/tamil-ie/media/media_files/uploads/2021/03/serial-roja.jpg)
Tamil Serial Update Suntv Roja Serial End : சன்டிவியில் ஒளிபரப்பாகி வரும் இரண்டு சீரியல்கள் முடிவுக்கு வரவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளதால் ரசிகர்கள் கவலையடைந்துள்ளனர்.
தமிழகத்தில் சீரியல்களுக்கு மக்கள் மத்தியில் பெரும் வரவேற்பு உள்ளது. இதனால் பல தொலைக்காட்சிகள் மக்களை கவர புதிய சீரியல்களை களமிறங்கி வருவதால் பல பழைய சீரியல்கள் முடிவுக்கு வருகிறது. அந்த வகையில் சன்டிவியில் ஒளிபரப்பாகி இரண்டு சீரியல்கள் முடிவுக்கு வரவுள்ளது.
சன்டிவியில் ஒளிபரப்பாகி வரும் சீரியல்களில் அதிக பெண் ரசிகர்கள் கொண்ட சீரியல் ரோஜா. பிரியங்கா நல்காரி, சுப்பு சூரியன் வடிவுக்கரசி ஆகியோர் முதன்மை கதாப்பாத்திரத்தில் நடித்து வரும் இந்த சீரியல் மக்கள் மத்தியில் அதிக வரவேற்பை பெற்று வருகிறது. இதில் முக்கியமாக ரோஜா அர்ஜூன் இடையேயான ரொமான்ஸ் காட்சிகளுக்காகவே தனி ரசிகர்கள் பட்டாளம் உள்ளது. மாதந்தோறும் வெளியாகும் தொலைக்காட்சி டிஆர்பி ரேட்டிங்கில் கண்டிப்பாக ரோஜா சீரியலுக்கு தனி இடம் உண்டு.
அந்த வகையில் மக்களின் பேராதரவை பெற்ற இந்த சீரியல், தற்போது முடிவுக்கு வர உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளதால் ரசிகர்கள் கவலையடைந்துள்ளனர். இந்த சீரியலில் ரோஜா தான் வடிவுக்கரசியின் உண்மையாக பேத்தி என்று ரோஜாவுக்கு தெரியவந்துள்ள நிலையில், தற்போது ரோஜா அவருடைய அம்மாவை விரைவில் சந்திக்க உள்ளது போன்ற காட்சிகள் இடம்பெற உள்ளது.
அவர் தன்னுடைய அம்மாவை சந்தித்து விட்டால், அனு பற்றிய உண்மை வெளியாகும். அதே போல் ரோஜாவின் தந்தை மாணிக்கம் என்பதும் தெரியவரும். எனவே விரைவில் ரோஜா சீரியல் முடிய உள்ளதாக கூறப்படுகிறது. இதனால் ரசிகர்கள் கவலையடைந்துள்ள நிலையில், மற்றொரு அதிச்சியாக மதியம் 12 மணியளவில் ஒளிபரப்பாகும் அக்னி நட்சத்திரம் சீரியல் தான் முடிவுக்கு வரவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
"தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.