புது துளசி வந்தாச்சு; அட, நம்ம வீட்டுப் பொண்ணு மாதிரியே இருக்காங்க!
Actress Shwetha Khelge replaced by actress Manya in Vanathai Pola serial Tamil News: நடிகை ஸ்வேதா கெல்கே வானத்தைப்போல சீரியலில் இருந்து விலகியுள்ள நிலையில், அவருக்கு பதிலாக நடிக்க இருக்கும் நடிகை குறித்து தற்போது தகவல்கள் வெளியாகியுள்ளது.
Actress Shwetha Khelge replaced by actress Manya in Vanathai Pola serial Tamil News: நடிகை ஸ்வேதா கெல்கே வானத்தைப்போல சீரியலில் இருந்து விலகியுள்ள நிலையில், அவருக்கு பதிலாக நடிக்க இருக்கும் நடிகை குறித்து தற்போது தகவல்கள் வெளியாகியுள்ளது.
Vanathai Pola serial news update in tamil: சன் டிவியில் ஒளிபரப்பாகி வரும் சீரியல்களில் முக்கிய இடத்தை பிடிக்கும் சீரியல் வானத்தைப்போல. டிஆர்பியில் முன்னிலையில் இருந்து வரும் இந்த சீரியல் அண்ணன்– தங்கை பாசத்தை மையமாக கொண்டது. அண்ணன் சின்ராசுவாக நடிகர் தமன் குமாரும், தங்கை துளசியாக நடிகை ஸ்வேதா கெல்கேவும் நடித்து வருகின்றனர்.
Advertisment
அண்ணன் மீது பாசத்தைப் பொழியும் தங்கையாக நடித்து வரும் ஸ்வேதா கெல்கே கடந்த 2019ம் ஆண்டு ஜெமினி டிவி யில் ஒளிபரப்பாகிய "மதுமாசம்" என்ற தெலுங்கு சீரியலில் நடித்தார். இந்த சீரியல் சூப்பர் ஹிட்டானாதைத் தொடர்ந்து குறும்படங்கள், மியூசிக் வீடியோக்களில் தோன்றினார்.
Advertisment
Advertisements
பிறகு சன் டிவியின் வானத்தைப்போல சீரியலில் நடிக்க தொடங்கினார். இந்த சீரியல் மூலம் ஸ்வேதா, சீரியல் ரசிகர்களிடையே வரவேற்பை பெற்றார். இந்த நிலையில், நடிகை ஸ்வேதா வானத்தைப்போல சீரியலில் இருந்து விலகுவதாக சமீபத்தில் தெரிவித்தார். ஒரு சில தவிர்க்க முடியாத காரணத்தினால் சீரியலில் இருந்து விலக உள்ளதாகவும், தன்னை துளிசியாக ஏற்றுக்கொண்டதற்கு ரொம்ப சந்தோஷம் நன்றி என்றும் அவர் தெரிவித்திருந்தார்.
நடிகை ஸ்வேதா கெல்கே வானத்தைப்போல சீரியலில் இருந்து விலகியுள்ள நிலையில், அவருக்கு பதிலாக நடிக்க இருக்கும் நடிகை குறித்து தற்போது தகவல்கள் வெளியாகியுள்ளன. அதன்படி, இந்த சீரியலில் துளசியாக நடிகை "மான்யா" நடிக்க இருக்கிறார். இவர், ஜெமினி டிவியில் ஒளிபரப்பாகிய பிரபல சீரியலான பாக்யரேகா (Bhagyarekha) - வில் நடித்திருந்தார்.
நடிகை ஸ்வேதா நடித்த காட்சிகள் இன்றுடன் நிறைவடைய உள்ள நிலையில், மன்யா நடித்துள்ள காட்சிகள் நாளை முதல் ஒளிபரப்பாகும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த தகவலை உறுதிப்படுத்தும் விதமாக நடிகை மான்ய தனது இன்ஸ்டா பதிவில், "இன்று இரவு 8.00 மணிக்கு சன் டிவியில் எனது முதல் தமிழ் சீரியலைப் பாருங்கள். எனது புதிய பயணத்திற்கு உங்கள் அன்பையும் ஆதரவையும் ஆசீர்வாதங்களையும் பொழியுங்கள்.
சீரியல் ஒளிபரப்பாகும் முன்பே நிறைய அன்பும், ஆதரவும் எனது தமிழ் குடும்பத்தினர் அனைவரும் நன்றி." என்று தெரிவித்துள்ளார்.