New Update
/tamil-ie/media/media_files/uploads/2021/08/Tamil-Serial-1.jpg)
Tamil Serial Update : சீரியல்களின் அன்றைய எபிசோடு குறித்து எதிர்பார்ப்பை ஏற்படுத்தும் வகையில், ப்ரமோ வீடியோக்கள் வெளியிடப்பட்டு வருகிறது
Tamil Serial Rating Update : தற்போதைய காலகட்டத்தில் சீரியல் ரசிகர்களும் அதில் நடித்து வரும் நடிகர் மற்றும் நடிகைகளே மக்கள் மத்தியில அதிக வரவேற்பைபெற்று வருகினறனர். ஆனால் சீரியல்கள் அனைத்தும் ரசிகர்கள் மனதை கவர்ந்ததா என்று கேட்டால் இல்லை என்றுதான் சொல்ல வேண்டும். அதேபோல் எத்த்தனை சீரியல்கள் ஒளிபரப்பானாலும் வார இறுதியில் வெளியாகும் டிஆர்பி ரேட்ங்கில் முதல் 5 இடங்களை பெறும் சீரியல்களே அதிக கவனம் பெறுகின்றன. அதற்காக மற்ற சீரியல்கள் எல்லாம் சரியாக போகவில்லை என்று அர்த்தம் அல்ல.
சில சீரியல்கள் அதிகப்படியான ரசிகர்களின் மனதை கவர தவறி விடுகின்றன என்று கூறலாம். இதில் சீரியல்களின் அன்றைய எபிசோடு குறித்து எதிர்பார்ப்பை ஏற்படுத்தும் வகையில், ப்ரமோ வீடியோக்கள் வெளியிடப்படும். அந்த வகையில் இன்று வெளியிடப்பட்டுள்ள ப்ரமோ வீடியோக்களில் எந்த சீரியல் அதிக எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது என்பதை பார்போம்.
பாண்டியன் ஸ்டோர்ஸ்
இந்த பரமோவை பார்த்த ரசிகர் ஒருவர் உங்களுக்கு தனத்து மேல கவலை தனத்துக்கு கண்ணன் மேல கவலை என கூறியுள்ளார். மேலும் பலரும் இன்னும் எத்தனை நாளைக்கு இதே புராணத்தை பாடிக்கொண்டிருப்பீர்கள் என்று கேட்டுள்ளார். தனம் வளைகாப்பு நிகழ்வுக்கு அடுத்து பாண்டியன் ஸ்டோர்ஸ் சீரியல் சற்று சுவாரஸ்யம் குறைந்துள்ளதாகவே ரசிகர்கள் கூறி வருகின்றனர்.
பாரதி கண்ணம்மா
இந்த ப்ரமோவை பார்த்த ரசிகர் ஒருவர் வேதாளம் மறுபடியும் முருங்கைமரம் ஏறிடுச்சு எல்லாமே தெரிஞ்சுக்க ஆசை படு ஆனா டிஎன்ஏ டெஸ்ட் மட்டும் எடுத்திராத என கூறியுள்ளார். அந்த அப்பனே நீ தான்டா மடையா என மற்றொரு ரசிகர் கூறியுள்ளார். இப்போ தான் பா சீரியல்ல சண்டை இல்லாம நல்லா இருந்துச்சு..... மறுபடியும் மொதல இருந்தா என கேட்டுள்ளார். மற்றொரு ரசிகர் லட்சுமியோட அம்மாவ தெரிஞ்சிக்கறதுக்கு முன்னணி ஹேமாவோட அம்மா யாருன்னு தெரிஞ்சிக்க பாரதி என கூறியுள்ளார்.
பாக்யலட்சுமி
இந்த ப்ரமோவை பார்த்த ரசிகர் ஒருவர் ஈஸ்வரிக்கு யாரை பார்த்தாலும் குறைதான் சொல்வாங்களா என்று கேட்டுள்ளார். மற்றொரு ரசிகர், கோபி சார் நீங்க ரொம்ப ஸ்ராங் என்று பதிவிட்டுள்ளார். இதில் ரசிகர்கள் பலரும் பாக்யாவின் நிலைமைகுறித்து கருத்துக்களை பதிவிட்டுள்ளனர்.
ராஜாராணி 2
இந்த ப்ரமோவை பார்த்த ரசிகர் ஒருவர் இப்போ நல்லாதா இருக்கும் வார கடைசியில ரெண்டுபேரும் சண்டை போடுவீங்க என்று பதிவிட்டுள்ளார். மேலும் ரசிகர்கள் பலரும் நீங்க இப்படியே பேசிக்கிட்டு இருங்க சிவகாமி உங்கள குறை சொல்லிக்கிட்டே இருக்கட்டும் என்று கூறியுள்ளனர்.
ரோஜா
இந்த ப்ரமோவை பார்த்த ரசிகர் ஒருவர் சூப்பர் சூப்பர் ரோஜா இன்னைக்கு தான் நீ ஒரு உருப்படியான காரியம் பண்ணியிருக்க சூப்பர் என கூறியுள்ளார். மற்றொரு ரசிகர் திருடனுக்கு தேள் கொட்டிய கதை மாதிரி ஆய்டுச்சி அணு கதை... என கூறியுள்ளார். ஆஹா.... இதற்கு தானே எல்லாரும் ஆவலாக இருக்கிறோம்....என்று கூறியுள்ளார். ரோஜா அருமை, ஒரு வேளையை இப்பதான் உருப்படியா பாக்குற.... என கூறியுள்ளார்.
இந்த கருத்துக்களின் படி பார்க்கும்போது பாரதி கண்ணம்மா சீரியலுக்கே அதிக எதிர்பார்ப்பு நிலவுகிறது என்று கூறலாம். லக்ஷ்மியின் அம்மா கண்ணம்மாதான் என்று கண்டுபிடித்த பாரதி அவளை வீட்டிற்கு தூங்கி வந்துவிடுகிறான் இதனால் அடுத்து என்ன நடக்கும் என்பதை ரசிகர்கள் ஆவலுடள் எதிர்பார்க்கின்றனர். மற்றபடி அனைத்து சீரியல்களும் அந்தந்த ரசிகர்களை திருப்திப்படுத்தும் என கூறலாம்
"தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.