தமிழ் சின்னத்திரையில் சீரியல்கள் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று வரும் நிலையில், அவர்களின் முக்கிய பொழுதுபோக்கு அம்சமாகவும் மாறிவிட்டது. இதனை பயன்படுத்திக்கொண்ட சன் டிவி வாரம் முழுவதும், காலை 10 மணிக்கு தொடங்கி நள்ளிரவு வரை சீரியல் மட்டுமே ஒளிபரப்பி வருகிறது. இடையில் செய்திகள், ஒரு திரைப்படம் என்று இருந்தாலும், சீரியலுக்கே அதிக முக்கியத்துவம் கொடுத்து வருகிறது சன்.டிவி.
இந்த நிலையை அப்படியே தொடர வேண்டும் என்பதால், ஒரு சீரியல் முடிவுக்கு வரும் முன்பே அடுத்த சீரியலுக்கான அறிவிப்பை கொடுத்து விடுவார்கள். இதனால், தமிழ் சின்னத்திரை ரசிகர்களிடம் சீரியல் என்று சொன்னால் அது சன்டிவி தான் என்று சொல்வார்கள். அதேபோல் சன் டிவி சீரயில்கள் டி.ஆர்.பி ரேட்டிங்கிலும் மற்ற சேனல்களின் சீரயில்களை பின்னுக்கு தள்ளி முன்னணியில் இருந்து வருகிறது. இதன் காரணமாக மற்ற சேனல்களில் நடித்த நட்சத்திரங்கள் கூட தற்போது சன்டிவி சீரியல்களில் களமிறங்கி வருகனிள்றனர்.
அந்த வகையில், இனியா சீரியலில், ஆலியா மானசா, கயல் சீரயிலில் சைத்ரா ரெட்டி, மருமகள், சீரியலில், கேப்ரியல்லா, மிஸ்டர் மனைவி சீரியலில் ஷபானா, மூன்று முடிச்சு சீரியலில், சுவாதி கொண்டே ஆகியோர் மற்ற சேனல் சீரியலில் நடித்து தற்போது சன்டிவி சீரியலில் என்ட்ரி ஆகியுள்ளனர். இவர்கள் நடித்து வரும் சீரியலுக்கும் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று வருகிறது. கடந்த சில மாதங்களாக அவ்வப்போது புதிய சீரியலை ஒளிபரப்பி வரும் சன்டிவி தற்போது மேலும் ஒரு புதிய சீரயலை களமிறக்க உள்ளது.
அயலி வெப் தொடர் மூலம் கவனம் ஈர்த்த, அபி நட்சத்திரா இந்த சீரியல் மூலம் சின்னத்திரையில் என்ட்ரி ஆக உள்ள நிலையில், கனா காணும் காலங்கள் சீரியலின், நாயகன் பரத் இந்த சீரியலில் நாயகனாக நடிக்க உள்ளார். இந்த சீரியலுக்கு என்னை சரணடைந்தேன் என்று டைட்டில் வைக்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. ஆலியா மானசா நடித்து வரும் இனியா சீரியல் விரைவில் முடிவடைய உள்ளதால், அந்த சீரியலுக்கு பதிலாக இந்த சீரியல் ஒளிபரப்பாக உள்ளது.
அதேபோல் சமீபத்தில் மருமகள், மூன்று முடிச்சு என சில புதிய சீரியல்களை ஒளிபரப்பிய சன் டிவி அந்த வரிசையில் மேலும் ஒரு புதிய சீரியலை கையில் எடுத்துள்ளது.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“