Tamil Serial Sembaruthi Today Episode : தமிழில் சீரியலுக்கு பெயர்போன் தொலைக்காட்சிகளில் ஒன்று ஜீ தமிழ். இந்த தில் ஒளிபரப்பாகும் சீரியல்களுக்கு மக்கள் மத்தியில் பெரும் ஆதரவு இருந்து வருகிறது. அந்த வகையில் இந்த டிவியில் ஒளிபரப்பாகும் செம்பருத்தி சீரியல் மக்கள் மத்தியில் பெரும் வரவேற்பு இருந்து வருகிறது. இதில் இந்த சீரியலின் நேற்றைய எபிசோடில் என்ன நடந்தது என்பதை இந்த பதிவில் பார்க்கலாம்.
நேற்றைய எபிசோட்டின் தொடக்கத்தில், போலீஸ் ஸ்டேஷனுக்கு அழைத்து செல்லப்படும் பார்வதி, மற்றும் ஐஸ்வர்யா இருவரும், தப்பாக வீடியோ எடுத்த எம்எல்ஏ மகனை கன்னத்தில் அறைகிறார். ஆனால் போலீஸ் வந்து பார்த்தபோது போனில் அந்த வீடியோ இல்லை. இதனால் மன்னிப்பு கேட்கிறீர்களா இல்லை கோர்டுக்கு போறீங்களா என இன்ஸ்பெக்டர் கேட்கின்றனர்.
ஆனால் பார்வதி ’நாங்க எந்த தப்பும் செய்யவில்லை. மன்னிப்பு எல்லாம் கேட்க வேண்டிய அவசியம் இல்லை என சொல்கிறார்.’ ஆனால் பெண்களை தரக்குறைவாக நடத்தும் விதத்திலேயே பேசிக்கொண்டிருக்கும் இன்ஸ்பெக்டர் மீது பார்வதிக்கு கோபம் வருகிறது. இதனால் அகிலாவுக்கு போன் செய்யலாம் என ஐஸ்வர்யா கூறினாலும் அம்மா வந்தால் அவரையும் இப்படி தான் பேசுவார் அந்த இன்ஸ்பெக்டர் அதனால் வேண்டாம் என பார்வதி தடுத்து விடுகிறார்
அதன் பின் இன்ஸ்பெக்டர் வாங்க கோர்ட்டுக்கு போகலாம் என சொல்லும்போது அகிலா உள்ளே வருகிறார். ஆனால் பார்வதி சொன்ன மாதிரியே அகிலாவையும், இன்ஸ்பெக்டர் ஏளனமாக தான் பேசுகிறார். அதற்கு அகிலா, ஆண் என்பதால் மட்டுமே நீங்கள் அந்த ஆட்களுக்கு ஆதரவாக பேசுகிறீர்களா என கேட்கிறார். இதன்பின் அகிலாவிடம் போனை கொடுக்கும் இன்ஸ்பெக்டர், அந்த போனில் எதாவது இருக்கிறதா என பாருங்கள் என கூறுகிறார்.
ஆனால் அந்த போனில் இருக்கும் பைல்களை ரெக்கவர் செய்ய ஒரு நபரை கூட்டி வருகிறார் ஆதி. அவர் லேப்டாப்பில் போட்டு அனைத்து புகைப்படங்களையும் திரும்ப எடுக்கிறார். அதில் பல பெண்களின் நிர்வாண புகைப்படங்கள் இருப்பது பார்த்த இன்ஸ்பெக்டர், அந்த மூன்று பேரையும் அடித்து உதைக்கிறார். அப்போது அப்போது மகனுக்கு சப்போர்ட்டாக வரும் எம்.எல.ஏவையும் இன்ஸ்பெக்டர் அடித்து உதைக்கிறார்.
தொடர்ந்து தனது தவறை உணர்ந்த இன்ஸ்பெக்டர் அகிலா, பார்வதி மற்றும் ஐஸ்வர்யா ஆகியோரிடம் கூறி மன்னிப்பு கேட்கிறார். இத்துடன் இன்றைய எபிசோடு நிறைவு பெற்றது.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil