Tamil serial update Tamil News: சின்னத்திரையில் சீரியல்களுக்கு பஞ்சமே இல்லை என்றும் கூறும் அளவிற்கு வரிசை கட்டி உள்ளன. இருப்பினும், சீரியல்களை ஒளிபரப்பும் தொலைக்காட்சிகளுக்கு இடையே நிகழும் போட்டியால் அவ்வப்போது புதுப் புது சீரியல்கள் தோன்றிய வண்ணம் உள்ளன. அந்த வகையில் சின்னத்திரையில் சீரியல்களை ஒளிபரப்புவதில் கொடி கட்டி பறக்கும் சன் டிவி ‘தாலாட்டு’ எனும் புதிய சீரியலை சமீபத்தில் ஒளிபரப்ப துவங்கியுள்ளது.
திங்கள் முதல் சனிக்கிழமை வரை மதியம் 2.30 மணிக்கு ஒளிபரப்பாகும் இந்த சீரியலுக்கு ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு உள்ளது. இதில் ‘தெய்வமகள்’ சீரியலில் ஹீரோவாக நடித்த ‘கிருஷ்ணா’ மற்றும் ‘துளசி’ சீரியல் பிரபலம் ‘ஸ்ருதி’ முக்கிய கதாப்பாத்திரத்தில் நடிக்கின்றனர்.
அம்மாவின் பாசம் ஹீரோவுக்கு கிடைக்குமா என்ற கதைக்களத்தை கொண்ட இந்த சீரியலில், ஜீ தமிழில் ஒளிபரப்பாகும் செம்பருத்தி சீரியலில் மித்ராவாக நடித்த ‘பாரத நாயுடு’ நடிக்க உள்ளதாக தனது இன்ஸ்டா பக்கத்தில் தெரிவித்துள்ளார்.

‘யாரடி நீ மோகினி’, ‘தேவதையை கண்டேன்’ (ஓவியாவாக) போன்ற சீரியல்களில் நடித்து கவனம் பெற்ற பாரத நாயுடு தொழில்முனைவோராக மாறி, பின் மேக்கப் பயிற்சி அகாடமி ஒன்றை தொடங்கினார். கடந்த ஆண்டு பிப்ரவரியில் பரத் என்பவரை மணந்து கொண்டார். இவர் கடையாக செம்பருத்தி சீரியலில் நடித்திருந்தார். இதில் எதார்த்தமான நடிப்பை வெளிப்படுத்திய அவருக்கு மேலும் புகழை தேடித்தந்தது.

தற்போது நடிகை பரதா நாயுடு, சன் டிவியில் ஒளிபரப்பாகி வரும் புத்தம் புதிய தொடரான ‘தலாட்டு’ -வில் மீண்டும் நடிக்க இருக்கிறார். இது குறித்து தனது இன்ஸ்டா பதிவில், “திங்கள் முதல் சனி வரை பிற்பகல் 2.30 மணிக்கு சன் டிவியில் ஒளிபரப்பாகும் ‘தலாட்டு’ சீரியலைத் தவறவிடாதீர்கள். தொடர்ந்து ஆசீர்வதிக்கவும்” என்று பதிவிட்டு வீடியோ ஒன்றையும் பகிர்ந்துள்ளார்.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற ” (https://t.me/ietamil)