவோம் என கதிர் சொல்கிறான். அதன்பிறகு அனைவரும் வெளியே கிளம்புகின்றனர். வண்டியில் வரும்போது, மீனா சோகமாக இருக்கிறாள். அதை பார்த்து உங்க ரெண்டுபேருக்கும் இந்த வண்டியில வரது புடிக்கல. இப்போ நம்மகிட்ட கார் வாங்குற அளவு பணம் இல்லை.
அதுவும் இல்லாம நம்ம வீட்ல இப்போ செலவு எல்லாம் அதிகம் ஆகிட்டே இருக்கு. நம்ம் கயல் பாப்பா வளர்ந்துட்டே இருக்கே. இன்னொரு பாப்பா வேற சீக்கிரம் வர்ற போகுது. அவுங்கள எல்லாம் நல்லா பார்த்துக்கணும்ல. நம்மளும் ஒருநாள் கார் வாங்குவோம்பா என சொல்கிறான். அதை கேட்டு மீனாவும் சமாதானம் ஆகிறாள். அதன்பிறகு அனைவரும் ஒன்றாக சாப்பிட்டுவிட்டு வீட்டுக்கு கிளம்புகின்றனர். அதனை தொடர்ந்து தனம் வளைகாப்பு பற்றி பேசுவதற்காக ஜெகா குடும்பத்துடன் மூர்த்தி வீட்டிற்கு வருகிறான். அத்துடன் முடிகிறது இன்றைய எபிசோடு.
"தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil