Tamil Serial Sundari Neeyum Sundaran Naanum : விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் சுந்தரி நீயும் சுந்தரன் நானும் என்ற சீரியல் விரைவில் முடிக்கு வர இருப்பதாக கூறப்படுகிறது.
தமிழத்தில் தொலைக்காட்சி சீரியல்களுக்கு எப்போதும் மக்களிடம் பெரும் ஆதரவு இருந்து வருகிறது. அதிலும கடந்த சில வருடங்களாக திரைப்படங்களுக்கு இணையாக சீரியல்களும் மக்கள் மத்தியில் பெரும் வரவேற்பை பெற்று வருகிறது. இதனை மேலும் அதிகரிக்கும் விதமாக கடந்த ஆண்டு கொரோனா பாதிப்பு காரணமாக அமல்படுத்தப்பட்ட ஊரடங்கு உத்தரவின்போது, சீரியல் பார்க்காத மக்களையும் சீரியல் பக்கம் அவர்களது கவனத்தை திருப்ப வழி செய்தது. இதில், கொரோனா ஊரடங்கு காலத்தில் படப்பிடிப்பு நடத்ததால், சில சீரியல்கள் நிறுத்தப்பட்டாலும், சீரியல்களுக்கு உண்டான மவுசு குறையவில்லை என்றே கூறலாம்.
இதில் டிஆர்பியை ஏற்றுவதற்காக சில சேனலில் புதிய முயற்சிகளை மேற்கொண்டு வருகின்றன. இந்த புதிய முயற்சியை மேற்கொள்வதில் விஜய் டிவி முன்னிலையில் உள்ளது. இந்த சேனலில் ஒளிபரப்பாகும் தொடர்களுக்கு, நிகழ்ச்சிகளும் மக்கள் மத்தியில் மிகுந்த வரவேற்பை பெற்று வருகிறது. இதில் கொரோனா தொற்று காரணமாக அமல்படுத்தப்பட்ட ஊரடங்கு உத்தரவில், பல சீரியல்கள் நிறுத்தப்பட்டாலும், கட்டுப்பாடுகள் தளர்த்தப்பட்டு மீண்டும் சீரியல் ஒளிபரப்பாகும்போது சில சீரியல்கள் நிறுத்தப்பட்டது.
அந்த வகையில், விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வந்த ‘ஆயுத எழுத்து’ சீரியல் நிறுத்தப்பட்டது ரசிகர்ளிடம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்திய நிலையில், தற்போது, மேலும் ஒரு சீரியல் முடிவுக்கு வருவதாக அறிவிக்கப்பட்டுள்ளது. அப்துல் கபீஸ் என்பவரின் இயக்கத்தில், கடந்த 2019 ஆம் ஆண்டு ஜூலை மாதம் துவங்கப்பட்ட சுந்தரி நீயும் சுந்தரன் நானும் சீரியல் நிறைவடைய இருக்கிறது. வினோத் பாபு மற்றும் தேஜஸ்வினி ஆகியோர் முதன்மை கதாப்பாத்திரத்தில் நடித்து வந்த இந்த சீரியலுக்கு மக்கள் மத்தியில், எதிர்பார்த்தபடி ஆதரவு கிடைக்கவில்லை. இதனால், விரைவில் நிறைவடைய இருக்கிறது.
சமீபத்தில் இந்த சீரியல் குழுவினர் அனைவரும் எடுத்துக்கொண்ட புகைப்படங்கள் சமூக வலைதளத்தில் வைரலாக பரவி வருகிறது. மேலும், விரைவில் துவங்க இருக்கும் ராஜ பார்வை சீரியலால் தான் இந்த சீரியல் முடிவுக்கு வந்ததாக கூறப்படுகிறது.