தொலைக்காட்சியில் நிகழ்ச்சிகளை தொகுத்து வழங்கும் தொகுப்பாளினிகளுக்கு ரசிகர்கள் மனதில் எப்போதும் தனி இடம் உண்டு. அந்த வகையில் விஜய் டிவியில், ஒளிபரப்பாகும் கலக்கப்பபோவது யாரு நிகழ்ச்சியை தொகுத்து வழங்கி தனக்கென தனி ரசிகர் பட்டாளத்தை உருவாக்கியவர் நடிகை ஜாக்லின். தொலைக்காட்சியில் தொகுப்பாளினி ஆவதற்கு அழகு முக்கியமல்ல என்பதை உறுதியாக நிரூபித்த இவர், விஜேவாக தனி இடத்தை பிடித்தார்.
ஜாக்லின் பெர்னாண்டஸ் என்று முழு பெயர் கொண்ட இவர், விஜய் டிவியில் ஒளிபரப்பாகிய கனா காணும் காலங்கள் மற்றும் ஆண்டாள் அழகர் ஆகிய சீரியலில் நடித்து உள்ளார். தொடர்ந்து சினிமாவில் கால்பத்தித்த அவர், கோலமாவு கோகிலா என்ற படத்தில் நயன்தாராவுடன் நடித்து பிரமிக்க வைத்தார். அதனைத் தொடர்ந்து கடந்த ஆண்டு துல்கர் சல்மான் நடிப்பில் வெளியாகி வெற்றி பெற்ற ‘கண்ணும் கண்ணும் கொள்ளையடித்தால் ‘ படத்தில் சிறிய வேடத்தில் நடித்திருந்தார்.
மக்கள் மத்தியில் வீஜேவாக பெரும் வரவேற்பை பெற்ற இவர் தற்போது, விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும், தேன்மொழி சீரியலில் முதன்மை கதாப்பாத்திரத்தில் நடித்து வருகிறார். சமூக வலைதளங்களில் எப்போதும் ஆக்டீவ்வாக இருக்கும் ஜாக்லின் அடிக்கடி தனது நடவடிக்கைகளை புகைப்படங்களாக பதிவிடுவது வழக்கம். அந்த வகையில் சமீபத்தில்தனது கையில் புதிதாக குத்தி டாட்டூவை புகைப்படம் எடுத்து தனது இன்ஸ்டாகிராம் ஸ்டோரியில் பதிவிட்டுள்ளார். அதில் டாட்டூ குத்தி பதிவிட்டும் அவரது கையில் பிளேடால் கீரி இருக்கும் சில காயங்களும் தெரிகிறது. ஒரு வேலை அதை மறைக்கத் தான் டாட்டூ குத்தியுள்ளாரோ என்ற ஒரு சந்தேகமும் எழுந்தது.
இது குறித்து ரசிகர்கள், ஜாக்லின் கையில் இப்படி பிளேடால் அறுத்த காயங்கள் இருக்கிறது என்று தங்களது கேள்வி எழுப்பி வருகின்றனர். தற்போது இந்த புகைப்படம் பெரும் வைரலாகி வருகிறது.