Tamil Serial Rating : சிவகாமி நீங்க நல்லவங்களா.. கெட்டவங்களா…? ராஜா ராணி சீரியலுக்கு ரசிகர்கள் வாய்ஸ்

Serial Update In Tamil : தமிழில் இன்று வெளியாகியுள்ள சீரியல் ப்ரமோக்கள் மூலம் எந்த சீரியல் அதிக எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது என்று பார்க்கலாம்.

Tamil Serial Rating Update : தமிழ் தொலைக்காட்சிகளில் பல சீரியல்கள் ஒளிபரப்பாகி வருகின்றனர். அந்த சீரியல்கள் அனைத்தும் ரசிகர்கள் மனதை கவர்ந்ததா என்று கேட்டால் இல்லை என்றுதான் சொல்ல வேண்டும். அதேபோல் எத்த்தனை சீரியல்கள் ஒளிபரப்பானாலும் வார இறுதியில் வெளியாகும் டிஆர்பி ரேட்ங்கில் முதல் 5 இடங்களை பெறும் சீரியல்களே அதிக கவனம் பெறுகின்றன. அதற்காக மற்ற சீரியல்கள் எல்லாம் சரியாக போகவில்லை என்று அர்த்தம் அல்ல. சில சீரியல்கள் அதிகப்படியான ரசிகர்களின் மனதை கவர தவறி விடுகின்றன என்று கூறலாம்.

இதில் சீரியல்களின் அன்றைய எபிசோடு குறித்து எதிர்பார்ப்பை ஏற்படுத்தும் வகையில், ப்ரமோ வீடியோக்கள் வெளியிடப்படும். அந்த வகையில் இன்று வெளியிடப்பட்டுள்ள ப்ரமோ வீடியோக்களில் எந்த சீரியல் அதிக எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது என்பதை பார்போம்.

பாண்டியன் ஸ்டோர்ஸ் :

இன்று வெளியாகியுள்ள இந்த ப்ரமோவில் பாண்டியன் ஸ்டோர்ஸ் குடும்பத்தின் கடைசி தம்பி கண்ணன் ஐஸ்வாயாவிடம் பழகுவதை கஸ்தூரி மூர்த்தியிடம் கூறுவதால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

இந்த ப்ரமோவை பார்த்த ரசிகர்கள்பலரும் வழக்கம் போல ஆதரவாகவே கருத்துக்கள் கூறி வருகின்றனர். கடந்த சில நாட்களாக கதிர் பரீட்சையில் பாஸ் செய்த சந்தோஷம் இருந்தது. தற்போது கண்ணன் காதல் விஷயம் வீட்டிற்கு தெரிய வர ஆரம்பித்துள்ளது. இதனால் அடுத்து என்ன நடக்கும் என்ற எதிர்பார்ப்பு ஏற்பட்டுள்ளது.

பாக்கியலட்சுமி :

இல்லத்தரசியின் வாழ்கை போராட்டமே இந்த சீரியலில் திரைக்கதை.

இந்த ப்ரமோவை பார்த்த ரசிகர்கள் சிலர் காமெடியாக கருத்துக்களை பதிவிட்டுள்ளனர். அதில் ஒரு ரசிகர் கஷ்டப்பட்டு பீஸ் கட்டி  படிக்க வச்சா மூன்தால மோகன்லால்னு படிக்கர ஒழுங்கா ஸ்கூல் நேரத்துல ஸ்கூல் போகாம சினிமாக்கு போனா.. என பதிவிட்டுள்ளார்.

ஜெனிக்கு இன்னும் எவ்வளவு நாள்தான் தாலிகயிறு போட்ருப்ங்கள் சேஞ்ச் பண்ணுங்க பிளீஸ் என்று ஒரு ரசிகர் பதிவிட்டுள்ளார்.  மற்றொரு  ரசிகர் எங்கள் அண்ணன் கோபி எங்கடா என்று பதிவிட்டுள்ளார். இதில் ரசிகர்கள் பலரும் எழில்க்கு ஆதரவாகவும், பாக்யாவுக்கு ஆதரவாகவும் ஹார்ட் சிம்பல் பதிவிட்டுள்ளனர்.

பாரதி கண்ணம்மா:

கணவன் மனைவியின் வாழ்கை போராட்டமே இந்த சீரியலின் கதை

இந்த ப்ரமோவை பார்த்த ரசிகர்கள் பலரும் கண்ணம்மாவுக்கு ஆதரவாகவே கமெண்ட் செய்துள்ளனர். இதில் ஒரு ரசிகர் பாரதி கண்ணம்மாவ தேடி போறான். கண்ணம்மா ஏர்போர்ட்க்கு போறா என்று என்று பதிவிட்டுள்ளார்.  மற்றொரு ரசிகர் நீங்க அமெரிக்க போகமாட்டீங்கனுதான் ஊருக்கே தெரியுமே என்று பதிவிட்டுள்ளார்.

வந்ததுதான் வந்துட்டீங்க ஒரு டிஎன்ஏ டெஸ்ட் எடுத்துட்டு போங்க என்று ஒரு ரசிகர் பதிவிட்டுள்ளார். பாரதி அமெரிக்கா போக மாட்டான் னு எல்லாருக்கும் தெரியும்.. அப்புறம் எதுக்கு இவ்ளோ சீனு என்று கேட்கிறார். இதில் ஒருவர் டைரக்டர் அடுத்த ஷூட்டிங் அமெரிக்காவில் என்று சொல்வதாகவும், அதற்கு தயாரிப்பாளர் காசு இல்லப்பா என்று சொல்வது போலவும் பதிவிட்டுள்ளார்.

மற்றொரு ரசிகர் பல்பு வாங்கினான் பாரதி அமெரிக்காவாது ஆப்பிரிக்காவாது போய் கண்ணம்மாவ பாரு என் பதிவிட்டுள்ளார். எப்படா டிஎன்ஏ டெஸட் எடுப்பீங்க என்று ஒரு ரசிகர் கேட்டுள்ளார். நீங்க உள்ளூர்ல சீரியல் எடுக்கிறதே பார்க்க முடியல இதுல அமெரிக்கா. கண்டிப்பா போக மாட்டிங்கன்னு தெரிந்தும் எதுக்கு இந்த சீன என பதிவிட்டுள்ளார் ஒரு ரசிகர்.

அமெரிக்கா போக மட்டும் விசா பாஸ்போர்ட் ல எடுக்க முடியுது ஒரு DNA டெஸ்ட் எடுக்க முடியாதா மொக்க போடாம கொஞ்சம் கதையா இன்ட்ரஸ்டிங்கா கொண்டு போன நல்லா இருக்கும் இப்போல பாக்கவே புடிக்கல என பதிவிட்டுள்ளார். மற்றொரு ரசிகர் அன்பே இருவரும் பொடி நடயாக அமெரிக்காவை வலம் வருவோம் என கூறியுள்ளார்.

ராஜா ராணி 2 :

மாமியார் மருமகள் இடையே நடைபெறும் மோதல் குறித்த கதை

இந்த ப்ரமோவை பார்த்த ரசிகர்கள் சிவகாமி குறித்து எதிரும் புதிருமான கமெண்ட் கொடுத்து வருகின்றனர். இதற்கு ரசிகர் ஒருவர் சிவகாமி நீ நல்லவளா கெட்டவளா என்று பதிவிட்டுள்ளார். மற்றொரு ரசிகர் சிவகாமி அம்மா நீங்க கூட ஒரு காலத்தில ஒரு வீட்டுக்கு வாழ வந்த மருமகதான் என கூறியுள்ளார். ஹீரோ தனக்கு தானே பேசி மெண்டல் மாதிரி ஒரு முடிவு எடுத்து அவன் பாட்டுக்கு போறான் என மற்றொரு ரசிகர் பதிவிட்டுள்ளார்.

மற்றொரு ரசிகர் ராஜா ராணி இப்பத்தான் சூடு பிடிக்குது என்று பதிவிடுள்ளார். அதற்கு ஒரு ரசிகர் ஒரு புடவைய வெச்சே ஒரு வாரம் ஓட்டிருவீங்க இல்ல என கூறியுள்ளார். நிறைய பேரு அப்டி தான் இருக்காங்க ஆனா அத அட்வான்டேஜ் எடுத்துக்கிட்டு இன்னும் ரொம்ப தான் டார்ச்சர் பன்றாங்க என மற்றொரு ரசிகர் பதிவிட்டுள்ளார். இதற்கு மற்றொரு ரசிகர் இந்த சீரியல் கடைசி வரைக்கும் வெலங்காது என கூறியுள்ளார்.

இன்னொரு ரசிகர் இதெல்லாம் நல்லா தான் சொல்றீங்க மாமியாரே… அப்புறம் ஏன் மா சந்தியாவை இந்தப் பாடு படுத்துறீங்க… என கேட்டுள்ளார். சிவகாமி அர்ச்சணாவும் உன் மருமகள் தான்.சோ அவளையும் கொஞ்சம் டார்ச்சர் பண்ணுமா.. என மற்றொரு ரசிகர் பதிலிட்டுள்ளர்.

