தமிழகத்தில் பெருகி வரும் கொரோனா தொற்று பெரும் பாதிப்பை ஏற்படுத்தி வருகிறது. இந்த பாதிப்பு காரணமாக முழு ஊடங்கு அமல்படுத்தப்பட்டுள்ள நிலையில் மக்கள் பெரும் சிரமத்தை சந்தித்து வருகின்றனர். மேலும் திரைப்படம் மற்றும் சின்னத்திரை படப்பிடிப்புகள் ரத்து செய்யப்பட்டதால் தொலைக்காட்சி சீரியல்களும் சரியான நேரத்தில் ஒளிபரப்ப முடியாத நிலை உருவாகியுள்ளது.
இதனால் தொலைக்கட்சிகள் பழைய ஹிட் சீரியல்கள் மற்றும் ஹிட் ரியாலிட் ஷோக்களை ஒளிபரப்பு செய்து வருகிறது. மேலும் சீரியல்களுக்கு பெயர்போன சன்டியில் முக்கிய சீரியல்கள் நேரத்தை மாற்றி உள்ளது. சன்டியில் அதிக வரவேற்பை பெற்று வரும் ரோஜா சீரியல் 7 மணிக்கு ஒளிபரப்பாகி வந்த நிலையில், இனி இரவு 9 மணிக்கு ஒளிபரப்பாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
சுந்தரியுடன் இனி வரும் நாளில் இரவு 7 மணிக்கு பயணம்கொள்ள வாருங்கள்
— Sun TV (@SunTV) May 22, 2021
Sundari| From Monday| 7 PM#SunTV #Sundari #SundariOnSunTV pic.twitter.com/GVXx0bB0BB
இனி உங்கள் அன்பான ரோஜா இரவு 9 மணிக்கு மலரப்போகிறாள்
— Sun TV (@SunTV) May 22, 2021
Roja| Monday – Friday| 9 PM#SunTV #Roja #RojaOnSunTV pic.twitter.com/xdIG7zYQjQ
மேலும் மற்றொரு முன்னணி தொலைகாட்சியான விஜய் டிவியில் ஒளிபரப்பாகும் பாரதி கண்ணம்மா சீரியலும் 9 மணிக்கு ஒளிபரப்பாகி வருகிறது. இந்த இரண்டு சீரியல்களுக்கும் இடைய டிஆர்பி ரேட்டிங்கில் கடும் போட்டி நிலவி வரும் நிலையில், தற்போது இந்த இரண்டு சீரியல்களுக்கும் ஒரே நேரத்தில் ஒளிபரப்பாக உள்ளதால், ரசிகர்கள் மத்தியில் ஒருவித எதிபார்ப்பு எழுந்துள்ளது.
மேலும் ரோஜா சீரியல் 9 மணிக்கு மாற்றப்பட்டு உள்ளதாக சன் டிவி வீடியோ மூலம் அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது.