Vijay TV Serial TRP Rating Update : தற்போதைய காலகட்டத்தில் திரைப்படங்களை விட சின்னத்திரை சீரியல்களுக்கே அதிக வரவேற்பு இருந்து வருகிறது. கொரோனா தொற்று காரணமாக தியேட்டர்கள் மூடப்பட்டதால் சீரியல் பார்க்காத பலரும் பொழுதுபோக்குக்காக சீரியல் பார்க்க தொடங்கி தற்போது சீரியலுக்கே ரசிகராகும் நிலைக்கு தள்ளப்பட்டுள்ளது. இதனால் நாள் தோறும் தொலைக்காட்சியில் டிஆர்பி ரேட்டிங் உச்சத்தை தொட்டு வருகிறது.
இதனை பயன்படுத்திக்கொள்ளும் தொலைக்காட்சிக்கள் அவ்வப்போது புதிய சீரியல்களை களமிறங்கி வருகின்றனர். ஏற்கவே பழைய சீரியல்கள் ஹிட்டாக ஓடிக்கொண்டிருக்கும் நிலையில், புதிய சீரியல்கள் எப்படி இருக்கும் என்பது குறித்து ரசிகர்களிடம் பெரும் எதிர்பார்ப்பு எழுந்துள்ளது என்றே கூறலாம். இதில் ரசிகர்களின் ரசனைக்கேற்ப புதிய சீரியல்களை ஒளிபரப்பு செய்வதில் விஜய் டிவிக்கு எப்போதும் தனி இடம் உண்டு.
இந்த டிவியில் ஏற்கனவே பாக்கியலட்சுமி, பாண்டியன்ஸ்டோர்ஸ், பாரதி கண்ணம்மா, ராஜா ராணி ஆகிய சீரியல்கள் ஹிட்டாக ஓடிக்கொண்டிருக்கும் நிலையில், ரசிகர்கள் மத்தியில் எதிர்பார்ப்பை கூட்ட இரு சீரியல்களை ஒன்றினைத்து மகாசங்கமம் என்ற பெயரில் ஒளிபரப்பாகி வருகிறது. இதில் கடந்த இரு வாரங்களுக்கு முன்பு பாக்கியலட்சுமி பாண்டியன் ஸ்டோர்ஸ் மெகாசங்கமம் முடிவடைந்த நிலையில், அடுத்த மகாசங்கமம் விரைவில் ஒளிபரப்பாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
இந்நிலையில் பார்ச் இந்தியா (Barc India) வாரா வாரம் தொலைக்காட்சிகளின் டாப் நிகழ்ச்சிகளின் டிஆர்பி (TRP) விவரங்களை வெளியிட்டு வருகின்றனர். ஆனால் கடந்த சில வாரங்களாக தொலைக்கட்சியின் டாப் நிகழ்ச்சி எது என்ற விவரத்தை மட்டும் வெளியிடாமல் இருந்த நிலையில், மொத்தமாக டிஆர்பியில் தொலைக்காட்சிகளின் விவரத்தை மட்டும் வெளியிட்டு வந்தனர்.
ஆனால் தற்போது விஜய் டிவியில் மக்கள் மத்தியில் அதிக வரவேற்பை பெற்ற சீரியல் எது விஜய் டிவி டிஆர்பியில் முதலிடம் பிடித்த சீரியல் எது என்பது குறித்து தகவல் வெளியாகியுள்ளது. இதில் பாரதி கண்ணம்மா- 13.8, ராஜா ராணி 2- 11.8, பாண்டியன் ஸ்டோர்ஸ், பாக்கியலட்சுமி (மெகா சங்கமம்)- 10.8, பாக்கியலட்சுமி- 10.1 பாண்டியன் ஸ்டோர்ஸ்- 9.1 ஆகிய சீரியல்கள் டாப் 5-ல் இடம்பெற்றுள்ளன. இதில் கடந்த வாரம் முழுவதும் பாரதி கண்ணம்மா சீரியில் பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியது குறிப்பிடத்தக்கது.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil