Roja Serial Today Episode Update : உடம்பு சரியில்லை என்று அனைவரையும் ஏமாற்றிக்கொண்டிருக்கும் அன்னப்பூரணி "செண்பகத்திடம் இருக்கும் அனைத்து குணங்களும் ரோஜாவிடம் இருக்கிறது. என் மகளிடம் இருக்கும் அதே பாசம் ரோஜாவிடமும் இருக்கிறது" அன்னப்பூரணி டைகர் மாணிக்கத்திடம் சொல்கிறார். இதை கேட்ட டைகர் மாணிக்கம் கடுப்பாகி, "நீங்க நல்ல நடிகைன்னு எனக்கு தெரியும்.
அர்ஜுன் அனுவை ஜெயிலுக்கு அனுப்பிவிட்டு ரோஜாவை இந்த வீட்டு வாரிசாக்க பார்க்கிறான். அதற்கு நீங்களும் துணை போகிறீர்கள்" என சராமாரியாக திட்டுகிறான். இதை கேட்டு கோபமாகும் ரோஜா பாட்டி தான் எங்கள் சொத்து என கூற,'இங்க இருக்கும் சொத்தையும், நான் சேர்த்து வைத்திருக்கும் சொத்தையும் அடித்துக்கொண்டு போக நீயும் அர்ஜுனும் இப்படி செய்ரீங்க. ரோஜா நீ யாருக்கு பிறந்தனு உனக்கே தெரியாது. அனு எனக்கு பிறந்தவள் என் கூறுகிறான் டைகர் மாணிக்கம்.
மேலும் அவளை ஜெயிலுக்கு அனுப்பிவிட்டு நீங்கள் கூத்தடித்து கொண்டிருக்கிறீர்கள். அனுவை என்னால் வெளியில் கொண்டு வர முடியும். ஆனால் ரோஜாவை செண்பகத்தின் மகள் என்றோ, என் வாரிசு என்றோ ஏற்றுக்கொள்வேன் என கனவில் கூட நினைக்காதீங்க என என சொல்கிறான்.
அடுத்து அர்ஜுனுக்கு பொண்டாட்டியா நடிக்க வந்தவ தான் நீ என சொல்லி ரோஜாவை திட்ட இவருக்கும் வாக்குவாதம் ஏற்பட்டு டைகர் மாணிக்கம் ரோஜாவை அடிக்க கை ஓங்குகிறார். அப்போது அவர் கையை பிடிக்கும் அர்ஜூன், நான் உங்களை விட பலசாலி, என் கையை நான் ஓங்கினால், அந்த அவமானத்தை உங்களால் தாங்க முடியுமா என சொல்கிறான்.
இதை தொடர்ந்து ரோஜா டைகர் மாணிக்கம் பொண்ணுதான் என்பதை நிரூபிக்க டிஎன்ஏ டெஸ்ட் எடுக்க கோர்ட்டில் கேட்கலாம் என அர்ஜுன் கூறி, கையெழுத்து போட சொல்கிறார் அர்ஜுன். ஆனால் கையெழுத்து போட மறுக்கும் ரோஜா, எப்போது நான் சொத்துக்காக தான் இப்படி கூறுகிறேன் என சொல்லிவிட்டாரோ, அப்போதே நான் இதை நிரூபிக்க வேண்டாம் என முடிவெடுத்துவிட்டேன் என சொல்கிறார்.
ஆனால் அர்ஜூன் ஒருவழியாக ரோஜாவை சமாதானப்படுத்தி கையெழுத்து போட வைக்கிறார். கையெழுத்து போடப்போகும் நேரத்தில் பாட்டி நெஞ்சுவலி என சொல்லி நடிக்கிறார். இதனால் அனைவரும் பரபரப்க்க, அது நடிப்பு என தெரிந்ததால் அர்ஜுன் அமைதியாக தான் இருக்கிறார். சற்றுநேரத்தில் தனக்கு சரியாகிவிட்டது என சொல்லி அமர்கிறார்.
அதன் பின் மீண்டும் ரோஜா டிஎன்ஏ டெஸ்ட் இப்போது வேண்டாம் என முடிவெடுக்கிறார். அதன்பின், யாரும் இல்லாத நேரம் பார்த்து டைகர் மாணிக்கத்தை சந்திக்கும் அன்னப்பூரணி ரோஜாவை தன் பக்கம் இழுக்க தான் இப்படி நடித்து வருவதாக கூற அத்துடன் முடிகிறது இன்றைய எபிசோடு
"தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil