தொலைக்காட்சி நிறுவனங்கள் தங்களது டிஆர்பி ரேட்டிங்கை உயர்த்துவதற்காக நாள்தோறும் புதிய முயற்சிகளில் இறங்கி வருகிறது. அதில் முக்கிய அம்சமாக சீரியல் இருந்து வருகிறது. இதில் சீரியலை வைத்து தங்களது டிஆர்பி ரேட்டிங்கை உயர்த்தும் தொலைக்காட்சிகளில் புதிய சீரியல்களை அரங்கேற்றி வருகிறது. இதில் சன்டிவி, விஜய்டிவி, கலர்ஸ்டிவி, ஜீதமிழ் ஆகிய சேனல்கள் முதல்நிலையில் உள்ளது.
இந்நிலையில், சன்டிவியில் ஒளிபரப்பாகும் ரோஜா சீரியலுக்கு டிஆர்பி ரேட்டிங்கில் முக்கிய கிடைத்து வருகிறது. சிப்பு சூரியன், பிரியங்கா நல்காரி, வடிவுக்கரசி ஆகியோர் முதன்மை கதாப்பாத்திரத்தில் நடித்து வரும் இந்த சீரியல் தற்போது 800 எபிசோடுகளை கடந்து ரசிகர்கள் மனதில் அதிக இடத்தை வென்றுள்ளது.
இந்த சீரியல் மூலம் ரசிகர்களின் மனதை கவர்ந்த சிப்பு சூரியன், ரோஜா தான் தனது கடைசி சீரியல் என்றும், தற்போது திரைப்படங்களில் கவனம் செலுத்தி வருகிறேன். நிச்சயமாக, படங்கள் சவால்கள் நிறைந்தவை என எனக்குத் தெரியும். சவால்கள் அதை எதிர்கொள்ள நான் தயாராக இருக்கிறேன என்று கூறியுள்ளார். தற்போது கன்னடத்தில், இசையமைப்பாளர்-இயக்குனர் ஹம்சலேகா இயக்கும் சகுந்தலா என்ற படத்தில் நடித்து வருகிறேன் என்று கூறியிருந்தார்.
இந்நிலையில் சிப்பு சூர்யனுக்கு உடல்நிலை சரியில்லை என்றும், கூடிய விரைவில் அவர் மீண்டுவருவார் என்று பலரும் சமூக வலைதளத்தில் பதிவிட்டு வருகின்றனர். இதனால் அவருக்கு என்ன ஆனது என்று ரசிகர்கள் பலரும் கவலையில் இருக்கின்றனர்.
"தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil