New Update
/tamil-ie/media/media_files/uploads/2021/05/Srineethi-Dance.jpg)
Serial Update tamil : செந்தூரப்பூவே சீரியல் மூலம் புகழ்பெற்ற நடிகை ஸ்ரீநிதி தற்போது இன்ஸ்டாகிராமில் வெளியிட்டுள்ள வீடியோ வைரலாகி வருகிறது.
தமிழகத்தில் தற்போது சினிமாவை விட சீரியலுக்கே அதிக வரவேற்பு இருந்து வருகிறது. அதிலும் சீரியல் நடிகைகளுக்கு ரசிகர்கள் பட்டாளம் ஏராளம். ஒவ்வொரு சீரியல் நடிகைகளும் தங்களது சமூக வலைதள பக்கத்தில் வீடியோ போட்டோ வெளியிட்டு வருகின்றனர். இந்த பதிவுகள் ரசிகர்கள் மத்தியில் பெரும் வரவேற்பை பெற்று வரும் நிலையில், சில நடிகைகள் அடிக்கடி கவர்ச்சி போட்டோஷூட்களை நடத்தி அந்த போட்டோக்களை பதிவிட்டு வருகின்றனர்.
அந்த வகையில் தற்போது விஜய்டிவியில் ஒளிபரப்பாகி வரும் செந்தூரப்பூவே சீரியலில் நடிக்கும் நடிகை ஸ்ரீநிதி வெளியிட்டுள்ள வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது. விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் ஹிட் சீரியல்களில் ஒன்று செந்தூரப்பூவே. ரசிகர்கள் மத்தியில் பெரும் வரவேற்பை பெற்றுள்ள இந்த சீரியல், முதன்மை கதாப்பாத்திரம் ரோஜாவாக நடித்து வருபவது ஸ்ரீநிதிமேனன். கதைப்படி இந்த சீரியலில் அவர் கர்ப்பமாக இருக்கிறார். இந்த விஷயம் அனைவருக்கும் தெரிந்துவிட பல்வேறு பிரச்சனைகள் வந்து கொண்டிருக்கிறது.
இதனால் கதையில் பல அதிரடியான திருப்பங்கள் காத்துக்கொண்டிருக்கும் நிலையில், சீரியலுக்கு வெளியில், ஸ்ரீநிதி ஷூட்டிங் ஸ்பாட்டில் குத்தாட்டம் போட்டி வீடியோவை தனது இன்ஸ்டாகிராம் ரீல்ஸில் வெளியிட்டு இருக்கிறார். சீரியலில் கர்பமாக இருப்பது போல நடித்துவரும் அவர் வயிற்றை கையில் பிடித்துக்கொண்டே நடனம் ஆடி இருப்பது நெட்டிசன்களில் கிண்டலுக்கு ஆளாகி இருக்கிறார். 'ஐயையோ, வயித்துல புள்ளய வெச்சிட்டு இப்படி ஆடுற' என கேட்டிருக்கிறார் ஒரு ரசிகர். மேலும் பலர் டான்ஸ் சூப்பர் என கமெண்ட் செய்து இருக்கிறார்கள்.
"தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.