ரோஜா :

குடும்பத்திற்கு நடக்கும் மோதல்களே இந்த சீரியலின் கதை

இந்த ப்ரமோவை பார்த்த ரசிகர்கள் பலரும் டைகர் மாணிக்கத்தை வறுத்தெடுத்து வருகின்றனர். இதில் ஒரு ரசிகர் டைரக்டர் தன்னை அறிவாளியாகவும் பார்க்குற எல்லோரையும் முட்டாளாகவும் நினைக்கிறார்.. என்று பதிவிட்டுள்ளார். மற்றொரு ரசிகர் இந்த புலிக்கு அறிவே இல்லை அதான் வில்லிக்கு ஒன்னும் ஆகாதே பொழச்சு வந்திருவாள். முதல்ல டாக்டர் அப்படித்தான் சொல்லுவாங்க நாளைக்கு பாருங்க.என கூறியுள்ளார்.

அதற்கு மற்றொரு ரசிகர் பொயா மாணிக்கம் அனு உயிருடன் இருக்கும் பச்சதில் ரோஜாவுக்கு எப்படி தூக்குதன்டனை வாங்கிகோடுப்ப அர்ஜுன் அதற்கு இடம் கொடுப்பாரா முட்டாள் மாணிக்கம் என் கூறியுள்ளார். இதற்கு மற்றொரு ரசிகர் டைகர் மாணிக்கம் அவர்கள் பேசுவது. எனக்கு சுத்தம பிடிக்கவில்லை. ரோஜாவும் அர்ஜூனூம் பாவம் என கூறியுள்ளார். மற்றொருவர் எங்கள பாத்த டைரக்டர் சார்ருக்கு லூசுக மாதிரி தெரியும்போல என பதிவிட்டுள்ளார். மற்றொருவர் மாணிக்கம் ஒரு நல்ல அப்பாவும் இல்லை நல்ல மனிதரும் இல்லை. என கூறியுள்ளார்.

டைரக்டர் சார் கொஞ்சம் மொக்கையா போகுது .. . விறுவிறுப்பு கூட்டுங்க.. இதோ கூட்டிடுறேன் !! எப்பா சாமி போதும்டா உங்க பருப்பு .. ஒன்னும் வேகவே இல்ல என மற்றொரு ரசிகர் பதிவிட்டுள்ளார். எப்ப பார்த்தாலும் இறுதி கட்டத்தில் இரத்தம் தேவை என்று சொல்வார்கள் இப்போது பார்க்கலாம் அனுவிற்கு எந்த வகை இரத்தம் தேவை என்று…. அப்போது தெரியும் அனு யாரென்று என மற்றொரு ரசிகர் பதிவிட்டுள்ளார். மற்றொரு ரசிகர் ஒருவர் கீழே விழுந்து ரத்தமே வராம சீரியஸா ஆஸ்பத்திரியில் இருக்க ஒரே ஆள் நம்ம அனு தான் என் கூறியுள்ளார்.

இந்த ப்ரமோக்களில் ரசிகாகளின் கருத்துக்களை பற்றி பார்க்கும்போது இன்று ராஜா ராணி சீரியலுக்கே அதிக வரவேற்பு இருப்பது போல் தெரிகிறது. எப்போதும் சந்தியாவை குறைகூறும் மாமியார் சிவகாரி தற்போது அவரை பற்றி நல்லவிதமாக பேசுவது ஒரு வகை எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளதாக கூறலாம். மற்றபடி ரோஜா சீரியலில் அடுத்து என்ன நடக்கும் என்பதை ரசிகர்கள் ஓரளவு யூகித்து விட்டதால் எதிர்பார்ப்பு இல்லாமல் போய்விட்டது.

மற்றபடி பாண்டியன் ஸ்டோர்ஸ் பாரதி கண்ணம்மா பாக்கியலட்சுமி சீரியல்கள் வழக்கம்போல ரசிகர்களை பார்க்க தூண்டும் விதமாக ப்ரமோக்கள் அமைந்துள்ளது.

“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil

Get the latest Tamil news and Entertainment news here. You can also read all the Entertainment news by following us on Twitter, Facebook and Telegram.

Web Title: Tamil serial update serial promo rating update in tamil serials

Next Story
சுட்டெரிக்கும் சூரியன்… வெயிலில் இருந்து பாதுகாக்க என்ன பண்ணலாம்? டிப்ஸ்!
The moderation of comments is automated and not cleared manually by tamil.indianexpress.com