கல்யாணம் முடிஞ்சிடுச்சா? ‘அவரும்’ மீடியாதானாம்! சன் டிவி சீரியல் நடிகை அப்டேட்

Serial actress Actress Nakshatra Nagesh opens about her marriage Tamil News: பிரபல தொகுப்பாளினியும், லட்சுமி ஸ்டோர்ஸ் சீரியல் நடிகையுமான நக்சத்ரா நாகேஷ், தனது திருமணம் குறித்த அப்டேட் கொடுத்துள்ளார்.

Tamil serial update Tamil News: Serial actress Actress Nakshatra Nagesh opens about her marriage

Tamil serial update Tamil News: இந்தியாவில் கொரோனா தொற்று பரவல் அதிகரித்து வரும் நிலையில், திருமண மற்றும் குடும்ப நிகழ்வுகளை ரொம்ப எளிமையா பலர் நடத்தி வருகின்றனர். அந்த வகையில் திரை மற்றும் சீரியல் நட்சத்திரங்களும் தங்களுடைய குடும்ப நிகழ்வுகளை ஆடம்பரம் இல்லாமல் சுருக்கமாக நடந்தி வருகிறார்கள்.

இந்த நிலையில், பிரபல தொகுப்பாளினியும், லட்சுமி ஸ்டோர்ஸ் சீரியலில் முக்கிய ரோலில் நடித்து வரும் நடிகையுமான நக்சத்ரா நாகேஷ், கடந்த சில நாட்களுக்கு முன்னர் தான் தனது திருமண நிச்சயதார்தத்தை முடித்துள்ளார்.

தொலைக்காட்சிகளில் தொகுப்பாளினியாக தனது வாழ்க்கையை துவங்கிய நக்சத்ரா, பல முன்னணி நடிகர், நடிகைகளை பேட்டி கண்டவர். மேலும் பல பிரம்மாண்டமான நிகழ்ச்சிகளையும் தொகுத்து வழங்கியுள்ளார். தொடர்ந்து பல நிகழ்ச்சிகளை தொகுத்து வழங்கிய அவருக்கு, சன் டிவியில் ஒளிபரப்பாகி வரும் லட்சுமி ஸ்டோர்ஸ் சீரியலில் முக்கிய ரோல் கிடைத்தது. இந்த ரோலில் மிகவும் எதார்த்தமாக நடித்து வரும் இவர், பல சீரியல் ரசிகர்களின் மனங்களை கவர்ந்துள்ளார்.

கடந்த ஜனவரி மாதத்தில் தனது வருங்கால கணவரை வெளியுலகிற்கு அறிமுகம் செய்த நக்சத்ரா, அவரின் புகைப்படங்களை தனது இன்ஸ்டாகிராம் பகிர்ந்தார். மேலும் தனது வருங்கால கணவர் குறித்து அவர் கூறுகையில், “பள்ளியில் படிக்கும்போதே நானும் அவரும் ஒரே தியேட்டர் குழுவில் தான் இருந்தோம்.அப்படி தான் எங்களுக்குள் பழக்கம் ஏற்பட்டது. ஆனால், அது எப்போது காதலாக மாறியது என்று தெரியாது. அவரும் மீடியா சம்மந்தப்பட்ட துறையில் தான் இருக்கிறார்” என்றார். மேலும் விரைவில் தங்களது திருமண நாளை அறிவிப்போம் என்றும் கூறியிருந்தார்.

இந்த நிலையில், நக்சத்ராவும் அவரது வருங்கால கணவரும் திருமணத்திற்கு முன்பாக நடத்தப்படும் மெஹந்தியில் எடுத்துக்கொண்ட புகைப்படங்கள் இணையத்தில் வைரலாகின. இந்த புகைப்படங்களை பார்த்த அவரது ரசிகர் ஒருவர் ‘உங்களுக்கு இன்னும் திருமணம் முடியவில்லை தானே?… உங்களது சில புகைப்படங்களை பார்த்து திருமணம் ஆகி விட்டதோ என குழம்பிப்போனேன்’ என்று தெரிவித்திருந்தார்.

தனது ரசிகரின் கேள்விக்கு பதிலளித்த நக்ஷத்திரா நிறைய பேர் அப்படிதான் நினைக்கிறார்கள் என்றும், அவை தனது நிச்சயதார்த்தத்தில் எடுக்கப்பட்டவை என்று விளக்கம் அளித்துள்ளார்.

“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற  ” (https://t.me/ietamil)

Get the latest Tamil news and Entertainment news here. You can also read all the Entertainment news by following us on Twitter, Facebook and Telegram.

Web Title: Tamil serial update tamil news serial actress actress nakshatra nagesh opens about her marriage

Next Story
செம லுக்..அழகு தேவதையாக ஜொலிக்கும் ஹீமா ஃபோட்டோஸ்Bindhu Hima
The moderation of comments is automated and not cleared manually by tamil.indianexpress.com