Tamil Serial Update Roja Serial Actress Priyanka : ரோஜா சீரியலில் முதன்மை கதாப்பாத்திரத்தில் நடித்து வரும் நடிகை பிரியங்கா சமூக வலைதளங்களில் வெளியிட்டுள்ள புகைப்படம் தற்போது வைரலாகி வருகிறது.
தமிழகத்தில் திரைப்படங்களுக்கு கிடைக்கும் அளவுக்கு தொலைக்காட்சி சீரியல்களுக்கும் வரவேற்பு அதிகம் உள்ளது. சினிமா நாயகிகளை விட சீரியல் நாயகிகளுக்கு அதிகமான பெண் ரசிகைகள் உள்ளன. அதிலும் சன்டிவியில் இரவு 7 மணிக்கு ஒளிபரப்பாகும் ரோஜா சீரியல் மக்களிடம் பெரும் வரவேற்பை பெற்று வருகிறது. இந்த சீரியலில் நாயகியாக நடித்து வரும் பிரியங்கா நல்காரிக்கும் ரசிகர் கூட்டம் உள்ளது. அதிலும் நாயகன் அர்ஜூன் நாயகி ரோஜா இடையேயான ரொமான்ஸ் கட்சிக்கு காத்திரக்கும் ரசிகர்கள் அதிகம்.
/tamil-ie/media/media_files/uploads/2021/03/priyanka-nalgari-1.jpg)
வாரந்தோறும் வெளியிடப்படும் டிஆர்பி பட்டியலில், ரோஜா சீரியலுக்கு கண்டிப்பாக இடம் இருக்கும். இந்நிலையில் உலகம் முழுவதும் பெண்கள் தினம் கொண்டாடப்பட்ட நிலையில், ரோஜா சீரியலின் நாயகி பிரியங்கா நல்காரி அந்த சீரியலில் அவருக்கு மாமியாராக நடிக்கும் காயத்ரி உடன் எடுத்து கொண்ட செல்பி புகைப்படத்தை பெண்கள் தின ஸ்பெஷல்லாக தனது வலைதள பக்கத்தில் வெளியிட்டுள்ளார். இந்த புகைப்படம் தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது.
"தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற
t.me/ietamil"