scorecardresearch

Zee Tamil Serial : வெற்றிபெற்ற மகிழ்ச்சியில் பார்வதி… வில்லத்தனத்தை தொடங்கிய ஐஸ்வர்யா… அடுத்து என்ன?

Tamil Serial Update : செம்பருத்தி சீரியலின் இன்றைய எபிசோட்டில் நடந்தது என்ன என்பதை இ்ந்த பதிவில் காணலாம்.

Zee Tamil Serial : வெற்றிபெற்ற மகிழ்ச்சியில் பார்வதி… வில்லத்தனத்தை தொடங்கிய ஐஸ்வர்யா… அடுத்து என்ன?

Sembaruthi Serial Episode Update : அடுத்த அகிலாவை தேர்ந்தெடுக்க தேர்தல் நடக்கிறது. அதில் அனைவரும் ஓட்டு போட்டு முடித்தபிறகு அகிலா கடைசியாக ஒட்டு போடுகிறார். இதற்கிடையே  ஐஸ்வர்யாவை ஜெயிக்க வைக்க பெட்டியை மாற்றிவிடலாம் என்று கங்காவுக்கு கண்மணி ஐடியா கொடுக்கிறாள். ஆனால் பெட்டியை தான் மாற்றி வைப்பதாக வனஜா ஏற்றுக்கொள்கிறாள். அதற்கு கண்மனி, பாஸ்வர்டு வீடியோ மூலமாக பார்த்து சொல்கிறார்.

இதன்பிறகு வனஜாவும் உமாவும் பெட்டியை மாற்றி வ்வைத்துவிட்டு வெளியில் வரும்போது அகிலா அங்கு நின்று கொண்டு இருக்கிறார்.இதை ஐஸ்வர்யாவுக்கும் தொடர்பு இருக்கிறதா என கேட்டு திட்டுகிறார். இதனைத் தொடர்ந்து மறுநாள் காலை ஓட்டு என்னும் வேலை தொடங்குகிறது. ராசாத்தி ஒவ்வொரு பேப்பராக எடுத்து வாக்குகளை எண்ணுகிறார். அதில் முதலில் ஐஸ்வர்யா தான் லீடிங்கில் வந்துகொண்டிரக்கிறார்.

ஆனால் இறுதியில் இருவரும் 10 ஓட்டுகள் வாங்கி சமநிலையில் இருக்கிறார்கள். அப்போது கடைசி ஓட்டு யாருக்கு என அனைவரும் ஆவலுடன் பார்க்கின்றனர். அந்த ஒரு ஓட்டும் பார்வதிக்கு கிடைக்கிறது. இதனால் ஒரு ஓட்டு வித்தியாசத்தில் பார்வதி வெற்றி பெறுகிறாள். அதன் பின் அகிலா அவரது கணவரிடம் ‘பார்வதி ஜெயித்ததால் ரொம்ப சந்தோசமாக இருக்கீங்க’ என கேட்கிறார்.

அதற்கு அவர், அப்படி என்றால் உன்க்கு மகிழ்ச்சி இல்லையா என கேட்கிறார் பார்வதி இவ்வளவு தூரம் ஈடுகொடுத்து வந்து ஜெயிப்பாள் என எதிர்பார்க்கவில்லை. மொத்தத்தில் எனக்கும் சந்தோசம் தான் என கூறுகிறார். பார்வதி ஜெயித்ததை எல்லோரும் கொண்டாட அணைவரும் அவளுக்கு வாழ்த்து கூறுகிறார்கள். அதை எல்லாம் பார்த்து வில்லி கேங் கடுப்பில் இருக்கிறது. அதன் பின் வேலைக்காரி பட்டம்மா அனைவருக்கும் ஸ்வீட் கொடுத்து இதை கொண்டாடுகிறார்.

ஐஸ்வர்யாவின் கணவர் அருணும் ஸ்வீட் சாப்பிட்டு கொண்டாடுகிறார். இதை மேலே இருந்து பார்க்கும் ஐஸ்வர்யா, பார்வதியின் மகிழ்ச்சியை அப்படியே விடமாட்டேன் என சொல்கிறார். இதனால் வரும் நாட்களில் ஐஸ்வர்யா வில்லியாக மாறப்போகிறார் என்று தெளிவாக தெரிகிறது.

“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil

Stay updated with the latest news headlines and all the latest Entertainment news download Indian Express Tamil App.

Web Title: Tamil serial update sembaruthi serial today episode