Roja Serial Promo Update : சன்டிவியின் ஹிட் சீரியலான ரோஜா சீரியல் குறித்து தற்போது வெளியாகியுள்ள ஸ்பெஷல் ப்ரமோ வைரலாகி வருகிறது.
சன்டிவியில் ஹிட் சீரியல்களில் ஒன்று ரோஜா. இல்லத்தரசிகள் மட்டும்மல்லாது குழந்தைகள் முதல் இளைஞர்கள் வரை அனைவரிடமும் பெரும் வரவேற்பை பெற்றுள்ள இந்த சீரியலில் பிரியங்கா நல்காரி, சுப்பு சூரியன் ஆகியோர் முதன்மை கதாப்பாத்திரத்தில் நடித்து வருகினறனர். மேலும் பழம்பெரும் நடிகை வடிவுக்கரசி மற்றும் ராஜேஷ் ஆகியோர் முக்கிய கதாப்பாத்திரத்தில் நடித்து வருகின்றனர்.
ஒரு குடும்பத்தை சுற்றி நடக்கும் இந்த கதையில், சண்டை காட்சிகள் ரொமான்ஸ், சஸ்பென்ஸ், என பல அதிரடி திருப்பங்களுடன் திரைக்கதை அமைக்கப்பட்டுள்ளது. இந்த சீரியலில் நாயகி ரோஜா மற்றும் நாயன் அர்ஜூன் இடையே நடைபெறும் ரொமான்ஸ் கட்சிக்கு ஏராளமான ரசிகர்கள் உள்ளனர். சிறுவயதில் காணாமல் போன பேத்தி திரும்ப கிடைத்த சந்தோஷத்தில் இருக்கும் அண்ணப்பூரணி தனது பேரன் அர்ஜூன் திருமணம் செய்து கூட்டி வந்த மருமகளிடம் கோபத்தை காண்பிக்கிறார்.
ஆனால் ஒரு கட்டத்தில் குடும்பத்தில் உள்ள சிலருக்கு தற்போது வீட்டிற்கு வந்தவர் உண்மையாக பேத்தி இல்லை என்றும், நாயகன் அர்ஜூன் திருமணம் செய்துகொண்ட ரோஜாதான் உண்மையான பேத்தி என்றும் தெரிகிறது. ஆனால் இந்த உண்மையை நம்ப மறுக்கும் அண்ணப்பூரணி தொடர்ந்து ரோஜாவுக்கு தொல்லை கொடுத்து வருகிறார். இதனால் உண்மையை நிரூபிக்க நாயகன்னும் ரோஜாவை வீழ்த்த அண்ணப்பூரணி மற்றும் அவரது பேத்தியும் எடுக்கும் முயற்சிகளே இந்த சீரியலின் கதை.
ரசிகர்கள் மத்தியில் அசைக்கமுடியாத இடம்பிடித்துள்ள இந்த சீரியலில் நாள்தோறும் பல அதிரடி திருப்பங்கள் அரங்கேறி வருகிறது. ஆனால் எவ்வளவுதான் திருப்பங்கள் நிகழ்ந்தாலும், அண்ணப்பூரணி டைகர் மாணிக்கம் ஆகிய இருவரும் ரோஜாவை தனது வாரிசாக ஏற்க மறுத்துவிடுகின்றனர். ஆனாலும் இவர்கள் எப்போதான் உண்மையை தெரிந்துகொளவார்கள் என்ற எதிர்பார்ப்பு மெலோங்கியுள்ள நிலையில், இந்த எதிர்பார்ப்புக்கு விடை சொல்லும வகையில் தற்போது ப்ரமோ ஒன்று வெளியிடப்பட்டுள்ளது.
இந்த ப்ரமோவில் வீட்டில் பொய்யாக நடிக்கும் பேத்தி அனு, ரோஜாவிடம் நீ ஆதரவில்லாதவள் அப்புறம் எப்படி உன்னை இந்த வீட்டு வாரிசாக ஏற்றுக்கொள்ள முடியும் என்று கேட்கிறாள். அதற்கு ரோஜா நான்தான் இந்த வீட்டு வாரிசு என்று ஒவ்வொரு முறையும் டிஎன்ஏ டெஸ்ட் எடுத்து நிரூப்பிக்க முயற்சிக்கும்போது நீ தடுத்துவிடுகிறாய். ஆனால் ஒரு அம்மா தன் மகள் யாரேன்று சொன்னால் நம்புவார்கள் செண்பகம் அம்மாவை கூட்டிக்கிட்டு வர என்று சொல்கிறாள்.
அதற்கு அர்ஜுன் ரோஜாதான் இந்த வீட்டுபொண்ணு என்பதை நிரூபிக்குவரை நான் தூங்கமாட்டேன் என்று சொல்கிறான். அத்துடன் முடிகிறது ப்ரமோ. இந்த எபிசோடு விடுமுறை நாளான வரும் ஞாயிற்றுக்கிழமை பகல் 2 மணிக்கு ஒளிபரப்பாகும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த எபிசோடுக்காக காத்திருக்கிறோம் என்று ரசிகர்கள் பலரும் கருத்து தெரிவித்துள்ளனர்.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil