Advertisment

மாங்காய் தோட்டத்தில் பிரபல சீரியல் ஜோடி: சிம்பாலிக்கா ஏதோ சொல்றாப்ல..!

Tamil Serial Update : சீரியல் நடிகர் பிரஜின் தனது மனைவி சான்ராவுடன் எடுத்துக்கொண்ட புகைப்படம் இணையத்தில் வைரலாகி வருகிறது.

author-image
WebDesk
New Update
மாங்காய் தோட்டத்தில் பிரபல சீரியல் ஜோடி: சிம்பாலிக்கா ஏதோ சொல்றாப்ல..!

Tamil Serial Actor Prajin Sandra Viral Photo : விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் அன்புடன் குஷி சீரியலில் நடித்து வரும் பிரஜின் தனது மனைவியுடன் எடுத்துக்கொண்ட புகைப்படம் இணையத்தில் வைரலாகி வருகிறது.

Advertisment

தமிழகத்தில் சீரியலுக்கு மட்டுமல்லாமல் சீரியல் நடிகர் நடிகைகளுக்கு பெரிய வரவேற்பு இருக்கத்தான் செய்கிறது. இதில் சீரியலை விட்டு விலகினாலும் சமூகவலைதளங்களின் மூலம் நடிகைகள் பலரும் ரசிகர்களுடன் இணைப்பில் உள்ளனர். அந்த வகையில் தமிழில் சீரியல்களில் நடித்து பிரபலமான தொகுப்பாளர் பிரஜின். தன்னைப்போலவே தொகுப்பாளராக இருந்து சீரியலில் முன்னணி நடிகையான வளர்ந்த சான்ராவை காதலித்து திருமணம் செய்துகொண்டார். திருணத்திற்கு பின் ஒரு சில சீரியல்களில் நடித்து வந்த அவர் குழந்தை பிறந்த பின் நடிப்பில் இருந்து ஒதுங்கி கொண்டார்.

தமிழில் கடந்த 2016-ம் ஆண்டு வெளியான பழைய வண்ணாரப்பேட்டை படத்தின் மூலம் நாயகனாக அறிமுகமான பிரஜின், அதற்கு முன்பே ஒரு சில படங்களில் சிறிய கதாப்பாத்திரங்களில் நடித்துள்ளார். மேலும் ஒரு சில மலையாளப்படங்களில் நடித்துள்ள இவர், 2005-ம் ஆண்டு முதல் சீரியலில் நடித்து வருகிறார். அநத வகையில், காதலிக்க நேரமில்லை, கோகுலத்தில் சீதை ஆகிய தொடர்களில் நடித்து வந்த இவர் விஜய் டிவியின் சின்னத்தம்பி தொடரின் மூலம் பிரபலமானார்.

தற்போது அன்புடன் குஷி சீரியலில் நடித்து வரும் நிலையில், இவரது மனைவியுடன் இவர் எடுத்துக்கொண்ட போட்டோஷூட் இணையத்தில் வைரலாகி வருகிறது.  இவர் என்னதான் சீரியலில் பிஸியான நடிகராக இருந்தாலும், தனது மனைவி மற்றும் குழந்தைகளுடன் வெளியில் செல்வது, அவர்களுடன் விளையாடும், வீடியோ மற்றும் போட்டோஷூட்களை இணையத்தில் பதிவிடுவது வழக்கமாக வைத்துள்ளார். இதில் கடந்த சில நாட்களுக்கு முன்பு இவரின் மகள் பிறந்த நாளை சிறப்பாக கொண்டாடிய வீடியோவை பதிவிட்டிருந்தார். இந்த வீடியோ இணையத்தில் வைரலாகியது.

publive-image

அந்த வகையில் தற்போது இவர் தனது மனைவியுடன் மாந்தோப்பில் எடுத்துக்கொண்ட புகைப்படம் இணையத்தில் வெளியாகியுள்ளது. இந்த போட்டோவில் தனது காதல் மனைவியை பிரஜின் கட்டியனைத்தபடி இருக்கிறார். சான்ட்ரா வெட்கத்தில் மாங்காயை கை காட்டி சிரித்தபடி போஸ் கொடுத்துள்ளார். இந்த போட்டோவை பார்த்த ரசிகர்கள் என்ன மீண்டும் அப்பாவாக போகிறீர்களா என கேள்வி கேட்டு வருகின்றனர். ஆனால் ரசிகர்களின் இந்த கேள்விக்கு காதல்ஜோடி எந்த பதிலும் கூறவில்லை.

"தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil

Tamil Serial Update Serial Actor Prajin
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment