பாரதியிடம்சவால் விட்ட கண்ணம்மா… பரபரப்பாகும் மகாசங்கமம்

பாரதி கண்ணம்மா மற்றும் ராஜா ராணி மகாசங்கம் சீரியல் விறுவிறுப்பான கட்டத்தை எட்டியுள்ளது.

Tamil Serial Update Bharathi Kannamma And Raja Rani Mahasangamam : பாரதி கண்ணம்மா ராஜா ராணி சீரியல் மகாசங்கமத்தில் கணவர் பாரதிக்கு விட்ட சவாலில் கண்ணம்மா வெற்றி பெறுவாரா என்ற எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.

விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் சீரியல்களுக்கு மக்கள் மத்தியில் பெரும் வரவேற்பு இருந்து வருகிறது. இதில் மக்களிடம் சீரியல் குறித்து சுவாரஸ்யத்தை அதிகரிக்கும் வகையில் இரண்டு ஹிட் சீரியல்களை ஒன்றிணைத்து ஒளிபரப்பி வருகின்றனர். அந்த வகையில் தற்போது மக்களிடம் அதிக வரவேற்பை பெற்று வரும் பாரதி கண்ணம்மா மற்றும் ராஜா ராணி ஆகிய இரண்டு சீரியல்களும் ஒன்றிணைத்து ஒளிபரப்பாகி வருகிறது. கடந்த 2 வாரங்களாக நடைபெற்று வரும் இந்த மகாசங்கம் மக்களிடம் அதிக வரவேற்பை பெற்று வருகிறது.

சிறந்த கணவன் மனைவியை தேர்ந்தடுக்கும் வகையில், நடைபெறும் நிகழ்ச்சியில், பாரதி கண்ணம்மா மற்றும் ராஜாராணி குடும்பத்தினர் பங்கேற்று வருகின்றனர். இந்த நிகழ்ச்சியில் பிக்பாஸ் நிகழ்ச்சியில் கலந்துகொண்ட பிரபலங்கள் பலரும் சிறப்பு விருந்தினர்களாக கலந்துகொண்டு வரும் நிலையில் கடந்த வாரம் குக் வித் கோமாளி நிகழ்ச்சியின் பிரபலங்கள் சிறப்பு விருந்தினர்களாக கலந்துகொண்டு வருகின்றனர். இதில் வெற்றி பெறுவது யார் என்பது குறித்து இரு குடும்பங்களுக்கு இடையே கடும் போட்டி நிலவி வருகிறது.

கணவர் குடும்பத்துடன் தகராறு இருந்தாலும் தன் அத்தையின் ஆசையை நிறைவேற்றும் வகையில் கண்ணம்மா இந்த போட்டியில் கலந்துகொண்ட அனைத்திலும் வெற்றி பெற்று வருகிறார். ஆனால் இதை பிடிக்காத கணவன் பாரதி, தனியாக அமர்ந்திருக்கும் கண்ணம்மாவிடம் ஒட்டும் இல்ல உறவும் இல்லன்னு பிரிஞ்சுட்டு வந்த பிறகு ‘நீ எதுக்குடி இங்க வந்த’ என பாரதி கேட்கும் போது, இதெல்லாம் போய் உன் அம்மாகிட்ட போய் கேளு, ‘அங்க பேச தைரியம் இல்லம்மா என்கிட்டே வந்து பேசாத’ என கண்ணம்மா தனது கோபத்தை வெளிப்படுத்தகிறார். எல்லா போட்டிலையும் ஜெயிச்சுட்டு இருக்கோம், அப்படியே வீட்டுக்கு வந்துடலாம்னு நினைச்சுடாத என பாரதி அடுத்த வார்த்தை விடுகிறார்.

ஆனால் ‘நீ செத்தா கூட உன் வீட்டுக்கு நான் வர மாட்டேன்’ என கண்ணம்மா சிரித்தபடியே சொல்கிறார். எல்லா போட்டிலையும் ஜெயிச்சுட்டேன்னு திமிருல பேசாதடி, ‘அடுத்த போட்டில கண்டிப்பா தோல்வி அடைவ’ என பாரதி சொல்ல, இதுக்காகவே நான் ஜெயிச்சு காட்டுறேன்டா என கண்ணம்மா சவால் விடுகிறாள்.  இது ஒருபுறம் இருக்க மறுபுறம், கண்ணாமாவை வீழ்த்த வெண்பாவும், சந்தியாவை வீழ்த்த பார்வதியும் அடுக்கடுக்கான பல முயற்சிகளில் ஈடுபட்டு வருகின்றனர்.

இதில் உடல் பலத்தை சோதிக்கும் இறுதிப்போட்டியில், கண்ணம்மா, சந்தியா குடிக்கும் ஜுஸில் தூக்க மாத்திரை கலந்து, அவர்கள் குடிக்கிறார்களா என வெண்பாவும், பார்வதியும் ஓரமாக நின்னு வேடிக்கை பார்க்கின்றனர். இதில் கண்ணம்மா எனக்கு பிடிக்காது ஜுஸ் வேண்டாம் என சொல்லிவட சந்தியா ஜூஸை குடித்து விடுகிறார். இதனால் போட்டியாளராக கண்ணம்மா, சந்தியா இருவரும் களத்தில் நிற்கும் போது, சந்தியா பாதி தூக்கத்தில் முடியாமல் நிற்கிறாள். ஆனால் சின்ன பொண்ணு, அவுங்களோட வாழ்க்கை நல்ல இருக்கட்டும்’ என்று அவளுக்காக விட்டு கண்ணம்மா விட்டு கொடுக்கிறாள். அதைதொடர்ந்து சந்தியா கடைசி போட்டியின் வின்னராகிறார்.

தனது அத்தைக்காக போட்டியில் களமிறங்கிய கண்ணம்மா வெற்றி பெற்று கணவரிடம் விட்ட சவாலை நிறைவேற்றுவரா? அல்லது சந்தியாவின் வாழ்க்கைக்காக இனிவரும் போட்டிகளில் விட்டுக்கொடுப்பாரா என பெரும் எதிர்பார்ப்பு எழுந்துள்ளதால் இனிவரும் எபிசோடுகள் விறுவிறுப்புகளின் உச்சமாக இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil

Get the latest Tamil news and Entertainment news here. You can also read all the Entertainment news by following us on Twitter, Facebook and Telegram.

Web Title: Tamil serial update vijay tv bharathi kannamma raja rani mahasangamam

Next Story
ரஜினிக்கு அல்ல… மக்கள் ரசனைக்கான விருதுdadasaheb phalke award, superstar rajinikanth, dadasaheb phalke award winner rajinikanth, rajinikanth achivements in indian cinema, ரஜினிகாந்த், சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த், மன்னன், தாதாசாகேப் பால்கே விருந்து, rajinikanth achivements in world cinema, திராவிட ஜீவா கட்டுரை, king of tamil cinema, rajinikanth, dravida jeeva article
The moderation of comments is automated and not cleared manually by tamil.indianexpress.com