பாண்டியன் ஸ்டோர்ஸ் ‘செட்’டில் என்ன ஜாலி பாருங்க… நடிகரின் சமையலை நடிகைகள் ருசித்த வீடியோ

Tamil Serial Update : பாண்டியன் ஸ்டோர்ஸ் சீரியல் படப்பிடிப்பு தளத்தில் பெண்கள் தினத்தை முன்னிட்டு வைக்கப்பட்ட விருந்து நிகழ்வு வைரலாகி வருகிறது.

author-image
WebDesk
New Update
பாண்டியன் ஸ்டோர்ஸ் ‘செட்’டில் என்ன ஜாலி பாருங்க… நடிகரின் சமையலை நடிகைகள் ருசித்த வீடியோ

Pandian Stores Serial Update : பெண்கள் தின ஸ்பெஷலாக பாண்டியன் ஸ்டோர்ஸ் சீரியல் நடிகர் தனது செட்டில் உள்ள அனைவருக்கும் விருந்து வைக்கப்பட்ட நிகழ்வு வைரலாகி வருகிறது.

Advertisment

சின்னத்திரையில் திரைப்படத்திற்கு இணையாக மக்கள் மத்தியில் வரவேற்பை பெற்ற சீரியல் பாண்டியன் ஸ்டோர்ஸ். தொலைக்காட்சி டிஆர்பியில் முக்கிய பங்கு வகிக்கும் இந்த சீரியல் தமிழில் பெற்ற வரவேற்பை தொடர்ந்து பல மொழிகளில் ரீமேக் செய்யப்பட்டு ஒளிப்பரப்பாகி வருகிறது. இந்த சீரியலில், முன்னணி கதாப்பாத்திரமான தனலட்சுமியாக நடித்து வரும் சுஜிதா, ஸ்டாலின், வெங்கட் ரகுநாதன், குமரன்,ஹேமா ஆகியோர்களின் நடிப்பு மக்கள் மத்தியில் நீங்கா இடம் பிடித்து வருகிறது.

இந்த சீரியல்ல நடிக்கும் அனைத்து கதாப்பாத்திரத்திற்கும் தனியாக ரசிகர்கள் கூட்டம் உள்ளது. கூட்டு குடும்பங்களின் முக்கியத்துவம், சகோதரர்களின் பாசம் ஆகிவற்றை மையமாக கொண்ட இந்த சீரியலில், ஜகன்நாதன் என்ற ரோலில் நடித்து வருபவர் டேவிட் சாலமன் ராஜா. இந்த சீரியலில் மூத்த அண்ணன் மூர்த்திக்கு நெருக்கமாக இருக்கும் நபராக நடித்து வரும் இவர், பெண்கள் தினத்தை முன்னிட்டு செய்த செயல் தற்போது வைரலாகி வருகிறது.

உலகம் முழுவதும் நேற்று முன்தினம் (மார்ச் 8) பெண்கள் தினம் கொண்டாடப்பட்டது. இந்த நாளை முன்னிட்டு பாண்டியன் ஸ்டோர்ஸ் படப்பிடிப்பு தளத்தில் உள்ள அனைவருக்கும் விருந்து வைத்துள்ளார்.

Advertisment
Advertisements

 

View this post on Instagram

 

A post shared by David solomon raja (@davidsraja)

இந்த விருந்து சாப்பிட்ட அனைத்து நடிகர்களும், அவரது சமையல் திறமையை பார்த்து அனைவரும் வியந்து பாராட்டி இருக்கிறார்கள். இதில் குறிப்பாக தனம் ரோலில் நடிக்கும் சுஜிதா மீனா உள்ளிட்டவர்கள் அவரை பாராட்டி தள்ளி இருக்கிறார்கள். இது தொடர்பான வீடியோவையும் டேவிட் இன்ஸ்டாகிராமில் வெளியிட்டு உள்ளார். அதில் "Women's day SPL. Shooting atrocities" என அவர் பதிவிட்டு இருந்தார். தற்போது இந்த வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது.

"தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற  t.me/ietamil"
Pandian Strores Serial

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us: