Tamil serial actress dance video: சன்டியில் ஒளிபரப்பாகி வரும் சீரியலில் ரோஜா சீரியலுக்கு தனி இடம் உண்டு. இந்த சீரியலில், நாயகி ரோஜா கதாப்பாத்திரத்தில் நடித்து வரும் பிரியங்கா நல்கரிக்கு தனி ரசிகர் பட்டாளமே உள்ளது. மக்களிடம் பெரும் வரவேற்பை பெற்று வரும் இந்த சீரியலில், நாயகன் சுப்பு சூரியன் மற்றும் பிரியங்கா நல்கரியின் ரொமான்ஸ் கட்சிக்கு தனி ரசிகர்கள் கூட்டம் உள்ளது. மேலும் சன்டிவி ஒளிபரப்பாகி வரும் மற்ற சீரியல்களை விட இந்த சீரியலுக்கு டிஆர்பியிலும் முதலிடம்தான்.
இந்த சீரியலில் பிரியங்கா நல்கரிக்கு இணையான இரண்டாம் நாயகியாக வேடத்தில் நடித்து வருபவர் ஸ்மார்ட்டி காஷ்யாப். தற்போது பிரியங்கா நல்கரியும், இவரும் இணைந்து ஒரு பாடலுக்கு நடனமாடியுள்ளனர். ஜீவா, பூனம் பாஜ்வா நடித்த கச்சேரி ஆரம்பம் படத்தித்தில் இடம்பெற்ற ‘’ஹே வாடா வாடா பையா’’ என்று தொடங்கும் அநத பாடல் பெரும் வரவேற்பை பெற்றது.
View this post on Instagram
தற்போது இந்த பாடலை இவர்கள் இருவரும் இணைந்து பாடல்களுக்கு நடமாடி, அந்த வீடியோவை இன்ஸ்டகிராம் பக்கத்தில் பதிவிட்டு வருகின்றனர். அந்த வகையில் குத்து பாடலுக்கு, இருவரும் இணைந்து செம குத்தாட்டம் போட்டு வீடியோவை வெளியிட்டுள்ளனர்.