/tamil-ie/media/media_files/uploads/2021/03/serial-actor.jpg)
Tamil Serial Actor Venkatesh Death : பாரதி கண்ணம்மா சீரியலில் நாயகியின் அப்பாவாக நடித்து வந்த நடிகர் வெங்கடேஷ் மாரடைப்பு காரணமாக இன்று மரணமடைந்தார்.
சன்டிவியில் கடந்த 2006-ம் ஆண்டு ஒளிபரப்பான செல்லமடி நீ எனக்கு என்ற தொடரின் மூலம் சின்னத்திரையில் அறிமுகமானவர் வெங்கடேசன். அதன்பிறகு பல தொடர்களில் நடித்து வந்த அவர் விஜய் டிவியில் ஒளிப்பரப்பான சரவணன் மீனாட்சி சீரியலில் நடித்து பிரபலமானார். அதனைத் தொடர்ந்து பல சீரியல்களில் நடித்து முன்னணி நடிகராக வலம் வந்த இவர், சீரியல்களில் கிராமத்து தந்தையாக நடிப்பதற்கு முதல் நடிகரான இவரை தேர்வு செய்யும் அளவுக்கு உயர்ந்தார்.
தற்போது விஜய் தொலைக்காட்சியில் ஈரமான ரோஜாவே மற்றும் பாரதி கண்ணம்மா ஆகிய இரண்டு சீரியல்களில் நடித்து வந்த அவர், இன்று மதியம் 2.30 மணியளவில் திடீரென மாரடைப்பு காரணமாக மரணமடைந்தார். அவருடைய மறைவுக்கு பாரதி கண்ணம்மா, மற்றும் ஈரமான ரோஜாவே சீரியல் பிரபலங்கள் பலர், இரங்கல் தெரிவித்து வரும் நிலையில், ரசிகர்கள் பலரும் அவருடைய மறைவுக்கு இரங்கல் தெரிவித்துள்ளனர். மேலும் விஜய்டிவி அவருடைய புகைப்படத்தை இன்ஸ்டாகிராம் படத்தில் பதிவிட்டு இரங்கல் தெரிவித்துள்ளனர்.
"தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற t.me/ietamil"
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.